Javvarisi Vadai: நம்மில் பலருக்கு பிடித்த மாலை நேர சிற்றுண்டி என்றால் அது வடை மற்றும் பஜ்ஜி தான். தெருக்கடையில் டீ குடித்துக்கொண்டே வடையினையும் சேர்த்து சுவைப்பது என்பது நம் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் ஒன்று.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது கடைகளில் வாங்கி கொடுப்பதை விட வீட்டில் நம் கையாலேயே செய்து கொடுக்கதான் விரும்புவோம். ஏனென்றால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எண்ணெயில் நம் கையால் சமைத்து கொடுத்த திருப்தி இருக்கும்.
வடை என்றாலே நம் வீடுகளில் பருப்பு வடை ,உளுந்த வடை மற்றும் பஜ்ஜி ஆகியவற்றை செய்துதான் வழக்கம். இன்று நாம் பார்க்கவிருக்கும் வடை ரெசிபியானது சற்றே வித்தியாசமான ஜவ்வரிசி வடை. ஜவ்வரிசியில் ஏராளமான நன்மைகள் இருப்பதால் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டியாக இது இருக்கும்.
Javvarisi Vadai:
ஜவ்வரிசி உண்பதால் ஏற்படும் நன்மைகள்
1.ஜவ்வரிசி வயிற்று புண் எனப்படும் அல்சரை குணமாக்க வல்லது.
2.ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகமுள்ளது.
3.குழந்தைகள் விளையாட தேவையான எனெர்ஜியை அளிக்க வல்லது.
4.ரத்தசோகை குணமாக்க வல்லது.
5.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
6.ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
7.ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவலிக்கிறது.
8.ஜவ்வரிசியில் புரதம் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கின்றது.
9.ஜவ்வரிசியில் உள்ள புரதம் தசைகளுக்கு வலுவூட்டவும் மேலும் செல்களை புதுப்பிக்கவும் உதவும்.
10.ஜவ்வரிசியில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன.
Javvarisi Vadai:
• ஜவ்வரிசி- ஒரு கப்
• வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
• ரவை -கால் கப்
• தயிர் -3 டீ.ஸ்பூன்
• கரம் மசாலா- 1 டீ.ஸ்பூன்
• சீரகம் -1 டீ.ஸ்பூன்
• எண்ணெய்- தேவையான அளவு
• இஞ்சி- 1/2 டீஸ்பூன் (துருவியது)
• பச்சை மிளகாய் – ௧(நறுக்கியது )
• கொத்தமல்லி இலைகள் மற்றும் கருவேப்பில்லை.
Javvarisi Vadai:
செய்முறை
1. ஜவ்வரிசியினை தயிரில் நாலு முதல் 5 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் மெதுவாகும் வரை ஊற வைக்கவும்.
2. ஒரு பவுலில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து மாவு பதத்திற்கு வருமாறு பிசையவும்.
3. சிறு உருண்டையாக பிசைந்து வடை போன்று தட்டவும்.
4. ஒரு பானில் எண்ணெயை எடுத்துக்கொண்டு வடையினை பொன்னிறமாகும் வரை பொறுத்து எடுக்கவும்.
5. ஒரு பேப்பரில் எண்ணெய் போகும் வரை வைக்கவும்.
6. குழந்தைகளுக்கு பரிமாறவும்.
ஜவ்வரிசி வடையானது சுவை மிக்கது தான் என்றாலும் குழந்தைகளுக்கு எண்ணெயில் பொறித்த உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லதல்ல. எனவே, வாரம் ஒரு முறை குழந்தைகள் எப்பொழுதாவது விரும்பும் பொழுது இதனை செய்து கொடுப்பதே நல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை
1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு ஜவ்வரிசி கொடுக்கலாமா?
ஆறு மாத காலம் முடிந்தவுடன் ஜவ்வரிசியை ஊறவைத்து கஞ்சி போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஜவ்வரிசி வடை குழந்தைகளுக்கு எப்பொழுது கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஒரு வயது முடிவடைந்த உடன் இந்த ஜவ்வரிசி வடையினை முதலில் சிறிது கொடுக்க ஆரம்பித்து சரிபார்த்த பின்பு ஒன்று கொடுக்கலாம்.
ஜவ்வரிசி குழந்தைகளுக்கு செரிமானம் ஆகுமா?
ஜவ்வரிசி, அரிசி உணவினை போன்றே எளிதில் செரிமானமாக கூடியது.
ஜவ்வரிசி வடை
Ingredients
- ஜவ்வரிசி- ஒருகப்
- வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
- ரவை -கால் கப்
- தயிர் -3 டீ.ஸ்பூன்
- கரம் மசாலா-1 டீ.ஸ்பூன்
- சீரகம் -1 டீ.ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- இஞ்சி- 1/2 டீ.ஸ்பூன் (துருவியது)
- பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது )
- கொத்தமல்லிஇலைகள் மற்றும் கருவேப்பில்லை
Notes
- ஜவ்வரிசியினை தயிரில் நாலு முதல் 5 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் மெதுவாகும் வரை ஊற வைக்கவும்.
- ஒரு பவுலில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து மாவு பதத்திற்கு வருமாறு பிசையவும்.
- சிறு உருண்டையாக பிசைந்து வடை போன்று தட்டவும்.
- ஒரு பானில் எண்ணெயை எடுத்துக்கொண்டு வடையினை பொன்னிறமாகும் வரை பொறுத்து எடுக்கவும்.
- ஒரு பேப்பரில் எண்ணெய் போகும் வரை வைக்கவும்.
- குழந்தைகளுக்கு பரிமாறவும்.
Leave a Reply