Kulanthaiklaukku Mottai Adippathu Ethanal?:குழந்தை பிறந்ததும் ஒரு வருடத்திற்குள் மொட்டை போடவேண்டுமென்பது நமது பாரம்பரிய வழக்கங்களுள் ஒன்று.உறவினர்கள் அனைவரும் அழைத்து விருந்தளித்து குழந்தைகளுக்கு மொட்டை எடுப்பது நம் சம்பிரதாயமாக கருதப்படுகின்றது.மொட்டையுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு காது குத்தும் வழக்கமும் பல இடங்களுள் உண்டு.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாக அவரவர் குலதெய்வ கோவில்களில் முதல் முறையாக மொட்டை எடுப்பது வழக்கம்.பல இடங்களில் மொட்டை எடுக்காமல் இருப்பது தெய்வ குத்தமாகவும் கருதப்படுகின்றது. ஆனால் மொட்டை எடுப்பதில் பின்னணியில் மிகப்பெரிய அறிவியல் தத்துவத்தை மறைத்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
குழந்தைகளுக்கு மொட்டை போடுவது எதனால் ?
இதையும் படிங்க: காய்ச்சலுக்கான எளிய வீட்டு வைத்தியங்கள்
மொட்டை எடுப்பதில் அறிவியல் பின்னணி ?
குழந்தைகள் அம்மாவின் கருவறையில் பத்து மாத காலம் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.ஆனால் அந்த காலகட்டத்தில் குழந்தைகள் எந்த விதமான சூழலில் இருப்பார்கள் என்று தெரியுமா ?கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை கலந்த தண்ணீர்தான் குழந்தைகளை சுற்றி இருக்கும்.
இந்த தண்ணீரில்தான் குழந்தையின் உடல் முழுவதும் ஊறிப்போயிருக்கும்.சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தாலே கை கழுவிய பிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10 மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல் எந்தளவு ஊறியிருக்கும்.
ஆம் ! குழந்தையின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அந்த தண்ணீரில்தான் மூழ்கிப்போயிருக்கும்.உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறுவது எளிது.ஆனால் மயிர்க்கால்களில் தேங்கியிருக்கும் கழிவுகள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறாது.அதற்காகத்தான் இந்த மொட்டை எடுக்கும் சடங்கு.
இதையும் படிங்க: கேரட் அவல் பாயாசம்
மொட்டை எடுக்கும்பொழுது மயிர்க்கால்களில் வேர்கள் வழியாக கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.இது தான் உண்மையான காரணம். ஆனால் இப்படி கூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும் கேட்பர்.
அதற்கு ஏன் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும்.விரைவில் எடுக்கலாமே என்று சிலர் யோசிப்பதுண்டு ?குழந்தையின் தலை பகுதியானது மிகவும் இலகுவாக இருக்கும்.அதிலுள்ள உச்சிக்குழி மிகவும் மென்மையாக இருக்கும்.குழந்தையின் தலை பகுதியானது மொட்டைக்கு தயாராக ஒரு வருட காலமாவது வேண்டும்.அதற்கு தான் நம் முன்னோர்கள் ஒரு வருட காலத்திற்குள் மொட்டை எடுப்பர்.
சில குழந்தைகளுக்கு அதற்கு அடுத்ததாக மூன்று மொட்டை முதல் ஏழு மொட்டை வரை எடுப்பதுண்டு.ஆண்கள் கடைசி வரை மொட்டை எடுப்பது நம் ஊர்களில் வழக்கம்.மொட்டை எடுப்பதில் பின்னணியில் இவ்வளவு நன்மைகளா என்று நம்மையே மலைக்க வைக்கின்றதல்லவா? நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின் ஒரு அறிவியல் பின்னணி இருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply