Height and weight chart in Tamil: நம் குழந்தைகள் வயதிற்கேற்ற சரியான எடையுடனும் உயரத்துடனும் இருக்கின்றனரா? என்ற சந்தேகம் நமக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.அதிலும் குறிப்பாக எடை பற்றிய சந்தேகம் எல்லா தாய்மார்களுக்கும் ஏற்படும்.தன் குழந்தை கொழுகொழுவென இருக்க வேண்டும் என்பதே எல்லா அம்மாக்களின் ஆசை.அவ்வாறு இல்லாத பொழுது நாம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றோமா என்ற கவலை ஏற்படுகின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தன் குழந்தை கொழுகொழுவென இல்லையே என்று கவலைபடும் அம்மாக்களுக்கு நான் சொல்லும் மந்திரம் ஒன்றே ஒன்றுதான் .
“குழந்தை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்வரை உடல் எடையை பற்றி கவலை பட தேவையில்லை”
எனக்கு வரும் இ-மெயில்களில் 80%-கும் மேலானவை குழந்தையின் உடல் எடை பற்றியதே.அதிலும் என் குழந்தை சரியான எடையுடன் இருக்கின்றதா என்பதை எப்படி அறிவது?அதற்கான தீர்வு என்ன? என்பதே பெரும்பாலானவர்களின் கேள்வி.குழந்தையின் குண்டான தோற்றத்தை வைத்து ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியாது.இன்னும் சொல்லப்போனால் அதிகப்படியான உடல் எடை பின்னாளில் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமையும்.குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாரியாக கொடுத்தோமானால் எடையை பற்றி கவலைப்பட தேவையே இல்லை.
அதேசமயம் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ற சரியான எடையை தெரிந்துகொள்வதும் அவசியம்.ஏனென்றால் மிகவும் குறைவான எடை மற்றும் அதிகப்படியான எடை இரண்டும் தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்த கூடியவை.தாய்மார்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க காலஅவகாசம் இல்லாததால் உங்களுக்கு தேவையான எடை மற்றும் உயரத்திற்கான சார்ட்டை பற்றி இங்கே விரிவாக எழுதியுள்ளேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள சார்ட் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவை.மேலும் குழந்தைகளுக்கான எடை பற்றிய எளிதான புரிதலுக்காக Pediatric Textbook -ஐ பின்பற்றி எழுதியுள்ளேன்.
Height and weight chart in Tamil:
குழந்தையின் எடை அட்டவணை
குழந்தையின் பிறந்த எடையை மையமாக வைத்து தற்போதுள்ள எடையை கணக்கிடும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வயது | எடை |
௦-3 மாதங்கள் | ஒரு வாரத்திற்கு 175 கிராம் முதல் 210 கிராம் வரை எடை அதிகரிக்கும். |
5 மாதங்கள் | பிறந்த எடையை விட இருமடங்கு அதிகமாக இருக்கும். |
6-12 மாதங்கள் | மாதத்திற்கு 400 கிராம் எடை அதிகரிக்கும். |
1 வயது | பிறந்த எடையை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும். |
2 வயது | பிறந்த எடையை விட 4 மடங்கு அதிகமாக இருக்கும். |
3 வயது | பிறந்த எடையை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும். |
5 வயது | பிறந்த எடையை விட 6 மடங்கு அதிகமாக இருக்கும். |
7 வயது | பிறந்த எடையை விட 7 மடங்கு அதிகமாக இருக்கும். |
10 வயது | பிறந்த எடையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். |
3 முதல் 7 வயது வரை உள்ள குழந்தையின் எடை வருடத்திற்கு சராசரியாக 2 கிலோ அதிகரிக்கும். 7 வயதிற்கு மேல் பருவமெய்தும் வயது வரை சராசரியாக 3 கிலோ அதிகரிக்கும்.
உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எடை மற்றும் உயரத்திற்கான சார்ட்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலானது உலக சுகாதார மையத்தால்(WHO) ஐந்துக்கும் மேற்பட்ட கண்டங்களின் ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.குறிப்பாக தாய்ப்பால் பருகும் குழந்தைகளிடமிருந்து பெறப்பட்டவை.சரியான குழந்தை வளர்ச்சி எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்த தகவல் துரிதமாக விளக்குகின்றது.
குழந்தை வளர்ச்சி சார்ட்டிற்கான விளக்கம்
நீங்கள் சார்ட்டை பார்ப்பதற்கு முன்னால் அதை எப்படி கணக்கிட வேண்டுமென்ற விளக்கத்தை காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சார்ட் 5 சதமானமாக கொடுக்கப்பட்டுள்ளது: 3%,15%,50%,85%,97%.
3-வது விகிதமான வரிசையானது குறைந்த பட்ச வரம்பிற்கான எடை விகிதமாகும்.3%-கும் குறைவான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 3-வது வரிசையின் விகிதத்திற்கும் கீழ் இருப்பர் என புள்ளி விவரம் கூறுகின்றது.
50% குழந்தைகள் 50 வது வரிசையின் கீழ் இடம்பெறுவர்.97- வது விகிதமான வரிசை அதிகபட்ச வரம்பை கூறுகின்றது. சராசரியாக 3% பேர் 97- வது வரிசையின் கீழே இடம்பெறுவர்.3- வது வரிசைக்கும் 97- வது வரிசைக்கும் இடைப்பட்ட வரிசை சராசரியான வளர்ச்சியை குறிப்பதாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைகள் எடுத்துக்காட்டை பார்ப்போம்:
ஒரு பிறந்த பெண் குழந்தையின் எடை 2.7 கிலோகிராம் எனில் அக்குழந்தையானது 15% வரிசையின் கீழ் இடம்பெறும். (அட்டவணையின் எந்த எல்லைக்குள் நமது எடை வருகின்றது என்பதை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்)
1 வயதை கடந்த பின் அக்குழந்தையின் எடை – 7.8 கிலோகிராம்.
விளக்கம்: குழந்தையின் எடையானது 15- வது வரிசையை பின்பற்றினால் அக்குழந்தையின் வளர்ச்சி சாரியாக உள்ளது என்பதை அறியலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சார்ட்டானது உலக சுகாதார நிலையத்தால் கொடுக்கப்பட்டது.
குழந்தையின் வயது மற்றும் எடைக்கான புள்ளியினை குறித்து கோடு வரைந்து அந்த கோடு கொடுக்கப்பட்டுள்ள கோட்டிற்கு அருகில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.எடுத்துக்காட்டாக நான் மேலே குறிப்பிட்டுள்ள பெண் குழந்தைக்கான கோட்டினை வரைந்தால் அது கொடுக்கப்பட்டுள்ள கோட்டிற்கு அருகில் வரவேண்டும்.சிறிது வித்தியாசம் இருந்தால் ஏற்று கொள்ளப்படும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ
எப்பொழுது கவலை கொள்ள வேண்டும்?
முதல் ஒரு வாரம் வரை கவலை கொள்ள தேவையில்லை.மூன்று மாதங்கள் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.சில வைரஸ் தாக்குதல்கலால் குழந்தையின் எடையில் மாற்றம் ஏற்படலாம்.ஆனால் குழந்தைகள் அதை சமாளித்து குறிப்பிட்ட எடை விகிதத்தை எட்டி விடுவர்.
எடுத்துக்காட்டாக நான் மேலே குறிப்பிட்ட குழந்தையின் எடை 1 வயதை அடையும்பொழுது 5.8 கி இருக்குமானால் அக்குழந்தையின் உடல் எடையில் கவனம் செலுத்தி போதுமான சிகிச்சை அளிக்க வேண்டும்.
உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கான அட்டவணை
குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை மற்றும் உயரத்தினை அறிய கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்:
பெண் குழந்தைகளின் எடை – பிறந்தது முதல் 5 வயது வரை
ஆண் குழந்தைகளின் எடை – பிறந்தது முதல் 5 வயது வரை
பெண் குழந்தைகளின் உயரம் – பிறந்தது முதல் 2 வயது வரை
ஆண் குழந்தைகளின் உயரம் – பிறந்தது முதல் 2 வயது வரை
பெண் குழந்தைகளின் உயரம் – 2 முதல் 5 வயது வரை
ஆண் குழந்தைகளின் உயரம் – 2 முதல் 5 வயது வரை
குழந்தையின் எடை குறைவாக இருந்தால் என்ன செய்வது ?
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி குழந்தைகளின் எடை மிக குறைவாக இருக்குமானால் நீங்கள் முதலில் குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.எந்தவிதமான உடல் நல பிரச்சனைகளும் இல்லையென்றால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஊட்டச்சத்தில் மட்டுமே.ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தையென்றால் தாய்ப்பால் அதிக அளவில் கொடுக்க வேண்டும்.ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையென்றால் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிரம்பிய உணவினை கொடுக்க வேண்டும்.துரித உணவுகள் மற்றும் ஐஸ் கிரீம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை காண இங்கே கிளிக் செய்யவும்.
இதையும் படிங்க : குழந்தைகளுக்கான ஈசி கஸ்டர்ட் பழ சாலட்
Leave a Reply