வீட்டில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ்
பயணங்களில், ஹோட்டலில் கிடைக்கும் உணவுகளை நாம் சாப்பிடலாம். ஆனால், அதே உணவுகளைக் குழந்தைக்குக் கொடுக்க முடியுமா? நிச்சயம் முடியாது… இந்தச் சமயங்களில் நமக்கு பெரிதும் கைகொடுக்கும் உணவுகள் இன்ஸ்டன்ட் மிக்ஸ். இதையே கடையில் வாங்கினால், அதில் என்ன கெமிக்கல்ஸ் கலந்திருக்குமோ என அச்சம் ஏற்படும். அதையே பாதுகாப்பான முறையில் நீங்கள் செய்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு இதைத் தைரியமாகக் கொடுக்க முடியும்தானே.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆரோக்கியத்தைத் தந்து உங்களின் அவசர தேவைக்கும் உதவும் இந்த இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸை எப்படிச் செய்வது எனப் பார்க்கலாமா…
கிச்சடி மிக்ஸ் செய்ய, குறைவான நேரமே தேவைப்படும். அதுவும் இந்த கிச்சடி மிக்ஸை நீங்கள் சமைக்காமலே பயன்படுத்தலாம். இதை தயாரிக்கும் முறையும் வெகு சுலபம்தான்.
பயணத்தின் போது இதில் சிறிது வெந்நீரை கலந்தால் போதும். உங்கள் குழந்தைக்கான உணவுத் தயாராகிவிடும். பாதுகாப்பான, ஆரோக்கியம் நிறைந்த உணவு, உடனடியாக ரெடியாகிவிடும்.
இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் ரெசிப்பி
தேவையானவை :
- அரிசி – 40 கிராம்
- பாசிப்பருப்பு – 20 கிராம்
- மிளகு – 4 முதல் 5 (சுவைக்கேற்ப)
- சீரகம் – கால் டீஸ்பூன்
- பெருங்காயம்- ஒரு சிட்டிகை (தேவையெனில்)
செய்முறை :
1. அரிசி மற்றும் பாசிப்பருப்பை எடுத்து, நன்றாகக் கழுவிய பின் அவற்றை வெயிலில் காய வைக்கவும்.
2. வாணலியில் அரிசியைச் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அரிசியின் நிறம் மாறி மினுமினுப்பாகும் வரை அரிசியை வறுக்கவும். அதாவது, படத்தில் உள்ளது போல நன்றாகப் பொரிந்து வரும் வரை வறுக்கவும்.
3. பின்னர், பாசிப் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைக் கலந்து
நன்றாக வறுக்கவும்.
4. பின், ஆறவைத்து இவற்றைப் பொடியாக்கி கொள்ளுங்கள். இந்தப் பொடியை நன்றாக சல்லடையில் சலித்து எடுத்துகொள்ளவும்.
5. இதைக் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து, மிதமான அல்லது குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும்.
குழந்தைகளுக்கு இன்ஸ்டன்ட் கிச்சடியைச் செய்வது எப்படி ?
1. நான்கு டேபிள்ஸ்பூன் இன்ஸ்டன்ட் மிக்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். தேவையைப் பொறுத்து நீங்கள் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.
2. 100 மில்லி அளவு தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். அதை இன்ஸ்டன்ட் பொடியில் கொட்டி, மூடிப்போட்டு ஐந்து நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.
3. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இதனை கட்டி இல்லாமல் நன்றாகக் கிளறிக்கொள்ளவும். சுவைக்காக சிறிதளவு நெய்யைச் சேர்த்துக்கொள்ளலாம்.
அவ்வளவுதான். சுவைமிக்க ஆரோக்கியமுள்ள இன்ஸ்டன்ட் கிச்சடி தயார்…
இதில் மாவுச்சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளதால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதில் உள்ள மிளகு, சீரகம் குழந்தையின் செரிமானத்துக்கு உதவும்.
இந்த ஈஸி, ஹெல்த்தி உணவைச் செய்து பாருங்கள்… குழந்தைக்குக் கொடுங்கள்…
வீட்டில் இதைச் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லையா? கவலையே வேண்டாம்.
எங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் வாங்கி பயன்படுத்துங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply