Home Remedy for Cough/ Irumal in Babies:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எந்த பெற்றோருக்கும் தன் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கண்டால் பொறுத்துக் கொள்ள முடியாது. அது சின்ன உடல்நல தொந்தரவாக இருந்தாலும் அதைப் போக்கவே முயற்சி செய்வர். அதுவும் குழந்தைகளுக்கு வரும் வறட்டு இருமலைக் கண்டாலே பயம்தான்.
சிறு குழந்தைகளுக்கு வருகின்ற வறட்டு இருமலால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். தொண்டை உலர்வது, எரிவது போன்ற தொல்லைகளால் அழுதுக்கொண்டே இருப்பார்கள். பாவம், இந்த குழந்தைகளுக்கு தனக்கு என்ன பிரச்னை என்றும் சொல்ல தெரியாது. இருமிக்கொண்டே இருப்பார்கள். அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாடிரிக்ஸ் சொல்கிறது, “வறட்டு இருமலுக்கான மருந்துகள், வறட்டு இருமலைவிட மோசமானது. அதுவும் 6 வயதுக்கு உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்துகளைப் பரிந்துரை செய்ய கூடாது” என்கிறது.
இந்த வறட்டு இருமலுக்கு என்ன தான் வழி என்கிறீர்களா? நிச்சயம் வழி இருக்கிறது. நம் வீட்டு மருத்துவத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு வரும் வறட்டு இருமலைப் போக்கலாம்.
இருமல் என்பது உடலின் இயற்கையான நிகழ்வு. காற்றை வெளியே தள்ளி, மூக்கில் உள்ள அடைப்புகளை வெளியேற்றும் ஒரு அனிச்சை செயல். ஆனால், வறட்டு இருமல் இருந்தால் சளி வெளியேறாது. தொண்டை எரிச்சல், நெஞ்சில் வலி, தொடர்ந்து இருமினால் நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லைகளைத் தரும் இந்த வறட்டு இருமல். அதுவும் இந்தப் பிரச்னை மாலையில் தொடங்கி இரவில் தூங்ககூட விடாமல் செய்துவிடும்.
வறட்டு இருமல் ஏற்படக் காரணங்கள்
சளி
இந்த சளி பிரச்னை இருந்தால், வறட்டு இருமல் குழந்தைக்கு வரும். மூக்கடைப்பு பிரச்னை இருந்தாலும் வரும். சளித் தொல்லைக்கு வீட்டு மருந்து சிறந்தது.
ஃப்ளு (Flu)
சில வைரஸ்களாலும் வறட்டு இருமல் வரும். இது குணமாக கொஞ்சம் அதிகமாகவே நேரம் எடுத்துக்கொள்ளும்.
க்ரூப் (Croop)
வைரஸால் இந்த க்ரூப் பிரச்னை வந்திருக்கும். அழுத்தமான இருமலாக இருக்கும். சத்தம் மிகுந்த இருமலாக இருக்கும். சுவாசப் பாதை வீங்கி இருக்கலாம். இதனாலும் வறட்டு இருமல் வரும்.
மாசு
காற்றில் உள்ள புகை, கெமிக்கல், பெயின்ட் போன்றவற்றால் வரலாம். இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.
வூப்பிங் இருமல் (Whooping)
மூக்கு, தொண்டையில் வரக்கூடிய பாக்டீரியல் தொற்று. மூச்சுவிட கூட சிரமத்தை ஏற்படுத்தும்.
ஆறு மாதத்துக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மேற்சொன்ன பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.
வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்
Home Remedy for Dry Cough / Irumal in Babies:
தாய்ப்பால்
திரவ உணவுகள் எப்போதும் உணவுப் பாதையை ஈரத்துடன் பாதுகாக்கும். எரிச்சலைக் குறைக்கும். உங்கள் குழந்தை இன்னும் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தால் வறட்டு இருமலுக்கு தாய்ப்பாலே சிறந்த மருந்து. அதையே கொடுங்கள். தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிஸ் இருமலைச் சரியாக்கும்.
தலையை உயர்த்தி வைத்தல்
இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் சின்ன தலையனை அல்லது டவலை மடித்து, குழந்தையின் தலையின் கீழ் வைக்கவும். குழந்தைக்கு பயன்படுத்துவதால் அது மென்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஷவர் ஸ்டீம்
ஆவி பிடிப்பதால் வறட்டு இருமல் சரியாகும். பெரியவர்களுக்கு இது சரி, குழந்தைகளுக்கு எப்படி? வெந்நீரை பாத் ரூம் பக்கெட்டில் ஊற்றி கதவை அடைத்துக்கொண்டு நீங்களும் குழந்தையும் பாத் ரூமில் இருங்கள். அந்த ஸ்டீம் குழந்தைக்கு நல்லது செய்யும்.
சலைன் டிராப்ஸ்
இந்த டிராப்ஸ், வறட்டு இருமலை நேரடியாக குணப்படுத்தாது. ஆனால், மூக்கடைப்பு பிரச்னையை சரி செய்து உங்கள் குழந்தையை சீராக சுவாசிக்க வைக்கும். உப்பு கலந்த நீரால் தயாரிக்கப்பட்ட இந்த டிராப்ஸ் குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடிய நல்ல மருந்து.
தேன்
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு பயன்படுத்த கூடிய மருந்து இது. இந்த தேன் மருத்துவத்தைப் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர். பட்டைத்தூளும் தேனும் சரியான அளவில் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் சரியாகும்.
சீரக தண்ணீர்
செரிமானத்துக்கான சிறந்த உணவு சீரகம். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு சீரக தண்ணீர் கொடுக்க வறட்டு இருமல் சரியாகும். தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, சீரக தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள். தண்ணீர் ஆறியதும் அதைக் குழந்தைக்கு கொடுக்கலாம்.
சிக்கன் சூப்
வீட்டிலே செய்யகூடிய சிக்கன் சூப்பில் சத்துகள் ஏராளமாக உள்ளன. பூண்டு சேர்த்து சிக்கன் சூப் வைத்துக்கொடுங்கள்.
மஞ்சள் கலந்த பால்
ஆன்டிபாக்டீரியல் சத்துகள் மஞ்சளில் இருப்பதால் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டர்மெரிக் மில்க் மசாலாவை கொடுப்பதால், வறட்டு இருமலால் ஏற்படும் எரிச்சலைச் சரி செய்யும்.டர்மெரிக் மில்க் மசாலாவில் கலந்துள்ள மஞ்சள் மற்றும் இருமலை நீக்கும் ஆர்கானிக் மசாலா பொருட்கள் வறட்டு இருமலை விரைவில் விரட்ட வழி வகுக்கும்.
யூகலிப்டிக்ஸ் தைலம்
குழந்தையை குளிப்பாட்டும் ஒரு பக்கெட் தண்ணீரில் 2-3 சொட்டு யூக்கலிப்டிக்ஸ் தைலத்தை விட்டு அதிக் குளிக்க வைக்கலாம்.
சில குழந்தைகளுக்கு வைரஸ்களால் ஏற்பட்ட வறட்டு இருமலைச் சரியாக்க, நேரம் எடுத்துக்கொள்ளும். மற்றபடி வீட்டு மருத்துவத்தால் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற வறட்டு இருமல் பிரச்னையை எளிமையாகச் சரி செய்ய முடியும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
என் குழந்தைக்கு 4 வயது. இரவில் வறட்டு இருமல் அதிகமாக உள்ளது. மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறுது
இருமல் மற்றும் சளிக்கான வீட்டு வைத்தியத்திற்கு கீழ் கண்ட லிங்க்கை கிளிக் பண்ணுங்க.இருமல் அதிகமாக இருந்தால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.
https://tamil.mylittlemoppet.com/sali-irumalai-pokkum-20-veettu-vaithiyangal/
Mam enaku 9 month baby iruku Na feed panren. Babyku thala romba heat ah iruku and fever iruku enna panna mam
தாய்ப்பாலே சிறந்த மருந்து.காய்ச்சல் தொடர்ச்சியாக இருந்த இருந்தால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது சிறந்தது.
என் குழந்தை பிறந்து 4 மாதம்ஆகிறது. தொடர்ந்து சளி மற்றும் இருமல் தொல்லை இருக்கிறது. அடிக்கடி சளி பிடித்து விடுகிறது. அதற்கு சிறந்த மருந்து எது?
ஆறு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவதே சிறந்தது டியர்.