Paruppu Kichadi for babies:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எத்தனையோ வகை கிச்சடி ரெசிபிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சமைக்க வேண்டும். ஒவ்வொரு ரெசிபியிலும் அதற்கேற்ற கூட்டுப்பொருட்களைச் சேர்த்து சமைக்க, அதைக் குழந்தைகளும் சாப்பிட்டு வர அவ்வளவு நல்லது.
மசூர் தால் கிச்சடி
- அரிசி – ⅔ கப்
- மசூர் தால் – 1/3 கப்
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- சீரகம் – ½ டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- பூண்டு – 2
- நெய்
செய்முறை
- அரிசி, பருப்பை நன்றாகக் கழுவிய பின் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- தண்ணீரை வடிகட்டவும்.
- தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி, சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
- அறிந்து வைத்த வெங்காயத்தைக் கலந்து, பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- நெய் கொஞ்சம் கொஞ்சமாக விடும்வரை, குக்கரில் உள்ள கலவையை நன்றாக வதக்க வேண்டும்.
- பருப்பையும் அரிசியையும் இதில் சேர்க்கவும்.
- மேலும், இதில் 3 கப் தண்ணீரை ஊற்றவும்.
- மூன்று விசில் வரும் வரை வேகவிடவும் (ஒரு விசில் அதிக தீயில் வைக்கவும் மீதி 2 விசல் மிதமான தீயில் வைக்கவும்)
- ஸ்டீம் போனதும், கரண்டியால் நன்கு மசித்து, கிளறி வெதுவெதுப்பான சூட்டில் பரிமாறலாம்.
குறிப்பு: சில குழந்தைகளுக்கு தக்காளி ஒத்துகொள்ளாது. டயாப்பர் அரிப்பு போல சருமத்தில் வரும். எனவே, இதற்கு முன் உங்கள் குழந்தைக்கு தக்காளி ஜூஸ், தக்காளி சூப் ஏற்கெனவே கொடுத்திருந்து பழகியிருந்தால் இந்த ரெசிபியை நீங்கள் செய்து உங்கள் குழந்தைக்கு தரலாம். இல்லை.. உங்கள் குழந்தைக்கு தக்காளி அலர்ஜி என்றால், இரண்டு டீஸ்பூன் புளித்தண்ணீர் சேர்த்துக்கொண்டால் அதே சுவை கிடைக்கும். இதை நீங்கள் உங்கள் குழந்தைக்கு செய்து தரலாம்.)
பலன்கள்:
- புரதச்சத்து நிறைந்துள்ளது. மாவுச்சத்தும் உள்ளது.
- விட்டமின்கள், தாதுக்கள் ஆகியவையும் உள்ளன.
- உடலில் செல்கள், தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
- லைகோபீன் சத்துகள் உள்ளதால், பார்வைத்திறன் மேம்படும்.
- சமச்சீர் உணவாக இருப்பதால் பெஸ்ட் உணவு இது.
- உடல் எடை ஆரோக்கியமான வழியில் அதிகரிக்க உதவும்.
- வயிற்று பொறுமல், வாயுப் பிரச்னை போன்றவை இருக்காது.
- மதிய உணவாக இதைச் சமைக்க ஏற்றது.
- நுண்ணூட்ட சத்துகள் இருப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply