Ragi Kozhukattai Recipe: நம் வீடுகளில் அடிக்கடி செய்யும் பாரம்பரியமான ரெசிபிகளில் ஒன்று கொழுக்கட்டை.பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எளிதாக ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க அம்மாக்களின் முதல் தேர்வு கொழுக்கட்டைதான்.விசேஷ நாட்களில் கடவுளுக்கு படைப்பதற்கும் நம் முதல் தேர்வு கொழுக்கட்டைதான்.வழக்கமாக நாம் கொழுக்கட்டையை அரிசி மாவில்தான் செய்வோம்.ஆனால் அரிசிவு கொழுக்கட்டையை விட ஆரோக்கியமானது இந்த ராகி கொழுக்கட்டை. கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கப்படும் பூரணத்திற்கு நாம் வழக்கமாக வைக்கும் தேங்காய்,பொறிகடலை மற்றும் சர்க்கரையோடு ட்ரை புருஃட்ஸ் பவுடரையும் சேர்த்துள்ளேன்.சுவையோடு மட்டுமல்லாமல் சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமும அள்ளி தருவதால் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய அற்புதமான ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Ragi Kozhukattai Recipe
- ராகி மாவு – 1 கப்
- அரிசி மாவு – 1/2 கப்
- தண்ணீர் – 1 கப்
- நெய்- தேவையானவை
- வெல்லத்தூள் – 1/2 கப்
- துருவிய தேங்காய் – 1 கப்
- பொரிகடலை – 1/4 கப்
- ட்ரை புரூட்ஸ் பவுடர்(தேவைப்பட்டால்)- 2 டே .ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள் – 1/4 டீ.ஸ்பூன்
- குங்குமப்பூ (தேவைப்பட்டால்)
மை லிட்டில் மொப்பெட் ஆர்கானிக் சர்க்கரையைஎப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம். நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Ragi Kozhukattai Recipe
செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
2.ஒரு பவுலில் ராகி மாவு மற்றும் அரிசி மாவை எடுத்து கொள்ளவும்.
3.சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்.
4. மாவை கட்டிகள் இல்லாமல் மிருதுவாக பிசைந்து ஒரு ஓரமாக வைக்கவும்.
5.ஒரு பவுலில் பூரணத்திற்கு தேவையான வெல்லத்தூள்,தேங்காய்த்துருவல்,பொறிகடலை,ட்ரை புரூட்ஸ் பவுடர் மற்றும் ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
6. கொழுக்கட்டை அச்சை எடுத்துக்கொண்டு அதனுள்ளே நெய் தடவவும்.
7.சிறிதளவு மாவை எடுத்து அச்சுக்குள் வைக்கவும்.
மை லிட்டில் மொப்பெட் டிரை புரூட்ஃஸ் பவுடரை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
8.கலந்து வைத்த பூரணத்தை உள்ளே வைத்து மேலும் சிறிதளவு மாவை அச்சுக்குள் வைத்து அடைக்கவும்.
9.தயார் செய்து வைத்த மாவை இட்லி குக்கரில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
10.தேங்காய்ப்பூ தூவி கொழுக்கட்டைகளை பரிமாறவும்.
11.சத்தான ராகி கொழுக்கட்டை ரெடி.
குழந்தைகளுக்கு தேவையான கால்சியத்தை ராகி அள்ளி கொடுப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.வழக்கமாக செய்து கொடுக்கும் கொழுக்கட்டையை விட வித்யாசமாக இருப்பதால் குழந்தைகள் கட்டாயம் விரும்பி உண்பர்.
Leave a Reply