வயது – குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கான பருப்பு சூப்
- துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- உரித்த பூண்டு – ஒரு பல்
- மஞ்சள் தூள் – தேவையெனில்
- தண்ணீர் – 8 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1.பருப்பை எடுத்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து அதன்பிறகு அதனை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
2. அதன்பிறகு இத்துடன் பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து பாத்திரத்தில் வேக வைக்கவும். (மஞ்சள் தேவையெனில் சேர்க்கலாம்)
3. இதனை நீங்கள் பிரஷர் குக்கரிலும் செய்யலாம்.
4. பருப்பு நன்றாக வெந்த பிறகு அதனை மத்து அல்லது கரண்டி கொண்டு மசித்துக் கொள்ளவும்..
வேகவைத்த பருப்பு ரெடி…
தெரிந்து கொள்ள வேண்டியது :
முதலில் பாசிப்பருப்பை நீங்கள் குழந்தைக்கு கொடுக்கவும். அதன்பிறகு துவரம்பருப்பு, மைசூர் பருப்பு என ஒவ்வொன்றாக தரலாம்.
சில குழந்தைகளுக்கு துவரம்பருப்பு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்பதால் பூண்டு அல்லது பெருங்காயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.
பூண்டை சிறிய துண்டுகளாக வெட்டியோ அல்லது நசுக்கியோ சேர்க்கலாம். இதனால் அதில் உள்ள சத்துகள் நேரடியாக கிடைக்கும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு இதனை சேர்த்தால் உடனடி பலன் கிடைக்கும்.
பருப்பில் அதிகமான புரதச்சத்து இருக்கிறது. அதேபோல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், அலர்ஜியை தவிர்க்கும் தன்மையும் பூண்டில் இருக்கிறது.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply