chola paniyaram recipe in tamil: வழக்கமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான புரதம்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை சிறுதானியங்கள்.நம் முன்னோர்களும் பெரும்பாலும் சிறுதானியங்களையே பிரதான உணவாக உட்கொண்டனர்.ஆனால் நம்மில் பலரும் இன்று மறந்துபோனவைதான் சிறுதானியங்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நம் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை சுவையாக சமைத்து கொடுத்தால் உண்ணாமல் இருக்க மாட்டார்கள்.அதற்கான ரெசிபிதான் இந்த சோளப்பணியாரம். ஆங்கிலத்தில் கிரேட் மில்லெட் எனப்படும் சோளம் எண்ணற்ற நன்மைகளை உள்ளடக்கியது.
![chola paniyaram recipe in tamil chola paniyaram recipe in tamil](https://tamil.mylittlemoppet.com/wp-content/uploads/2020/06/Pin-no-name.jpg)
சோளத்தின் நன்மைகள்
- நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
- எலும்புகளை பலப்படுத்துகின்றது.
- காலைநேர உணவாக சோளத்தை எடுத்து கொள்வது உடலுக்கு தேவையான சக்தியினை அளிக்கின்றது.
- இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கின்றது.
Chola Paniyaram Recipe in Tamil:
- தோசை மாவு – 1 கப்
- சோளம் (ஊறவைத்தது) – 1 கப்
- வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
- கொத்தமல்லி -1 கொத்து பொடியாக நறுக்கியது
இதையும் படிங்க: சத்துமாவு பர்பி
Chola Paniyaram Recipe in Tamil:
செய்முறை
1.சோளத்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவவேண்டும்.
2.ஊறவைத்த சோளத்தை மிக்சியில் அரைக்கவும்.
3.தோசை மாவு மற்றும் சோளமாவு இரண்டையும் ஒன்றாக கலக்கவும்.
4.நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்க்கவும்.
5.பணியார சட்டியினை சூடாக்கவும்.
6.குழிகளில் எண்ணெய் சேர்க்கவும்.
7.ஓவ்வொரு குழியிலும் மாவினை நிரப்பவும். பணியாரம் உப்பி வருமென்பதால் குழியினை முக்கால் அளவு நிரப்பவும்.
8.பணியாரம் பொன்னிறமாக உப்பி வரும்வரை காத்திருக்கவும்.
9.மறுபுறம் திருப்பி போடவும்.
10.பொன்னிறமாகும் வரை காத்திருக்கவும்,பணியாரத்தை சட்னியுடன் பரிமாறவும்.
இதையும் படிங்க: கோதுமை ஸ்ட்ராவ்பெரி பனானா பான்கேக்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply