Homemade Protein Powder for Babies: வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீனின் அவசியம் என்பது இன்றியமையாத ஒன்று.உடலின் தசைகள்,எலும்புகள் மற்றும் மூளை வளர்ச்சி என்ற அனைத்து அடிப்படை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த புரோட்டின் குழந்தைகளுக்கு கிடைக்க செய்வதில் கவனம் கொள்ள வேண்டும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் அன்றாடம் உண்ணும் உணவினில் புரோட்டின் அதிகமுள்ள உணவு பொருட்களை இடம்பெற செய்ய வேண்டும். புரோட்டின் பெரும்பாலும் மாமிசம் மற்றும் பருப்புகளில் நிறைந்திருப்பதால் தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பது என்பது கடினமான ஒன்றுதான்.எனில் குழந்தைகளுக்கு தினமும் கிடைக்க செய்வது எப்படி என்று யோசிக்கின்றீர்களா? அதற்குத்தான் இந்த ஹோம் மேட் புரோட்டின் பவுடர்.இதனை நாம் வீட்டில் செய்து வைத்து கொண்டால் குழந்தைகளுக்கு தினமும் பாலில் கலந்து கொடுக்கலாம்.
சத்தான ஹோம்மேட் புரோட்டீன் பவுடர்
- நிலக்கடலை – 1/4 கப்
- முளைகட்டிய கோதுமை மாவு – 1 கப்
- பாதாம் – 1/4 கப்
- சோயா மில்க் பவுடர் -1/4 கப்
இதையும் படிங்க: இன்ஸ்டன்ட் சப்பாத்தி லட்டு
Homemade Protein Powder for Babies:
செய்முறை
1.வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் நல்ல மணம் வரும்வரை முளைகட்டிய கோதுமை மாவை வறுக்கவும்.
2.பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து தோலை நீக்கவும்.வாணலியில் லேசாக வறுக்கவும்.
3.நிலக்கடலையினை வாணலியில் போட்டு வறுக்கவும்.
4.வறுத்தவற்றை ஆற விடவும்.
5.மிக்சி ஜாரில் நைசாக அரைக்கவும்.
6.அதனுடன் சோயாமில்க் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
7.இன்ஸ்டன்ட் புரோட்டீன் பவுடர் ரெடி.
இதையும் படிங்க: கேரட் அவல் பாயாசம்
புரோட்டின் மிக்ஸ் ட்ரின்க் செய்வது எப்படி ?
- ஒரு டே.ஸ்பூன் பவுடருடன் 1 கப் சூடான தண்ணீர் சேர்க்கவும்.
- நன்றாக கலக்கவும்.
- ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம்.
- தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை மற்றும் கோகோ பவுடர் சேர்த்து கொள்ளலாம்.
- இதமாக பரிமாறவும்.
ஹோம் மேட் புரோட்டின் பவுடரை பத்து மாதத்திலிருந்து கஞ்சியாக கொடுக்கலாம்.ஒரு வயதிற்கு மேலே குழந்தைகளுக்கு பாலுடன் கலந்து கொடுக்கலாம்.கடைகளில் விற்கப்படும் ப்ரெசெர்வேட்டிவ்ஸ் கலந்த பவுடர்களுக்கு பதிலாக ஹோம் மேட் புரோட்டீன் பவுடரே சிறந்தது.இதனை தினமும் பாலில் கலந்து கொடுப்பதால் குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்கின்றது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply