Oats Snacks Recipe: கடைகளில் விற்கும் பாக்கெட் உணவுகளை மட்டுமே சாப்பிட்டு பழக்கப்பட்ட நம் குழந்தைகளுக்கு மாற்றாக ஆரோக்கிய உணவு பழக்க வழக்கங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே நாம் ஒவ்வொரு ரெசிபியாக உங்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆரோக்கியமான உணவு வகைகள் என்றாலே பொதுவாக குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்காது அதற்காகத்தான் நாம் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் சுவையாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரெசிபிகளை அறிமுகப்படுத்துகின்றோம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபி ஆரோக்கியமான ஓட்ஸ் நட்ஸ் மிக்சர். மிக்சர் என்றாலே பேக்கரிகளில் விற்கும் எண்ணெயில் பொரித்த கார வகைகள் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது ஆரோக்கியமான நட்ஸ் வகைகள் கலந்த மிக்சர் ஆகும்.
குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும் பாதாம், முந்திரி, நிலக்கடலை, உலர் திராட்சை உடன்,ஓட்ஸும் சேர்த்து இந்த ரெசிபி தயாரிக்கப்படுவதால் குழந்தைகள் சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
Oats Snacks Recipe:
இவற்றை தயாரிப்பதற்கு முன்னால் இந்த ரெசிபியில் நிறைந்துள்ளார் நன்மைகளை பார்க்கலாம்:

- ஓட்ஸ் என்ற தானியமானது குழந்தைகள் நீண்ட நேரம் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும் தன்மை உடையது.
- ஓட்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் குழந்தைகளுக்கு உணவினை எளிதில் செரிமானம் செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
- சிறிதளவு ஓட்சை எடுத்துக் கொண்டாலும் குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும்.
- எளிதில் ஜீரணமாகக் கூடியது.
- இவை தவிர இவற்றில் சேர்க்கப்படும் நட்ஸ் வகைகளில் நிறைந்துள்ள இயற்கையான கொழுப்புச் சத்துக்கள் மற்றும் புரோட்டின் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- குழந்தைகளின் மூளை திறனை அதிகரிக்க கூடியது.
- நட்ஸ் வகைகளில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக வளர்வதற்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது.
- குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கும் உதவுகின்றது.
Oats Snacks Recipe
- ரோல்டு ஓட்ஸ்- 1 கப்
- நறுக்கிய பாதாம்- 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்
- நிலக்கடலை-2 டேபிள் ஸ்பூன்
- உலர் திராட்சை- 2 டேபிள் ஸ்பூன்
- நாட்டு சக்கரை- 2 டேபிள் ஸ்பூன்
- நெய்- ஒரு டீஸ்பூன்.
Oats Snacks Recipe
செய்முறை
- ஓட்ஸினை மிதமான தீயில் வைத்து லேசாக மொறுமொறுப்பாகும் வரை வறுத்து ஒரு ஓரமாக வைக்கவும்.
- அதே கடாயில் நிலக்கடலை, பாதாம் மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை லேசாக நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
- கடாயில் நெய்யை ஊற்றி அதில் நாட்டு சக்கரையை போட்டு லேசாக உருகும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
- அடுப்பை அணைத்து அதில் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ஓட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளை வேகமாக சேர்க்கவும்.
- எல்லாவற்றையும் நன்றாக சக்கரை படும் அளவிற்கு கிளறி விடவும்.
- நன்றாக ஆறவிட்டு காற்று போகாத டப்பாவில் அடைக்கவும்.
- குழந்தைகளுக்கு பிடித்தமான மொரு மொருப்பான ஸ்னாக்ஸாக இது இருக்கும்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் வித்தியாசமான ஸ்னாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் பேக்கரிகளில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் வகைகளுக்கு பதிலாக இந்த ஓட்ஸ் மிக்சரை தாராளமாக கொடுக்கலாம்.
பள்ளிகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸிலும் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவதற்கு இது ஏற்ற ரெசிப்பியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஜங்க் உணவுகளை கொடுக்கின்றோம் என்ற மன உளைச்சல் ஏற்படாமல் ஆரோக்கியமான ஸ்னாக்ஸை கொடுத்த திருப்தி நமக்கு இருக்கும்.

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Oats Snacks Recipe
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எந்த வயதில் இருந்து குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு நட்ஸ் வகைகளை நன்றாக பொடி செய்து அதில் கலந்து கொடுக்கலாம்.
சக்கரை சேர்க்காமல் இதனை கொடுக்கலாமா?
நீங்கள் இதைவிட ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் டேட்ஸ் பவுடர் போன்ற இயற்கையான சக்கரை பவுடர் கலந்து கொடுக்கலாம்.
வேறு ஏதேனும் நட்ஸ்கள் சேர்க்கலாமா?
மேலே கொடுக்கப்பட்டுள்ள நட்புகள் தவிர வால்நட், பிஸ்தா போன்றவற்றையும் பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஓட்ஸ் நட்ஸ் மிக்சர்
Ingredients
- ரோல்டு ஓட்ஸ்- 1 கப்
- நறுக்கிய பாதாம்- 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
- நிலக்கடலை-2 டேபிள் ஸ்பூன்
- உலர் திராட்சை- 2 டேபிள் ஸ்பூன்
- நாட்டு சக்கரை- 2 டேபிள் ஸ்பூன்
- நெய்- ஒரு டீஸ்பூன்
Notes

![குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி [oats kanji recipe] feature](https://tamilcdn.mylittlemoppet.com/wp-content/uploads/2023/06/28131545/feature-1-150x150.jpg)
![குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக்[Ragi Recipe in Tamil] Ragi Recipe in Tamil](https://tamil.mylittlemoppet.com/wp-content/uploads/2022/04/feature-3-150x150.jpg)








Leave a Reply