இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் ரெசிபி
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைக்கு ஊட்டம் தரும் உணவுகளைக் கொடுப்பது நல்லது. அதில் மிகவும் சத்துள்ள உணவு கேழ்வரகு. இந்த கேழ்வரகை, கஞ்சியாக கொடுத்தால் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கும். இதை இன்ஸ்டன்ட் மிக்ஸாக நாம் ரெடி செய்து வைத்துக்கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும். மேலும் நீங்கள் பயணம் செய்யும் காலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவாக இது அமையும்.
வீட்டிலேயே இன்ஸ்டன்ட்கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி?
தேவையானவை :
- வறுத்த கேழ்வரகு பொடி – 100 கிராம்
- வறுத்த பொட்டுக்கடலை பொடி – 50 கிராம்
செய்முறை :
1. இரண்டு பொடி வகைகளையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
2. இவற்றைக் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
நீங்கள் குழந்தைக்கு உணவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் பொடியை எடுத்து அதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இனிப்பு சுவை தேவையெனில் பழக் கூழையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற முறையில் நீங்கள் மற்ற இன்ஸ்டன்ட் வகை உணவுகளையும் தயார் செய்து கொள்ளலாம்.
100 கிராம் உணவில் உள்ள சத்துகள் :
கலோரிகள் – 341
புரதச்சத்து – 12.36 கிராம்
இரும்பு சத்து – 5.76 கிராம்
கெரட்டின் – 65.66 மைக்ரோ கிராம்
பலன்கள்:
- இரும்பு சத்து நிறைவாக உள்ளதால், குழந்தைக்கு ரத்தசோகை பிரச்னை வராமல் தடுக்கப்படும்.
- ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.
- அசிட்டிக் இல்லாதது.
- சுலபமாக செரிமானம் ஆகும்.
- மலச்சிக்கல் பிரச்னையும் வராது.
- நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
- கேழ்வரகு பொடி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரெட் வகையைச் சார்ந்தது. இதனால், மிக மெதுவாக ரத்தத்தில் குளுக்கோஸ் சேரும் என்பதால் நீண்ட நேரத்துக்கு குழந்தைக்கு பசிக்காது.
கஞ்சி செய்வதற்கான இன்ஸ்டன்ட் பொடியை வீட்டில் தயாரிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லையா..? கவலை வேண்டாம்… . சத்தான முறையில் தயாரிக்கப்பட்ட பொடி வகைகள் உங்கள் குழந்தைக்கு போதிய போஷாக்கை வழங்கும் வகையில் தயாரித்து தருகிறோம்…
பயணங்களின் போது குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு ஏற்ற உணவு வகை இது.
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
மேலும் இதுதொடர்பான பயண ரெசிப்பிகள் தேவையெனில் எங்களின் வலைப்பக்கத்தில் பாருங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply