Poochi Kadikkana Veetu Viathiyam:விலங்கினங்களில் அதிகமான எண்ணிக்கையினை கொண்டுள்ளது பூச்சியினம்.மழைக்காலமானாலும்,வெயில் காலமானாலும் அவைகள் இல்லாத இடத்தில் நாம் இருக்க முடியாது.பூச்சிகளை விஷப்பூச்சிகள் மற்றும் விஷமற்ற பூச்சிகள் என வகைப்படுத்தலாம்.விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால் நாம் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.இவை தவிர அன்றாட வாழ்வில் கொசுக்கள்,எறும்புகள்,விஷமற்ற சிறு பூச்சிகள் போன்றவை சில நேரம் நம்மை கடிப்பதுண்டு.அவை தடிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.பூச்சி கடியால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் குணமாக்கலாம்.அவற்றை காண்போம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதையும் படிங்க:குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்.
Poochi Kadikkana Veetu Viathiyam:
1.சின்ன வெங்காயம்
நம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் பொருட்களுள் ஒன்றுதான் சின்ன வெங்காயம்.எறும்பு மற்றும் கொசு போன்றவை கடித்தால் சின்ன வெங்காயத்தின் சாறினை அதில் தேய்த்தால் விரைவில் குணமடையும்.சின்ன வெங்காயத்தினை சிறிது வெட்டி பூச்சி கடித்த இடத்தில் நேரடியாக தேய்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
2.தேன்
அரிப்பு மற்றும் எரிச்சலுக்கு நாம் பாரம்பரியமாக உபயோகிக்கும் மருந்து பொருள் தேன்.பூச்சி கடி உள்ள இடத்தில் தேனை தேய்க்க வேண்டும்.எரிச்சலிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.மேலும் இதில் ஆன்டி-பேக்டோரியல் தன்மை அதிகம் உள்ளது.இது எரிச்சல் மேலும் அதிகமாகாமல் தடுக்கக்கூடியது.
3.கற்றாழை ஜெல்
நம் வீட்டு தோட்டங்களிலும்,வீட்டிற்கு அருகாமையிலும் எளிதாக வளர்க்ககூடிய ஒன்று கற்றாழை.கற்றாழையின் தோலை நீக்க வேண்டும்.பூச்சி கடித்த இடத்தில் ஜெல் போன்ற பகுதியினை தடவவும்.நல்ல நிவாரணம் கிடைக்கும்.
4.எலுமிச்சை சாறு மற்றும் துளசி சாறு
எலுமிச்சை சாறு மற்றும் துளசி சாறு இரண்டையும் சம அளவில் சம அளவில் கலக்க வேண்டும்.இதனை பூச்சி கடி உள்ள இடத்தில் தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்.
5.எண்ணெய்
அரிப்பை தடுப்பதற்கு மற்றுமொரு வழிதான் டீ ட்ரீஆயில்.இதில் ஆன்டி செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது.எனவே அரிப்பிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.டீ ட்ரீ ஆயில் பூச்சி கடிக்கு மட்டுமல்லாமல் சருமம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுகிறது.
நம் வீடுகளில் சுலபமாக கிடைக்கும் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய்.எறும்பு அல்லது கொசு கடித்த இடத்தில் தடிப்பு ஏற்படும்.அதில்தேங்காய் எண்ணெய் தேய்க்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.
6.பேக்கிங் சோடா
நம் சமயலறையில் எளிதாக கிடைக்கும் பொருட்களில் ஒன்று பேக்கிங் சோடா.ரொட்டி மற்றும் கேக் செய்யும் பொழுது உபயோகப்படுத்துவது வழக்கம்.பேக்கிங் சோடாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். பேஸ்ட் பதத்திற்கு குழைக்கவும்.பூச்சி கடி பட்ட இடத்தில் பேஸ்டினை தேய்க்கும் பொழுது நல்ல நிவாரணம் கிடைக்கும்.
7.பூண்டு
நாம் அன்றாடம் சமைக்கும் உணவு பொருட்களில் பிரதான இடம் பிடிப்பது பூண்டு.இது இயற்கையாகவே எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.அதில் இதுவும் ஒன்று.பூண்டை நன்றாக நசுக்க வேண்டும்.பூச்சி கடித்த இடத்தில் தேய்க்க வேண்டும்.எரிச்சலிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
8.ஆப்பிள் சைடர் வினிகர்
இதையும் படிங்க: சளியை நீக்கும் ஓம ஒத்தடம்
ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர். பஞ்சினில் தடவி பூச்சி கடி உள்ள இடத்தில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக பூச்சி கடித்த இடத்தில அரிப்பு ஏற்படுவது வழக்கம்.ஆனால் மேலும் மேலும் அரித்தால் பாதிப்பு அதிகமாகும்.ஆனால் கடித்தது விஷ பூச்சிகள் என தெரிந்தால் வீட்டு வைத்தியங்கள் எதவும் முயற்சி செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply