Ragi Paal for babies in Tamil:தாய்ப்பாலுக்கு இணையான சத்துள்ள இந்த ராகி பாலினை குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் கொடுக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் வாரி வழங்குவதில் கேழ்வரகிற்கு முக்கிய இடமுண்டு.உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை அபரிமிதமாக தன்னுள் உள்ளடக்கியது கேழ்வரகு.
இத்தனை சத்துக்கள் நிறைந்த கேழ்வரகினை பொடி செய்து அதனை கஞ்சியாக காய்த்து குழந்தைகளுக்கு கொடுத்திருப்போம்.ஆனால் கஞ்சியாக கொடுப்பதற்கு முன்பு பாலாக கொடுத்தால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆவதோடு அதிகமான சத்துக்களையும் அளிக்க வல்லது.
கேழ்வரகு பாலின் செய்முறையினை காண்பதற்கு முன்னால் கேழ்வரகில் அடங்கியுள்ள நன்மைகளை காணலாம்:
- உடலின் சீரான இயக்கத்திற்கு தேவையான புரதங்களை அள்ளித்தருவது ராகி எனவே இதனை காலை உணவாக குழந்தைகளுக்கு கொடுப்பது நன்மையளிக்கும்.
- நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை அண்டாது.
- கேழ்வரகில் கால்சியம் சத்துக்கள் அதிகமிருப்பதால் கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
- கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தக்கூடியது.
Ragi Paal for babies in Tamil:
- ராகி
Ragi Paal for babies in Tamil:
செய்முறை
1.ராகியை நன்றாக கழுவி எடுக்கவும்.
2.தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
3.மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
4.தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
5.காட்டன் துணியினால் பாலை பிழிந்து எடுக்கவும்.
கஞ்சி செய்வது எப்படி?
1.பானை மிதமான தீயில் வைத்து ராகி பால் சேர்க்கவும்.
2.கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
3.இதமாக பரிமாறவும்.
ராகி பாலினை குழந்தைகளுக்கு இரவு உணவாக கொடுப்பதனை விட காலை மற்றும் மதிய நேர உணவாக கொடுப்பது சிறந்தது.ராகியினை நன்கு முளை கட்டியும் பால் எடுத்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply