How to Sterilize baby feeding vessels:குழந்தைகளுக்கு திட உணவு முதல் முதலாக அளிக்கும் பொழுது அவர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களில் எந்த அளவிற்கு கவனம் கொள்கின்றோமோ அதே போன்று சுகாதாரத்தில் கவனம் கொள்வது அவசியம்.ஆம் அவரக்ளுக்கு உணவளிக்கும் பாத்திரம் மற்றும் உணவு தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தமாக கையாளவேண்டும். குழந்தைகளுக்கு உணவளிக்க மற்றும் உணவூட்டுவதற்கு பிளாஸ்டிக் பாத்திரங்களை தவிர்த்து ஸ்டீல் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதே சிறந்தது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
How to Sterilize baby feeding vessels:
சுத்தம் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- குழந்தைகளின் பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொழுது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுவது நன்று.
- குழந்தைகளுக்கு உபயோகப்படுத்த பாத்திரங்களை நன்றாக உலர்த்தி காற்று புகாத பைகளில் அடைத்து வைக்க வேண்டும்.பூச்சி போன்றவை பாத்திரங்களை அண்டாது.
- ஈரமான பாத்திரங்களை துடைப்பதற்கு சுத்தமான துணிகளை உபயோகப்படுத்த வேண்டும்.
- குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்களை வீட்டிலுள்ள மற்றவர்கள் உபயோகிக்கக்கூடாது.
- பாத்திரங்களை நன்கு கொதிக்க வைத்திருந்தாலும் உபயோகப்படுத்தும் முன்பு ஒருமுறை கழுவி உபயோகப்படுத்த வேண்டும்.
- குழந்தைகளுக்கான பாத்திரங்களை கழுவும் பொழுது அதிக வீரியமுள்ள பவுடரினை உபயோகிக்கக்கூடாது.
- குழந்தைகளுக்கான பாத்திரங்களை உபயோகிக்கும் பொழுது நம் கைகளை நன்றாக கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: 6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்
குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் பாத்திரங்களை சுத்திகரிப்பது எப்படி?
1.கைப்பிடியுள்ள அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
2.சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரினை நிரப்பி கொதிக்கவிட வேண்டும்.
3.குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் கப்,கிண்ணம்,ஸ்பூன் போன்றவற்றை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடியினால் மூட வேண்டும்.
4.பத்து நிமிடங்கள் காத்திருக்கவும்.
5.பத்து நிமிடங்கள் கழித்து பாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாக கவனமாக எடுக்கவும்.
6.காய்கறி மற்றும் பழங்களை அரைப்பதற்கு மிக்சி ஜாரினை உபயோகித்தால் அதனையும் சுத்திகரிப்பது அவசியம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply