Muttai Snacks for Babies:பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கான டேஸ்டியான ஸ்னாக்ஸ் ரெசிபி. 8 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸாகவும் கொடுக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்கும் முதல் கேள்வி “அம்மா இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ்?”.நாம் வழக்கமாக செய்யும் ஸ்னாக்ஸ் ரெசிபிகளை செய்து வைத்தாலும் புதிதாக அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்து வைக்கும் பொழுது அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அதற்காகவே புதிதாய் என்ன செய்யலாம் என்ற ஆர்வம் தோன்றும்.அதை சுவைக்கும் பொழுது அவர்களின் முகத்தில் தோன்றும் ஆனந்தத்தை காண எந்த தாய்க்குதான் ஆர்வமிருக்காது?அதற்கான சரியான தேர்வுதான் இந்த மொறு மொறு முட்டை ரெசிபி.இதை நீங்கள் 8 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸாகவும் கொடுக்கலாம்.சிறு சிறு துண்டுகளாகவும் கடிப்பதற்கு மென்மையாகவும் இருப்பதால் குழந்தைகள் விரல்களால் எடுத்து உண்பதற்கு ஏற்ற ரெசிபி இது.இப்பொழுது நாம் ரெசிபிக்கான செய்முறையை பார்க்கலாம்.
Muttai Snacks for Babies:
- முட்டை – 6
- அரிசி மாவு – ½ கப்
- கார்ன் ஃபிளவர் மாவு- ½ கப்
- மிளகு – ½ டீ.ஸ்பூன்
- உப்பு -தேவையானளவு
- எண்ணெய் – வறுப்பதற்கு தேவையானளவு
- கோதுமை ரஸ்க் தூள் – 1 கப்
இதையும் படிங்க: ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ்
செய்முறை:
1.ஐந்து முட்டைகளை உடைத்து எடுத்து கொள்ளவும்.
2.உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

3.ஒரு தட்டில் எண்ணெயை தடவவும்.

4.இட்லி குக்கரில் தண்ணீரை ஊற்றவும்.

5.பானை இட்லி குக்கரில் வைக்கவும்.

6.முட்டை கலவையை பானில் ஊற்றவும்.


7.இட்லி குக்கரை மூடவும்.

8.20-25 நிமிடங்கள் காத்திருக்கவும்.
9.நன்கு வெந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.

10. மீதமுள்ள முட்டையை கிண்ணத்தில் ஊற்றி ஓரமாக வைக்கவும்.

11.அரிசி மாவு மற்றும் கார்ன் ஃபிளவர் மாவை ஒன்றாக கலக்கவும்.
12. வெட்டி வைத்த முட்டை துண்டை முட்டையில் முக்கி எடுக்கவும்

13.மாவில் புரட்டி எடுக்கவும்.
14.மாவில் புரட்டி எடுக்கவும்.
15.ரஸ்க் தூளில் புரட்டவும்.

16.பொன்னிறமாகும் வரை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

17.சுவையான முட்டை பிங்கர்ஸ் ரெடி.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்
மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருப்பதால் தட்டில் வைத்த ஒன்று கூட மீதமிருக்காது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது முட்டை.குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது. இத்தனை நன்மைகள் அடங்கிய முட்டையை குழந்தைகளுக்கு சுவையாக செய்து கொடுக்க செய்து பாருங்கள் இந்த மொறு மொறு முட்டை ஃபிங்கர்ஸ்!

Leave a Reply