சப்பாத்தி செய்வது எப்படி: குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் சப்பாத்தியிலிருந்து மாறுபட்ட சுவையான மற்றும் ஆரோக்கியமான சப்பாத்தி ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு பொதுவாகவே நட்ஸ்கள் மற்றும் இனிப்புகள் மீது அலாதி பிரியம் தான். ஆனால் அவை இரண்டும் சேர்த்து ஒரே ரெசிபியில் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள். ஆம் அப்படி அவர்களை விரும்பி உண்ண வைக்கும் இந்த ரெசிபி தான் மிக்ஸ்டு நட்ஸ் சப்பாத்தி.
நாம் வழக்கமாக கொடுக்கும் சப்பாத்தியில் இருந்து சற்றே வித்தியாசமாக இதை செய்து கொடுக்கும் பொழுது நட்ஸ்களின் சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உணவின் மேல் நாட்டம் இல்லாத குழந்தைகளுக்கு சற்றே வித்தியாசமான உணவாக அமையும்.
சப்பாத்தி செய்வது எப்படி?
சப்பாத்தி செய்வது எப்படி?
- கோதுமை மாவு- 2 கப்
- வெல்லம்- கால் கப்
- துருவிய தேங்காய் -கால் கப்
- மிக்ஸ்டு நட்ஸ் பவுடர்- 2 டேபிள்ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள்- இம்மியளவு
- நெய்- 1 டேபிள்ஸ்பூன்
மை லிட்டில் மொப்பெட் மிக்ஸ்டு நட்ஸ் பவுடரினை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம். நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
சப்பாத்தி செய்வது எப்படி?
செய்முறை
1.கோதுமை மாவில் நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
2.மாவினை 10 நிமிடங்களுக்கு ஒரு ஓரமாக வைக்கவும்.
3.சப்பாத்தியின் உள்ளே வைப்பதற்கு வெல்லம்,ஏலக்காய்த்தூள், மிக்ஸ்டு நட்ஸ் பவுடர்,தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
4.சிறிதளவு மாவினை உருட்டி கப் போன்று குழி செய்து கொள்ளவும்.
5.தயாரித்து வைத்த கலவையினை மாவின் உள்ளே வைத்து நன்றாக உருட்டிக் கொள்ளவும்.
6.மாவினை தேய்க்கவும்.
7.சப்பாத்தி கல்லினை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்த சப்பாத்தியினை சூடாக்கவும்.
8.நெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடாக்கவும்.
சப்பாத்தி செய்வது எப்படி?
மை லிட்டில் மொபெட்டின் மிக்சட் நட்ஸ் பவுடரில் எல்லாவிதமான நட்ஸ்களும் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு அத்தனை நட்ஸ்களின் சத்துகளும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் இதில் பிரேசெர்வேட்டிவ்ஸ் ,வேதிப் பொருட்கள் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்படவில்லை.மேலும் ஒவ்வொரு ஆர்டருக்கும் freshaga தயாரிக்கப்படுவதால் குழந்தைகளின் உடல் நலத்திற்கு கியாரண்டி.
உலர் பழங்கள் என்று அழைக்கப்படும் நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ,மெக்னீசியம்,செலினியம், நார்ச்சத்துகள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
இந்த ரெசிபியானது ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றது. குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் சாப்பிடுவதற்கு ஏற்றது.
மேலும் பண்டிகை காலங்களில் ஸ்பெஷலாக செய்வதற்கும் இது ஏற்றதாகும் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்சாகவும் செய்து கொடுக்கலாம். இந்த சப்பாத்தியை நீங்கள் செய்து கொடுத்தால் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட வாரம் இரு முறை கேட்டு விரும்பி உண்பார்கள்.
சப்பாத்தி செய்வது எப்படி?
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply