ஓட்ஸ் மற்றும் முட்டையால் செய்த கஸ்டர்டு
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சிறுவர்களுக்கான ஓட்ஸ் மற்றும் முட்டையால் செய்த கஸ்டர்டு :
Oats Egg Custard
குழந்தைகளுக்கு ஒரே வகையான உணவை கொடுத்து போரடித்து விட்டதா? எளிமையான அதே நேரம் ருசியான இந்த கஸ்டர்டை அவர்களுக்கு கொடுத்து பாருங்கள்…. கஸ்டர்டு என்பது சாப்பிட மிருதுவானதாகவும், அபார ருசி நிரம்பிய ஒரு உணவாகும். இதனால் சிறுவர்கள் இதனை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
- முட்டையின் மஞ்சள் கரு – ஒன்று
- வாழைப்பழம் – ஒன்று (மசித்துக் கொள்ளவும்)
- பால் – ஒரு கப்
- ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
- பாதாம் பொடி – அரை டீஸ்பூன்
செய்முறை :
1. ஒரு கப்பில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் மசித்த வாழைப் பழத்தை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
2. இத்துடன் ஒரு கப் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கி கொள்ளவும்.
3. பின்னர் இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேக விடவும்.
4. இத்துடன் ஓட்ஸ் மற்றும் பாதாம் பவுடரையும் சேர்த்து கிளறி விடுங்கள்.
5. இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்கள் வரை நன்றாக வேக விடவும். ஆனால் இந்த கலவை பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாதவாறு நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். வெது வெதுப்பான நிலையில் இதனை குழந்தைக்கு சாப்பிட கொடுங்கள்…
* உங்களுக்கு விருப்பம் என்றால் ஓட்ஸை நன்றாக பொடி செய்து சேர்க்கலாம்…
* வாழைப் பழத்தில் உள்ள இனிப்பு சுவையே போதுமானது என்பதால் இதில் கூடுதலாக இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
* பாதாம் பவுடருக்கு பதிலாக இதில் நீங்கள் உலர் தானிய பொடியை சேர்த்துக் கொடுக்கலாம்.
* பல மடங்கு சத்தும் சுவையும் நிரம்பிய இந்த உணவை உங்கள் குழந்தைக்கு கொடுத்தால் நிச்சயம் இதனை உங்கள் குழந்தை ருசித்து சாப்பிடும்…
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply