Instant Pori kanji for babies:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி
இந்த இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சியை 7-வது மாத குழந்தைகளிடமிருந்து கொடுக்கத் தொடங்கலாம். இதுவும் பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு.
வீட்டிலே இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி?
தேவையானவை
- அரிசி பொரி – 100 கி
- பொட்டுக்கடலை (வறுகடலை) – 30 கி
- தோல் நீக்கிய, வறுத்த கடலையாக இருக்க வேண்டும்.
செய்முறை
- அரிசி பொரியை பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
- அதுபோல வறுகடலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
- அரைத்த இரண்டு பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
- உலர்ந்த, காற்று புகாத டப்பாவில் இதைச் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து, வெந்நீரில் கலக்கி கொடுத்தாலே போதுமானது.
100 கிராமில் உள்ள ஊட்டச்சத்துகள்
கலோரிகள் 335
புரதம் 10.96 g
இரும்புச்சத்து 7.26 mg
கரோட்டீன் 26 μg
இதுபோன்ற எளிமையான, குறைந்த பொருட்களில் செய்யகூடிய ஈஸி இன்ஸ்டன்ட் பொடி மிக்ஸ், பயணத்துக்குத் தேவைப்படுகின்ற சிம்பிள் ரெசிபிகள் அனைத்தையும் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் மற்ற கஞ்சி வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply