Badam milk:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பால் சார்ந்த பொருட்களில் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைவது வெஜிடேரியன் மில்க்.இதில் பல வகை உள்ளன. ஆனால் அனைவருக்கும் விருப்பமான ஒன்று பாதாம் பால். இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கமுடியும்.அதே நேரம் சுவையும் அபாரமாக இருப்பதால் அனைவரும் விரும்பி பருகும் பானமாக உள்ளது.
பாதாம் ஒரு ஹெல்த்தி ஸ்னாக்ஸ் என்பதால் அதில் தயாரிக்கப்படும் பாலும் சத்துக்கள் நிறைந்தது. கடைகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பாதாம் பால் இன்று கிடைக்கின்றன. ஆனால் அவை அனைத்திலும் ப்ரசர்வேடிவ்ஸ் கலந்துள்ளதால் உடலுக்கு கேடு விளைவிப்பவை. வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால் இயற்கையான பாதாமின் சுவை அப்படியே நமக்கு கிடைக்கும். நீங்கள் விரும்பினால் சீனிக்கு பதிலாக இயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
Homemade Almond Milk Recipe
- பாதாம் – 1 கப்
- டேட்ஸ் -2 (தேவைப்பட்டால்)
- தண்ணீர்- 4 கப்
செய்முறை
- பாதாமை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மறுநாள் பாதாம் தண்ணீரில் மூழ்கி உப்பி இருக்கும். மீதியுள்ள தண்ணீரை வடிகட்டவும். பாதாமை நல்ல தண்ணீரில் 3-4 முறை அலசவும்.
- மிக்ஸி ஜாரில் பாதாம், டேட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
- பாதாமில் இருந்து பால் வெளிவரும் வரை நன்கு அரைக்கவும்.
- முஸ்லின் துணியை பயன்படுத்தி பாலை தனியாக பிழிந்து எடுக்கவும். எஞ்சியுள்ள பாதாமை காயவைத்து பொடி செய்து எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம்.
- உங்களுக்கான சுவையான பாதாம் பால் ரெடி.
- இதனை நீங்கள் பிரிட்ஜ்ல் வைத்து இரண்டு நாள்கள் வரை குடிக்கலாம்.
உங்களுக்கு டேட்ஸ் சேர்க்க விருப்பமில்லையென்றால் பாதாமை மட்டும் தனியாக அரைக்கலாம். பாதாமில் கால்சியம், வைட்டமின்-இ , மெக்னீசியம் போலேட் ஆகியவை உள்ளன. இந்த சத்துக்கள் சிறப்பான மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தேவையான கால்சியம் அனைத்தையும் இந்த பானம் கொடுக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு நட்ஸ்-ஐ நீங்கள் வேறு வழிகளில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நட்ஸ் பவுடரை பாலில் கலந்தும் வேறு விதமான ரெசிபிகளில் கலந்தும் கொடுக்கலாம் . பிரெஷாக தயாரித்து உங்கள் வீடுகளுக்கே தேடிவந்து தருகிறோம்.
இது போன்ற எளிமையான குழந்தைகளுக்கு தேவையான ரெசிபிகளை இந்த லிட்டில் மொப்பெட்பிளாகில் நீங்கள் காணலாம்.மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply