Mango Milkshake for Toddlers
மாம்பழ சீசன் வந்துவிட்டாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். வருடத்திற்கு ஒரு முறை வரும் அந்த சீசனுக்காக வருடன் முழுவதும் காத்திருப்போம்.எல்லா வகையான மாம்பழங்களையும் வாங்கி ருசித்த பின்புதான் மனது திருப்திபடும். ஆனால், சிறுவர்கள் மாம்பழத்தை விட மில்க் ஷேக்கையே அதிகம் விரும்பி பருகுவர்.நாம் பொதுவாக கொடுக்கும் பாலும், மாம்பழமும் கலந்த மில்க் ஷேக் ரெசிபி அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனுடன் பல்வேறு சத்தான பொருட்களையும் சேர்த்து உங்கள் குழந்தைக்கு கொடுத்தால் சந்தோஷம் தானே! அப்படிப்பட்ட ஒன்றுதான் மல்டி க்ரெய்ன் மாம்பழ மில்க் ஷேக் ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆம்! இந்த மல்டி க்ரெய்ன் மாம்பழ மில்க் ஷேக்கில் ராகி ,கம்பு, சோளம், எள் விதைகள், நட்ஸ் மற்றும் பல்வேறு பொருட்கள் கலந்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.அடுத்து மல்டி க்ரெய்ன் மாம்பழ மில்க் ஷேக் எவ்வாறு செய்யலாம் என்பதை காண்போம்.
மல்டி க்ரெய்ன் மாம்பழ மில்க் ஷேக் ரெசிபி
தேவையானவை
- மாம்பழம் – 1
- மல்டி க்ரெய்ன் ஹெல்த் மிக்ஸ்– 2 டே.ஸ்பூன்
- குளிர்ந்த பால் – 1 கப்
- நாட்டு சர்க்கரை- 1 டே.ஸ்பூன்
மல்டி க்ரெய்ன் மாம்பழ மில்க் ஷேக் ரெசிபி
செய்முறை
- 1/4 கப் பாலை காயவைத்து அதனுடன் 2 டே.ஸ்பூன் மல்டி க்ரெய்ன் ஹெல்த் மிக்ஸ் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். பாலை ஆற விடவும்.
- மாம்பழத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
- வெட்டி வைத்த மாம்பழம், ஹெல்த் மிக்ஸ்பேஸ்ட், நாட்டு சக்கரை, மீதமுள்ள பால் சேர்த்து கலவையை மிக்சியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து பரிமாறவும். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளலாம்.
இத்தனை சத்துக்கள் நிறைந்த மல்டி க்ரெய்ன் மில்க் ஷேக்கை இவ்வளவு எளிதாக நீங்கள் செய்ய முடியும் என்று நினைத்து பார்க்கவில்லை அப்படித்தானே! இன்னும் என்ன யோசிக்கிறீர்கள்? இந்த கோடை காலத்திற்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு மல்டி க்ரெய்ன் மில்க் ஷேக்கை கொடுத்து அசத்துங்கள்.
இதே போன்று வித விதமான ரெசிபிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply