Dry Fruits Snacks for Kids:நம் குழந்தைகளுக்கு பிடித்தவாரு ஹெல்தியான டேஸ்டியான ஸ்னாக்ஸ் செய்து தருவது அனைத்து அம்மாக்களுக்கும் பிடித்தமான செயல். அதை குழந்தைகள் விரும்பி சுவைக்கும்பொழுது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த மகிழ்ச்சியினை உங்கள் குழந்தைகள் முகத்திலும் அடிக்கடி காண வேண்டுமா ?இந்த ஹெல்தியான ஸ்னாக்சினை நீங்களும் ட்ரை பண்ணுங்க.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

ட்ரை புரூட்ஸ் எனெர்ஜி பார்
- பாதாம் – ¼ கப்
- கடலைப்பருப்பு-1/4 கப்
- நெய்- 2 டே.ஸ்பூன்
- பெருஞ்சீரகம்- 1 டீ.ஸ்பூன்
- ஓமம்- ¼ டீ.ஸ்பூன்
- இஞ்சி பவுடர் -இம்மியளவு
- நாட்டுச்சர்க்கரை – 1கப்
இதையும் படிங்க: முட்டை சேர்க்காத ஆப்பிள் வீட் பான்கேக்ரெசிபி
Dry Fruits Snacks for Kids
செய்முறை
1.பாதாம் மற்றும் கடலைப்பருப்பு போன்றவற்றை தனித்தனியாக இடித்து எடுக்கவும். பொடியாகாமல் பார்த்து கொள்ளவும்.
2.வெல்லத்தை நன்கு பொடியாக பொடித்து எடுக்கவும்.
3.கடாயில் நெய் ஊற்றி இடித்து வைத்த பாதாமை சேர்த்து லேசாக வறுக்கவும்.
4.அதன்பின் கடலை பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.
5.பெருஞ்சீரகம் ஓமம் மற்றும் இஞ்சி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
6.அடுப்பை அணைத்து உடனடியாக வெல்லத்தூள் சேர்க்கவும். நன்றாக கிளறவும்.
7.அகலமான பாத்திரத்தில் நெய் தடவி கலவையினை பரப்பவும்.
8.கலவை ஆறியதும் தேவையான வடிவில் பர்பிகளாக வெட்டவும்.
9.காற்று புகாத டப்பாவில் அடைக்கவும்.
இந்த பர்பிகள் ஒரு வாரத்திற்கு கெடாமல் இருக்கும். கடாய் அடுப்பில் இருக்கும் பொழுது வெல்லம் சேர்க்கக்கூடாது. கலவை மிகவும் பிசுபிசுப்பாக இருந்தால் பேக்கிங் ஷீட்டை கீழே விரித்து அதன் மேலே கலவையினை பரப்பலாம். நட்ஸ்கள் கலந்துள்ளதால் குழந்தைகள் விரும்பும் டேஸ்டியான ஸ்வீட்டாக இருக்கும். புரோடீன்கள் நிறைந்தது மற்றும் குழந்தைகளுக்கு எனெர்ஜி அளிக்கக்கூடியது.
இதையும் படிங்க: குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply