Homemade Holi Color Powder Recipe
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஹோலி என்பது வடநாட்டில் மட்டுமே பிரசித்தியாக கொண்டாடப்படும் விழா என்பதால் பள்ளி படிப்பு முடிக்கும் வரை ஹோலியை பற்றிய அனுபவமே எனக்கு கிடையாது .நான் மருத்துவ கல்லாரியில் நுழைந்த பிறகே வட இந்திய நண்பர்களின் வாயிலாக ஹோலி பண்டிகையை பற்றி அறிந்து கொண்டேன். அவர்கள் வித விதமான பொடிகளை முகங்களில் பூசிக்கொண்டு விளையாடுவதை பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கும். நான் திருமணத்திற்கு பிறகு ராய்ப்பூர் சென்றபோது அங்கே ஹோலி இன்னும் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது.
தெருவெங்கிலும் ஒரே வண்ணமையமாய் மக்கள் விளையாடுவதை பார்க்கவே குதூகலமாக இருக்கும். என்னுடைய குழந்தைகளுக்கும் ஆட்டமும் பாட்டமுமாய் அன்றைய ஹோலியை நன்றாய் கொண்டாடினர். ஆனால், அதற்கு மறுநாள் எனது மகனின் தோள் புறத்தில் சிறிது சிறிதாக தடிப்பு ஏற்பட்டிருந்தது. ரசாயனம் கலந்து கலர் பொடியை உபயோகப்படுத்தியதால் வந்த தடிப்புதான் அது .அப்பொழுதான் நான் ரசாயனம் கலக்காத மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய கலர் பொடிகளை பற்றி ஆராய தொடங்கினேன். இதோ அந்த ரெசிபியை உங்களோடும் பகிர்கிறேன்.
7 Eco Friendly Homemade Holi Color Powder Recipe
7 விதமான நிறங்களுக்கான ஹோம் மேட் ஹோலி பவுடர் செய்முறை
பொதுவாக கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் உணவு பொருளுக்கு பயன்படுத்தும் நிறங்களை சேர்க்கலாம். ஆனால், அதிலும் தற்போது ரசாயன பொருள்கள் கலக்கப்படுவதால் இயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது.
1.சிகப்பு நிற ஹோலி பவுடர் ரெசிபி
இந்தியாவில் சிகப்பு நிறமானது உணர்வு பூர்வமான நிறமாக மதிக்கபடுகிறது.திருமணத்தின் போதும் குழந்தை பிறப்பின் போதும் சிகப்பு நிறமே உபயோகிக்கப்படுகிறது. முக்கியமாக சிகப்பு நிறமான குங்குமத்தையே பெண்கள் தலை உச்சியில் இட்டு கொள்கின்றனர்.
உலர்ந்த சிகப்பு நிற ஹோலி கலரை வீட்டில் செய்வது எப்படி?
1.சிகப்பு நிற ரோஜா இதழ்களை நன்கு காய வைக்கவும். நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் இதழ்களை அரைக்கவும்.
- சிகப்பு சந்தன பவுடர் அல்லது ரத்தசந்தன் பவுடரை ஹோலி பவுடராக உபயோகிக்கலாம். இது குழந்தைகளின் சருமத்திற்கு மிகவும் நல்லது
- செம்பருத்தி பூக்களை நிழலில் காயவைத்து மிக்சியில் பொடியாக்கி உபயோகிக்கலாம்.
லிக்விட் சிகப்பு நிற ஹோலி கலரை வீட்டில் செய்வது எப்படி?
1.சிகப்புசந்தன பவுடரை நீரில் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்
2.ஒரு சிட்டிகை சுண்ணாம்பு தூளுடன் மஞ்சள் தூள் சேர்த்து 1 கப் தண்ணீருடன் நன்றாக கரைக்கவும். பின்பு கலவையை தேவையான அளவு நீர்த்து கொள்ளவும்.
2.ஆரஞ்சு கலர் ஹோலி பவுடர் ரெசிபி
ஆரஞ்சு நிறம் நெருப்பின் நிறமாக கருதப்படுகிறது. தான் விழுங்கும் அனைத்தையும் இரையாக்கி தூய்மையாக்கும் சக்தி ஆரஞ்சு நிறமான நெருப்பிற்கு இருப்பதால் இது தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிறது.
உலர்ந்த ஆரஞ்சு நிற ஹோலி கலரை வீட்டில் செய்வது எப்படி?
1.தேசு பிளவரை காய வைத்து அரைத்து மாவுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
லிக்விட் ஆரஞ்சு நிற ஹோலி கலரை வீட்டில் செய்வது எப்படி?
1.தேசு பூவை இரவு முழுவதும் ஊற வைத்து வேகவைத்தால் ஆரஞ்சு நிற தண்ணீர் கிடைக்கும்.
2.மருதாணி பவுடரை தண்ணீருடன் கலந்தால் ஆரஞ்சு நிற ஹோலி நீர் ரெடி.
3.சிறுதளவு குங்குமப்பூ இதழ்களை இரவு ழுழுவதும் நீரில் ஊற வைத்து தண்ணீரில் கலக்கலாம்
3.பச்சை கலர் ஹோலி பவுடர் ரெசிபி
பார்த்தவுடனே மனதிற்கு உற்சாகத்தை அளித்து மகிழ்ச்சியை பரப்பும் சிறப்பு பச்சை நிறத்திற்கு உண்டு.
உலர்ந்த பச்சை நிற ஹோலி கலரை வீட்டில் செய்வது எப்படி?
1.சுத்தமான மருதாணி பவுடரை மாவுடன் சமமாக சேர்த்து அரைக்கவும்.
லிக்விட் பச்சை நிற ஹோலி கலரை வீட்டில் செய்வது எப்படி?
1.நல்ல தரமான வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க விட்டு ஆற வைத்தால் பச்சை நிற ஹோலி தண்ணீர் ரெடி.
4.மஞ்சள் கலர் ஹோலி பவுடர் ரெசிபி
அறிவையும் கற்றலையும் குறிக்கும் நிறம் மங்களகரமான நிறமாகவும் கருதப்படுகிறது
உலர்ந்த மஞ்சள் நிற ஹோலி கலரை வீட்டில் செய்வது எப்படி?
எல்லா ரெசிபிக்களை காட்டிலும் இது மிகவும் எளிதான ஒன்று. 2 பங்கு மஞ்சள் தூளை 4 பங்கு கடலை மாவுடன் கலக்க வேண்டும். மஞ்சள் நிற ஹோலி கலர் ரெடி.
லிக்விட் மஞ்சள் நிற ஹோலி கலரை வீட்டில் செய்வது எப்படி?
மஞ்சளை தண்ணீருடன் கலக்கலாம் அல்லது செவ்வந்தி பூ மற்றும் காசாம்பூவினை தண்ணீருடன் கொதிக்க விடலாம்.
5.நீலநிற ஹோலி பவுடர் ரெசிபி
தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் குறிக்கும் நிறம் நீலம். ஹிந்து புராண கடவுள்களான ராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் நீல நிறத்தில் அவதரித்து எதிரிகளை வதம் செய்ததாக நம்பிக்கை உண்டு.
உலர்ந்த நீல நிற ஹோலி கலரை வீட்டில் செய்வது எப்படி?
கோடை காலத்தில் கிடைக்கும் நீலி குல்மோஹார் மலர்களை காய வைத்து அரைத்து பொடி செய்யலாம்.
6.பர்பிள் கலர் ஹோலி பவுடர் ரெசிபி
பீட்ரூட்டை வைத்து நீங்கள் எளிமையாக இந்த ரெசிபியை செய்யலாம். 1 கிலோ முதல் 2 கிலோ வரையிலான பீட்ரூட்டை தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும். 5- 6 விசில் வரும் வரை காத்திருக்கவும். பின்பு தேவைக்கேற்றவாறு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். குறிப்பு-உபயோகப்படுத்துவதற்கு நேரமாகுமெனில் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதே சிறந்தது.
7.பிரௌன் கலர் ஹோலி பவுடர் ரெசிபி
கருப்பு நிறத்திற்கு மாறாக பிரவுன் கலரை உபயோகப்படுத்தலாம்.கருப்பு நிறத்தை அமங்கலமாக கருதுவோர்க்கு இந்த நிறம் மாற்றாக அமையும். 4 பங்கு மருதாணி பொடியை 2 பங்கு ஆம்லா பவுடருடன் சேர்த்து தண்ணீருடன் கலக்கவும்.
கவனிக்க வேண்டியவை
1.குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யவும்.
2.குழந்தைகள் தவறுதலாக கலரை வாயில் வைத்து விட்டால் உடனடியாக மருத்துவரிடம் அளித்து செல்லவும்.
3.எல்லா நிறங்களும் காய்கறி மற்றும் பூக்களிலிருந்து எடுக்கப்படுவதால் விரைவில் கெட்டுவிடும். எனவே, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
7 Eco Friendly Homemade Holi Color Powder Recipe
Leave a Reply