oats coconut laddu: இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றாலே கடைகளில் விற்கப்படும் விதவிதமான பாக்கெட் ஐட்டங்களில் மீது தான் நாட்டம் செல்கின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதையெல்லாம் உண்பது கேடு என்பது குறித்த பல வகையான விளம்பரங்கள் ஆன்லைன் மூலங்கள் வந்தாலும் குழந்தைகளின் கவனத்தை அதிலிருந்து திசை திருப்புவது அம்மாக்களுக்கு சவாலான விஷயமாக இருக்கின்றது.
oats coconut laddu:
அப்படி இருக்கும்பொழுது குழந்தைகளுக்கு நாம் வீட்டிலேயே வித விதமான சுவையான ஸ்நாக்ஸ்கள் செய்து கொடுப்பதுதான் அதிலிருந்து குழந்தைகளை மீட்டெடுப்பதற்கான வழியாகும்.
நாம் கொடுக்கும் ஸ்னாக்ஸ் ஆனது ஆரோக்கியமானதாகவும் அதே நேரம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் குழந்தைகள் நம் வழிக்கு வருவார்கள்.
இதுவரை சிறுதானியங்களை வைத்து நாம் ஆரோக்கியமாக செய்யக்கூடிய விதவிதமான ஸ்நாக்ஸ்களை அறிமுகம் செய்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க கூடியது ஆரோக்கியமான ஓட்ஸ் தேங்காய் லட்டு.
ஓட்ஸ் மற்றும் தேங்காய் இரண்டுமே குழந்தைகளுக்கு நன்மை சேர்க்கும் ஒன்று என்பதால் அதை வைத்து ஆரோக்கியமாக லட்டு எப்படி செய்து கொடுக்கலாம் என்பதை காணலாம்.
தேங்காய் மற்றும் ஓட்ஸின் நன்மைகள்:


oats coconut laddu:
- ஓட்ஸ் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்க வல்லது.
- ஓட்டில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் உணவினை எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- இதனை சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
- தேங்காயில் குழந்தைகளுக்கு தேவையான நல்ல கொழுப்புகள் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கு தேங்காய் ஒரு நல்ல தேர்வாகும்.
- தேங்காயை சாப்பிட்டவுடன் உடனடியாக ஆற்றல் கிடைப்பதால் குழந்தைகளுக்கு அது புத்துணர்வை கொடுக்கும்.
- உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ஓட்ஸ் மற்றும் தேங்காய் ஆகிய இரண்டு பொருட்களுமே கொடுக்கவல்லது.
- ரோல்டு ஓட்ஸ்- 1 கப்
- துருவிய தேங்காய்- அரை கப்
- நாட்டு சக்கரை- அரை கப்
- நெய்-2 டே.ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- நட்ஸ் பவுடர்- 2 டே.ஸ்பூன்
செய்முறை
- ஓட்சினை மிதமான தீயில் லேசாக நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
- ஆறியவுடன் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி அதில் துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கவும்.
- அதில் நாட்டு சக்கரையை போட்டு சர்க்கரை உருகும் வரை கிளறவும்.
- ஓட்ஸ் பவுடர் ஏலக்காய் தூள் மற்றும் நட்ஸ் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பை அணைத்தபின் கலவை ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
oats coconut laddu

குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஓட்ஸ் கோகனட் லட்டு நல்ல தேர்வாக இருக்கும்.
இதில் நார்ச்சத்துக்கள் நல்ல கொழுப்புகள் இயற்கையான இனிப்பு சுவை போன்றவை நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற நல்ல ஸ்னாக்ஸ் ஆக இருக்கும்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆகவும் அல்லது பள்ளிகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தால் இதனை நீங்கள் தாராளமாக கொடுத்து விடலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
oats coconut laddu
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இந்த தேங்காய் லட்டு உதவுமா?
ஆம். இதில் நல்ல கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும்.
எத்தனை வயதிலிருந்து இந்த லட்டினை கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை லட்டு கொடுக்கலாம்?
ஒரு நாளைக்கு 1-2 லட்டு கொடுக்கலாம்.
நட்ஸ் சேர்க்காமல் செய்யலாமா?
குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால் நட்ஸ் சேர்க்காமல் தாராளமாக செய்யலாம்.
ஓட்ஸ் தேங்காய் லட்டு
Ingredients
- ரோல்டு ஓட்ஸ்- 1 கப்
- துருவிய தேங்காய்- அரை கப்
- நாட்டு சக்கரை- அரை கப்
- நெய்-2 டே.ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- 1/4 டீ.ஸ்பூன்
- நட்ஸ் பவுடர்- 2 டே.ஸ்பூன்



![குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி [oats kanji recipe] feature](https://tamilcdn.mylittlemoppet.com/wp-content/uploads/2023/06/28131545/feature-1-150x150.jpg)







Leave a Reply