Pasalai keerai Chapathi in Tamil: குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய ஆரோக்கியமான உணவு வகைகளில் பிரதானமான ஒன்று கீரை வகைகள்.ஆனால் கீரை என்றாலே நமது வாண்டுகள் பத்து அடி தூரம் தள்ளி போய்விடுவார்கள்.கீரையை குழந்தைகள் உண்ண செய்வது எப்படி என்று பல முறை யோசித்திருப்பீர்கள்.அதற்கான ரெசிபிதான் இது.என் குழந்தைகளும் கீரை உண்ண விரும்ப மாட்டார்கள்.அவர்களுக்கு அதை எப்படி கொடுக்கலாம் ன்று யோசித்த பொழுது நான் ட்ரை செய்த ரெசிபிதான் இந்த பாலக்கீரை சப்பாத்தி .வாருங்கள் நாம் செய்முறையை பார்க்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதையும் படிங்க: குழந்தைக்கு எப்போது திட உணவுகள் கொடுக்கலாம்?
Pasalai keerai Chapathi in Tamil:
- கோதுமை மாவு -1 கப்
- பாலக்கீரை (அ) பசலைக்கீரை – 10-15 இலைகள்
- சீரகத்தூள் (வறுத்து பொடியாக்கியது)- 1/2 டீ.ஸ்பூன்
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
1) ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும்.2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கீரையை போடவும்.1-2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
2) ஒரு பவுலில் 2 கப் குளிர்ந்த நீரை எடுத்து கொள்ளவும்.வேக வைத்த கீரையை தனியாக பிரித்து எடுத்து குளிர்ந்த நீருக்குள் போடவும்.இதனால் கீரையின் பச்சை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
3) சிறிது நிமிடம் கழித்து கீரையை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
4) 1 கப் கோதுமை மாவை ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு உப்பு,வறுத்த சீரகத்தூள் மற்றும் அரைத்து வைத்த கீரை விழுது சேர்த்து நன்கு மிருதுவாக பிசையவும்.தேவைப்பட்டால் சிறிது சுடுதண்ணீர் சேர்க்கலாம்.
5) மாவை 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்கவும்.
6) கையில் சிறிது எண்ணெய் தடவி கொண்டு மாவை நன்கு பிசையவும்.
7) சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
8) சப்பாத்தி கல்லில் போட்டு உருட்டவும்.
9) பானில் சப்பாத்தியை போட்டு ப்ரவுன் கலர் புள்ளிகள் வரும்வரை இரு புறமும் வேக வைக்கவும்.
10) மிருதுவான பாலக்கீரை சப்பாத்தி ரெடி.
இதையும் படிங்க: குழந்தையின் வயதிற்கேற்ற எடையும் உயரமும்
Pasalai keerai Chapathi in Tamil:
குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய கீரைகளில் ஒன்று பாலக்கீரை ஆகும்.அதுமட்டுமல்லாமல் இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
- உடலிற்கு குளிர்ச்சிதரக்கூடியது.
- புரதச்சத்து நிறைந்தது.
- வைட்டமின் ஏ,பி,சி மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைத்தது.
- இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
- மெக்னீசியம்,காப்பர்,ஜிங்க் மற்றும் வைட்டமின்-கே நிறைந்ததால் எலும்புகளுக்கு உறுதியளிக்ககூடியது.
Leave a Reply