Kan mai(kajal) seivathu eppadi?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நம் நாட்டு பெண்களின் அழகு சாதன பட்டியலில் நீங்கா இடம் பிடிப்பது கண்மை.பார்வையாலே கவி பாடும் கண்களுக்கு மேலும் அழகு சேர்ப்பது இந்த கண்மை.அதனாலேயே “கண்ணுக்கு மை அழகு ” என்று கவிஞர்களின் வர்ணனையிலும் இதற்கு தனி இடம் உண்டு.
சரி கண்களுக்கு அழகு சேர்க்கும் மை கண்டிப்பாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா! ஏனெனில் கண் மிகவும் முக்கியமான உறுப்பு. ஆனால் இப்பொழுது கடைகளில் வகை வகையான கண்மைகள் உலா வருகின்றன.அவற்றில் லெட்,சார்க்கோல்,சில்வர் நைட்ரேட் போன்ற ரசாயனங்கள் மற்றும் பல செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன.
இவை கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உண்டு.எனவே நாம் வீட்டிலேயே இயற்கையான கண்மை தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
Kan mai(kajal) seivathu eppadi?
தேவையானவை
- சந்தன பவுடர்- 2 டே.ஸ்பூன்
- முஸ்லின் துணி
- நெய்
- பாதாம் 3-4
- போஃர்க்
- ஸ்பூன்
- தீப்பெட்டி
- அகல்விளக்கு
Kan mai(kajal) seivathu eppadi?
செய்முறை
1.சந்தன பவுடரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும்வரை கலக்கவும்.
2.பேஸ்டை முஸ்லின் துணியில் தடவி காய வைக்கவும்.
3.துணியை விளக்கு திரி போல் சுருட்டவும்.
4.திரியை அகல் விளக்கில் வைத்து நெய் ஊற்றவும்.
5.விளக்கை ஏற்றவும்.
6.பாதாமை போஃ ர்க்கில் சொருகவும்.பாதாம் சொருகிய போஃர்க்கை தீயில் காட்டவும்.
7.போஃ ர்க்கிற்கு சரியாக ஒரு சென்டி மீட்டர் மேலே ஸ்பூனை வைக்கவும்.
8.கரண்டியில் ஒட்டியிருக்கும் கரியை சேகரித்தால் அதுவே கண்மை.
9.இதை மற்றொருமுறையிலும் செய்யலாம். இரண்டு டம்ளர்களை வைத்து அதன் மேல் தட்டை தலைகீழாக வைக்கவும்.
10.தட்டிற்கு கீழே விளக்கை வைத்து பாதாமை எரிக்கவும்.
11.கரியை எடுத்து சிறு டப்பாவில் சேகரிக்கவும்.
12.விரலில் சிறிதளவு நெய்யினை தொட்டு மையிடலாம்.
வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ப்ரசர்வேடிவ்ஸ் கலக்காத கண்மை கண்களுக்கு அழகு சேர்ப்பதோடல்லாமல் கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் தூசி மற்றும் துரும்புகள் கண்ணில் படுவதை தடுத்து கண்ணிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
Leave a Reply