Poondu Paal-Garlic Milk in Tamil: மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் கூடவே தொற்றிக்கொள்ளும். சளி முற்றுவதற்கு முன் வீட்டிலுள்ள சிறு சிறு சமையல் பொருட்களை வைத்து நாமே வைத்தியம் செய்து கொண்டால் பெரும் சிரமத்தை தவிர்க்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சளி மற்றும் இருமலுக்கு ஒத்தட வைத்தியம், இருமலுக்கான இஞ்சி மிட்டாய் மேலும் பல்வேறு வகையான வீட்டு வைத்தியங்களை இதற்கு முன்பு பார்த்திருக்கின்றோம்.இதோ உங்களுக்காக மற்றுமொரு எளிமையான வீட்டு வைத்தியம்.வீட்டில் நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் பூண்டு மற்றும் பால் மட்டும் போதுமானது. இதை நாம் எளிதாக செய்யலாம்.
- பால் – 1.5 கப்
- நாட்டுச்சர்க்கரை -2 டே.ஸ்பூன்
- பூண்டு-3 பல்.
இதையும் படிங்க: பூச்சி கடிக்கான எளிமையான வீட்டு வைத்தியங்கள்
Poondu Paal-Garlic Milk in Tamil:
செய்முறை
1.பூண்டை ஒன்று இரண்டாக இடித்து எடுக்கவும்.
2.பாலை பாத்திரத்தில் ஊற்றி பொங்கும் வரை காத்திருக்கவும்.
3.அடுப்பினை மிதமான சூட்டில் வைக்கவும்.
4.இடித்து வைத்த பூண்டினையும் நாட்டுசர்க்கரையும் பாலுடன் சேர்க்கவும்.
5.நன்றாக கலக்கி மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் காய்ச்சவும்.
6.பாலினை வடிகட்டி பரிமாறவும்.
ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது என்பதால் குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு மேல் இந்த பாலினை கொடுக்கலாம்.முதலில் சிறிதளவு கொடுத்து பாருங்கள்.
பின்பு அளவினை அதிகரிக்கலாம்.25 மி.லி அல்லது 3 டே.ஸ்பூன் கொடுக்கலாம்.காலை அல்லது இரவு தூங்க செல்லும் முன்பு இந்த பாலினை கொடுக்கலாம்.
பூண்டில் இயற்கையாகவே ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளன.இவை இயற்கையாகவே உடலுக்கு வலிமையளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இந்த பூண்டு பாலினை அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply