Ragi Sweet Paniyaram: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான ஸ்னாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த சாக்கோ ராகி பணியாரத்தை நீங்கள் செய்து பார்க்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கடைகளில் தற்போது விற்கப்படும் விதவிதமான பேக்கரி ஐட்டங்கள் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ்கள் ஆகியவற்றை தரக்கூடாது என்ற விழிப்புணர்வு தற்பொழுது தாய்மார்கள் இடையே பெருகி வருகிறது.
பழங்கள் கொடுப்பது குழந்தைகளின் உடல்நலத்திற்கு சிறந்தது தான் என்றாலும் தினமும் பணம் கொடுத்தால் நம் குழந்தைகளுக்கு போர் அடித்து விடும் தானே.
அதற்காக தான் அவ்வப்பொழுது நான் உங்களுக்கு சிறுதானியங்களை வைத்து ஆரோக்கியமாக ஸ்நாக்ஸ் எப்படி செய்து கொடுப்பது என்பதை பற்றி கூறி வருகின்றேன்.
அந்த வரிசையில் நாம் இன்று பார்க்க போகும் ரெசிபி ஆரோக்கியமான சாக்கோ ராகி பணியாரம். சாக்லேட் என்றாலே உடலுக்கு கெடுதி தானே அதை வைத்து பணியாரம் செய்தால் ஆரோக்கியமானதா என்று தானே யோசிக்கின்றீர்கள்.
இயற்கையான கோகோ பவுடரும் மற்றும் ராகியும் கலந்த சாக்கோ ராகி மாவை வைத்து தான் இந்த பணியாரம் செய்யப் போகின்றேன்.
Ragi Sweet Paniyaram:

Ragi Sweet Paniyaram:
இதை பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- ராகியில் கல்சியம் சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகளின் எலும்புகளுக்கு பலம் அளிக்கக் கூடியது.
இதில் மேலும் கலந்துள்ள பாதாம் மற்றும் கோக்கோ பவுடர் போன்றவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஆரோக்கியம் அளிக்க கூடியது. - பாதாமில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளதால் இவை உடலுக்கு நன்மை செய்கின்றன.
- கோகோ பவுடரில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் கலந்துள்ளதால் இதுவும் நன்மை செய்கின்றது.
- ராகியில் இயற்கையாக இருக்கக்கூடிய இரும்பு சத்து உடலுக்கு ரத்த சோகை வராமல் தடுக்க கூடியது.
- இவற்றில் இயற்கையாக நிறைந்துள்ள நார் சத்துக்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- மேலும் இதில் பிரசர்வேட்டிவ்ஸ், செயற்கை ரசாயன பொருட்கள், நிறமிகள் எதுவும் இல்லை என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுப்பதற்கு சிறந்தது.
Ragi Sweet Paniyaram
- பழுத்த வாழைப்பழம்-1
- சாக்கோ ராகி பேன் கேக் பவுடர்-2 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு- 1 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய்- 2 டேபிள்ஸ்பூன்
- சர்க்கரை- 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்- 1/2 கப்
- ஏலக்காய் தூள்- இம்மியளவு
- நெய்- தேவையான அளவு
Ragi Sweet Paniyaram
செய்முறை
- ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நாட்டு சக்கரை அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி சர்க்கரை கரையும் வரை சூடாக்கவும்.
- ஒரு வாழைப்பழத்தை உரித்து நன்கு மசித்து கொள்ளவும்.
- 2 டேபிள் ஸ்பூன் சாக்கோ ராகி மிக்ஸ், 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- சர்க்கரைப்பாகுடன் இதை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
- பணியார குழியை சூடாக்கி லேசாக நெய் தடவி மாவை ஊற்றவும்.
- பொன்னிறமானவுடன் திருப்பி விடவும்.
- சாக்லேட் ராகி பணியாரம் ரெடி.
கோகோ பவுடர் மற்றும் ராகி ஆகியவற்றின் நற்குணங்களுடன் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு தாராளமாக நாம் கொடுக்கலாம்.
குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் சாப்பிடுவது ஏற்ற சுவையான ஸ்னாக்ஸ் ஆக இது இருக்கும்.
வீட்டிலேயே ராகி பவுடர் மாவை தயாராக வைத்துக் கொண்டால் வாழைப்பழத்தை மட்டும் பிசைந்து எளிதாக இந்த ரெசிபி செய்து விடலாம். உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்றால் இதில் நறுக்கிய நட்ஸ் போன்றவற்றையும் சேர்த்து செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Ragi Sweet Paniyaram
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. இனிப்புச் சுவைக்கு சக்கரைக்கு பதிலாக வேறு ஏதேனும் சேர்க்கலாமா?
நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கருப்பட்டி பால், கோக்கனட் சுகர் போன்றவற்றையும் சேர்த்து கலக்கி கொடுக்கலாம்.
2. தண்ணீருக்கு பதிலாக பால் சேர்ந்து கலந்து கொடுக்கலாமா?
தாராளமாக கொடுக்கலாம். ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகள் என்றால் தண்ணீருக்கு பதிலாக பால் சேர்த்து மிக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் சேர்த்து கொடுத்தாலே போதுமானது.
3. இவற்றில் வேறு ஏதேனும் கலந்து கொடுக்கலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த நட்ஸ் வகைகளை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து கலக்கி சுட்டுக் கொடுக்கலாம்.
Leave a Reply