Potato Egg Omelette: குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு,பான்கேக் மற்றும் முட்டை என்றாலே அலாதி பிரியம் தான். இவற்றை எல்லாம் சேர்த்து ஒரே ரெசிபியில் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்காமலா போகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதற்கேற்ற ரெசிபி தான் இந்த உருளைக்கிழங்கு முட்டை பான்கேக். குழந்தைகளுக்கு எளிதாக கொடுக்கக் கூடிய ஆரோக்கியமான காலை உணவாக இது இருக்கும்.
மேலும் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் அனைத்து சுவையும் கலந்திருப்பதால் குழந்தைகள் கட்டாயம் இதனை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
Potato Egg Omelette:
உருளைக்கிழங்கு மற்றும் முட்டை யில் உள்ள சத்துக்கள்
- உருளைக்கிழங்கு மற்றும் முட்டை இரண்டுமே வைட்டமின்கள்,மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. எனவே இவை குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- மேலும் இவை குழந்தைகளின் நரம்பு மண்டலம், இதயம் ,தசை, எலும்பு, தோல் மற்றும் கண்களுக்கு வலு சேர்க்க கூடியவை.
- உருளைக்கிழங்கில் குழந்தைகளுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை நிறைந்துள்ளன.
- உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வராமல் காக்கக் கூடியது.
- உருளைக்கிழங்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால் கேன்சர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.
- மேலும் இதில் எனர்ஜி நிறைந்துள்ளதால் குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்க தேவையான ஆற்றலை அளிக்கக்கூடியது.
- முட்டையில் உள்ள சத்துக்களானது குழந்தையின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு உதவக்கூடியது.
- மேலும் முட்டையானது குழந்தைகளின் ரத்த குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வல்லது.
- மேலும் இது குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் ஏ,வைட்டமின் பி12,கால்சியம் போன்றவற்றை அளிக்கக்கூடியது.
- மேலும் முட்டையில் உள்ள புரோட்டீனானது குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது .
- குழந்தைகள் தினமும் உடலுக்குத் தேவையான புரோட்டீனை எடுத்துக்கொள்ள முட்டையானது நல்ல உணவாக அமையும்.
Potato Egg Omelette:
- உருளைக்கிழங்கு -2 பொடியாக நறுக்கியது
- முட்டை மஞ்சள்கரு
- வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
- உப்பு -தேவையான அளவு( ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு மட்டும் )
- அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
- சீரகத்தூள் -1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் -1 டீஸ்பூன்
- பெருங்காயம் -இம்மியளவு
- கரம் மசாலா- ஒரு டீஸ்பூன்
- எண்ணை அல்லது நெய்
Potato Egg Omelette:
செய்முறை
1.உருளைக்கிழங்கை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும்.
3.ஒரு பவுலில் உருளைக்கிழங்கு,மஞ்சள்கரு மற்றும் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
4.தோசை கல்லினை சூடாக்கி மிதமான தீயில் வைக்கவும்.
5.தயாரித்த கலவையினை தோசை மாவு கரண்டியை கொண்டு ஊற்றவும்.
6.நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும்.
7.சுவையான உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி.
8. குழந்தைகளுக்கு பிடித்தமான சட்னியை கொண்டு பரிமாறவும்.
Potato Egg Omelette:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உருளைக்கிழங்கை குழந்தைகளுக்கு எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம் ?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் உருளைக்கிழங்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு உருளைக் கிழங்கினை எப்படி கொடுக்கலாம் ?
ஆறு மாத குழந்தைகளுக்கு முதன் முதலாக கொடுக்கும்பொழுது உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு முட்டையை எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம் ?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு வாயுவினை உண்டாக்குமா?
உருளைக்கிழங்கு சில குழந்தைகளுக்கு வாயுவினை ஏற்படுத்தலாம்.அதனால் உருளைக்கிழங்கில் சீரகத் தூள்,பெருங்காயம் போன்றவற்றை சேர்த்துக் கொடுப்பதே சிறந்தது.
உருளைக்கிழங்கு மற்றும் முட்டை இவை இரண்டையும் சேர்த்து ஒன்றாக தரலாமா?
உருளைக்கிழங்கு மற்றும் முட்டை இரண்டுமே எனர்ஜியை தரக்கூடியது என்பதால் தாராளமாக சேர்த்துக் கொடுக்கலாம்.
உருளைக்கிழங்கு ஆம்லெட்
Ingredients
- உருளைக்கிழங்கு-2 பொடியாக நறுக்கியது
- முட்டைமஞ்சள்கரு
- வெங்காயம்-1 (பொடியாக நறுக்கியது)
- உப்பு-தேவையான அளவு( ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு மட்டும் )
- அரிசிமாவு -1 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள்- 1 டீஸ்பூன்
- சீரகத்தூள்-1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள்-1 டீஸ்பூன்
- பெருங்காயம்-இம்மியளவு
- கரம்மசாலா- ஒரு டீஸ்பூன்
- எண்ணைஅல்லது நெய்
Notes
- உருளைக்கிழங்கை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும்.
- ஒரு பவுலில் உருளைக்கிழங்கு. மஞ்சள்கரு மற்றும் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தோசை கல்லினை சூடாக்கி மிதமான தீயில் வைக்கவும்.
- தயாரித்த கலவையினை தோசை மாவு கரண்டியை கொண்டு ஊற்றவும்
- நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும்
- சுவையான உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி
- குழந்தைகளுக்கு பிடித்தமான சட்னியை கொண்டு பரிமாறவும்.
Leave a Reply