Nellikai Rasam: மழைக்காலம் என்பதால் எல்லோர் வீட்டிலும் தும்மல் சத்தமும், இருமல் சத்தமும் கேட்பது வழக்கம். சளி மற்றும் இருமல் வந்துவிட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற எண்ணம் மாறி ஆரம்ப கட்டத்திலேயே சிறு சிறு வீட்டு வைத்தியம் செய்து கொண்டால் உடல் நலனுக்கு நல்லது என்ற விழிப்புணர்வு தற்பொழுது எல்லோ பெற்றோர்களிடமும் வந்துவிட்டது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மருத்துவராகிய நானே ஏன் இப்படி சொல்கின்றேன் என்ற ஐயம் உங்களுள் எழலாம். மருத்துவராக இருந்தாலும் நானும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் தானே. எனவே, உங்களிடம் மருத்துவராக பேசாமல் ஒரு தாயாகத்தான் நான் அதிகமாக கலந்துரையாடி இருக்கின்றேன்.
எனவே தான், நான் உங்களுக்கு தரும் ரெசிபிகள் மற்றும் டிப்ஸ்களிலும் கூட பழங்கால மருத்துவ முறை, உணவு முறை மற்றும் விழிப்புணர்வு ஆகியவை சேர்ந்த இருக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
சிறுதானியங்களுக்கு நான் அதிகமாக முன்னுரிமை கொடுப்பதற்கும் ‘ உணவே மருந்து’ என்ற கருத்து தான் காரணம். ஏனென்றால் நாம் உண்ணும் உணவில் ஆரோக்கியம் இருந்தால் அதுவே மருந்தாக செயல்பட்டு பல்வேறு நோய்களிலிருந்து நம்மை காக்கும்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி தான் நெல்லிக்காய் ரசம். சளி மற்றும் இருமல் இருக்கும் பொழுது வீட்டிலேயே இந்த நெல்லிக்காய் ரசம் வைத்து எல்லோரும் சாப்பிடும் பொழுது நல்ல நிவாரணம் கிடைக்கும். நாம் தக்காளியைக் கொண்டு ரசம் தயாரிப்பது தான் வழக்கம்.
Nellikai Rasam:
அந்த ரசத்திலும் பூண்டு, சீரகம்,மல்லி, மிளகு போன்றவை சேர்ப்பதால் உடல் நலனுக்கு நன்மை சேர்க்கவும். அதையும் விட நன்மை அளிப்பது இந்த நெல்லிக்காய் ரசம்.
இந்த ரசத்தை பார்ப்பதற்கு முன்னால் நெல்லிக் காயில் இருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
Nellikai Rasam:
- நெல்லிக்காயில் வைட்டமின் சி எனப்படும் சத்து அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளித்து கிருமிகளில் இருந்து எதிர்த்து போராட உதவுகின்றது.
- நெல்லிக்காயில் நோய் ஏற்ப்பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் என்பதால் தொண்டை வலி மற்றும் இருமலுக்கு காரணமான பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்து போராடக் கூடியது.
- நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் உணவினை எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க கூடியது.
- வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் தன்மையை சீராக்கி குடல் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கு தேவையானவற்றை தருகின்றது.
- நெல்லிக்காயில் உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் ‘லோ கிளைசிமிக் இன்டெக்ஸ்’ உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.
- இதை ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் சிறந்தது.
- வைட்டமின் ஏ இதில் அதிகமாக இருப்பதால் கண் பார்வைக்கு சிறந்ததாகும்.
- கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கும் பண்பு இதில் அதிகம்.
- இதில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த சோகை போன்றவை வராமல் தடுக்க கூடியது.
- நெல்லிக்காயில் உள்ள பண்புகள் சருமம் மற்றும் கூந்தல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வல்லது.
Nellikai Rasam:
- பெரிய நெல்லிக்காய்-5 (கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்)
- மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
- பச்சை மிளகாய்-3
- இடித்த மிளகு- 1 டீஸ்பூன்
- இடித்த சீரகம்- ஒரு டீஸ்பூன்
- திப்பிலி-3
- ரசப்பொடி- ஒரு டீஸ்பூன்
- துவரம்பருப்பு- கால் கப் (வேகவைத்தது)
- உப்பு- ஒரு டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை- ஒரு கைப்பிடி
தாளிப்பதற்கு:
- நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
- கடுகு- ஒரு டீஸ்பூன்
- சீரகம்- அரை டீஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிதளவு
Nellikai Rasam:
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்த நெல்லிக்காய், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் மற்றும் திப்பிலி சேர்த்து நெல்லிக்காய் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
- நெல்லிக்காய் வெந்தவுடன் கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
- இதனுடன் இடித்து வைத்த மிளகு, சீரகம் மற்றும் ரசப்பொடி சேர்க்கவும்.
- வேகவைத்து மசித்த துவரம் பருப்பினை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு சூடாக்கவும். கொதிக்க விட வேண்டாம்.
- கடாயில் நெய் ஊற்றி சூடாக்கி கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்க்கவும்.
- ரசத்தில் ஊற்றவும்.
- மேலே நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
Nellikai Rasam:
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களும் வாரம் ஒரு முறை இந்த ரசம் செய்து சாப்பிட்டால் சளி இருமல் போன்றவை அண்டாது என்பதுடன் உடல் நலனுக்கும் நன்மை பயக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Nellikai Rasam:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நெல்லிக்காய் ரசத்தினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
இதில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய் மற்றும் மிளகு ஆகியவற்றின் அளவினை குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு ஏற்றார் போல் செய்து கொடுக்கலாம்.
நெய் சேர்க்காமல் தாளித்துக் கொடுக்கலாமா?
நெய் சேர்க்காமல் வீட்டில் உபயோகப்படுத்தும் கடலை எண்ணெய் சேர்த்தே தாளித்துக் கொடுக்கலாம்.
நெல்லிக்காயை மசித்து தான் போட வேண்டுமா?
நெல்லிக்காயை வேகவைத்து நன்கு வசித்து போடும் பொழுது ரத்தத்தில் நன்றாக கலக்கும். இல்லை என்றால் மிக்ஸியில் அடித்தும் போடலாம்.
இந்த ரசத்தினை வாரம் எத்தனை முறை செய்யலாம்?
வாரம் இருமுறை அல்லது ஒரு முறை இந்த ரசத்தை செய்து சாப்பிட்டால் உடல் நலனுக்கு நல்லது.
Leave a Reply