மழைக்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நோய்களின் ஆதிக்கத்தால், நாளிதழ்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் எனத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மழைக்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறிதான் இந்தக் காய்ச்சல், உடல்நலக் கோளாறுகள். மழைக்காலத்தில் குழந்தைகளின் உடல்நலத்தை எப்படிச் சரி செய்யலாம்? வந்த பிறகு சரி செய்வதைவிட வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம். இதோ உங்களுக்கு வழிகாட்டத்தான் இந்தப் பதிவு…
மழைக்காலம் என்பது எப்போதும் வரக்கூடியது. வானிலையின் மாற்றம். அவ்வள்வுதான். ஆனால், அதில் இருந்து உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படிப் பாதுகாக்க போகிறீர்கள் என்பதுதான் சவாலான விஷயம். உங்கள் சுட்டிக் குழந்தைகளைப் பொத்தி பொத்தி வைத்திருந்தால் மட்டுமே தப்பிவிடலாம் என நினைக்க வேண்டாம். இதில் பெற்றோரின் பங்களிப்பும் முன்னெச்சரிக்கையும் அவசியம் என்பதை உணருங்கள்.
மழைக்காலத்தில் பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்
தண்ணீர்
- தண்ணீர் மூலமாக ஏராளமான நோய்கள் பரவுகின்றன. எனவே, தண்ணீரைக் கொதிக்க வைத்து, நன்றாக ஆறிய பின் பயன்படுத்துவது நல்லது. கொதிக்கவைப்பது என்றால், லேசாகச் சுட வைப்பது என்று அர்த்தம் இல்லை. தண்ணீரில் நன்றாக குமிழிகள் வரும் வரை கொதிக்கவிட வேண்டும். அவ்வாறு கொதித்த தண்ணீரை, ஆறவைத்துப் பின்னர் பயன்படுத்தலாம். இந்தக் காலத்தில் தண்ணீரை அவ்வப்போது சூடு செய்து வெதுவெதுப்பாகக் கொடுப்பது நல்லது.
- மழைக்காலத்தில் குழந்தைகளைக் குளிக்க வைக்கும்போது கவனமாக இருங்கள். குளிக்க வைத்ததும் நன்றாக உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். மேலும், அடிக்கடி தலைக்கு குளிக்க வைப்பதைத் தவிர்க்கவும். இதனால், காது சார்ந்த பிரச்னைகள் உருவாகலாம்.
- வீடு, சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் வரலாம். சுத்தமில்லாத குடிநீரால் டைபாய்டு, மஞ்சள் காமாலை, சளி போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆடைகள்
- குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஸ்வெட்டர் அணியும்போது, காதுகளையும் சேர்த்து மூடும் வகையில் தொப்பி, ஸ்கார்ஃப் அணிவிக்கவும். இதனால், காதுவலி, சளி பிடித்தல் ஆகியவை வராமல் தடுக்கப்படும்.
- இந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடை விஷயங்களில் கவனமாக இருங்கள். ஈரமான துணிகளை அணிவிக்க வேண்டாம். பச்சிளம் குழந்தைகள் சிறுநீர் கழித்தால் உடனே துணிகளை மாற்றிவிடுங்கள். ஈரத்தில் அப்படியே குழந்தையை விடக்கூடாது. குளிர் ஏற்படாதவாறு அடர்த்தியான உடைகளை அணிவிக்கவும். உடைகள் விஷயத்தில் கவனமாக இருந்தாலே, மழைக்காலங்களில் ஏற்படும் சருமப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
- வெயில் இல்லாத காரணத்தால் உடைகள் உலரவில்லை என்றால், துணியை அயர்ன் செய்யுங்கள்; சீக்கிரமே உலர்ந்துவிடும். அதுபோல, குழந்தைகளின் உல்லாடைகளை அயர்ன் செய்தால், துணியில் இருக்கும் கிருமிகள் அழியும். இதனால், மழைக்காலத்தில் தொடை இடுக்குகளில் வரும் அரிப்புப் போன்ற பிரச்னைகளைத் தடுக்கலாம்.
உணவு
- குழந்தைகளுக்கு உணவை அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக சமைத்து கொடுப்பது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்தவற்றைத் தரவேண்டாம். குழந்தைகளின் உணவில் காரம் தேவையெனில் மிளகாய்க்கு பதிலாக மிளகு சேருங்கள். இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்த்து ரசம் சாதம், பூண்டுக் குழம்பு, மிளகு குழம்பு ஆகியவற்றைத் தரலாம்.
பயணம்
- இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, வண்டியின் முன்பக்கத்தில் குழந்தைகளை உட்கார வைக்காமல் இருவருக்கும் இடையே உட்கார வைத்துக்கொள்ளவும். எதிர்க்காற்றால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுவதோடு குழந்தைகளுக்குக் காது வலி போன்ற பிரச்னைகள் வருவதைத் தடுக்க முடியும்.
சுகாதாரம்
- மழைக்காலங்களில் குழந்தைகள் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் வந்தவுடன், கால்களை நன்கு கழுவித் துடைக்க வேண்டும். குறிப்பாக, விரல் இடுக்குகளில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கைகளையும் சோப்பால் கழுவி விடுவது நல்லது.
- மழைக்காலங்களில் குழந்தைகளை வெறும் தரையில் படுக்கவோ, உட்காரவோ வைக்கக் கூடாது. இதனால் உடல் வலி ஏற்படலாம். எனவே, பாய் அல்லது சற்று தடிமனான போர்வைகளை விரித்து அதில் அமர வையுங்கள்.
- குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள் . இந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுகளைக் கொடுப்பது நல்லது. நீங்களாகவே சுய வைத்தியம் செய்து பிரச்னையைப் பெரிதுபடுத்திவிடாதீர்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்துக்கு லைக் போடுங்க.
Leave a Reply