Ragi Uttapam: குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்கக்கூடிய சத்தான ரெசிபி தான் இந்த ராகி ஊத்தாப்பம். பொதுவாகவே உளுந்து மாவு தோசையை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இது எப்படி கொடுக்கலாம் என்று நீங்கள் யோசித்தால் இந்த ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் திரும்பவும் கேட்டு வாங்கி உண்பார்கள். சிறு தானியத்தில் இருக்கும் நன்மைகளின் காரணமாக நம்மில் பலரும் நம் முன்னோர்களைப் போலவே சிறுதானியங்களை உணவில் சேர்க்க ஆரம்பித்து இருக்கின்றோம்.
விதவிதமான நோய்கள் குடிகொண்டு விட்டால் இந்த காலகட்டத்தில், நமக்கு பின்னால் வரும் சந்ததிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அம்மாவும் பார்த்து பார்த்து உணவினை குழந்தைகளுக்கு தருகின்றோம்.
ஒவ்வொரு வேலையும் உணவு கொடுக்கும் பொழுதும் இது குழந்தைகளுக்கு சத்தானதா? இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுமா? என்பதே எல்லா அம்மாக்களின் மனதில் ஓடும் எண்ணம் ஆகும். பொதுவாக சிறுதானியங்களை பழங்காலத்தில் நாம் செய்தது போல் கூழாக செய்து கொடுத்தால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள்.
அதன் சுவை அவர்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். அதற்காகத்தான் நாம் சிறுதானியங்களை கொடுத்து பழக்கும் பொழுது குழந்தைகளின் சுவைக்கு ஏற்றவாறு நாம் செய்து கொடுத்தால் திரும்பவும் வாங்கி உண்ண ஆரம்பிப்பார். இதனால் அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும், நமக்கு சத்தான உணவை கொடுத்து விட்டோம் என்ற திருப்தியும் ஏற்படும். இந்த ராகி ஊத்தாப்பத்தினை கண்டிப்பாக உங்கள் வீடுகளில் முயற்சி செய்து பாருங்கள்.
Ragi Uttapam:
Ragi Uttapam:
ராகியின் நன்மைகள்
நம் முன்னோர்கள் உட்கொண்ட பழம் பெரும் தானியமான கேழ்வரகு எனப்படும் ராகியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.
- ராகியில் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, நார்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி மற்றும் எளிதான ஜீரணம் ஆகியவற்றிற்கு உதவி செய்கின்றது.
- ராகியில் எலும்புகளின் வளமான வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் அதிகமாக உள்ளது. எனவே குழந்தைகளின் வளர்ந்து வரும் எலும்பிற்கு தேவையான ஊட்டத்தினை அளிக்கின்றது. மேலும் எதிர்காலத்தில் எலும்பு சம்பந்தமான நோய்களான ரிக்கெட்ஸ் போன்றவை வராமல் தடுக்கவும் உதவுகின்றது.
- ராகியில் இயற்கையாகவே நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால், குழந்தைகளுக்கு உணவு எளிதில் செரிமானம் ஆகும்.
- குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது. மேலும் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கக் கூடியது.
- இதில் குளூட்டன் இல்லை. எனவே குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கோதுமை போன்ற உணவுகள் உபயோகிக்க முடியாது. எனவே ராகி அதற்கான நல்ல மாற்றாக இருக்கும்.
- குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான நல்ல எனர்ஜி தரக்கூடியது. ஏனென்றால் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கக் கூடியது.
- குழந்தைகளின் உடல் எடை அதிகமாகாமல் இருக்க ராகி நல்ல உணவாகும். இந்த ராகியின் குணமானது உடம்பில் உள்ள குளுக்கோஸ் அளவினை சீராக வைக்கவல்லது.
- கேழ்வரகில் இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் என்பதால் நோய் ஏற்ப்பு மண்டலத்தை வலுவாக்க கூடியது.
Ragi Uttapam:
- ராகி மாவு- ஒரு கப்
- அரிசி மாவு- கால் கப்
- கேரட், பீன்ஸ், குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) – கால் கப்
- நறுக்கிய வெங்காயம்- கால் கப்
- சீரகம்- கால் டீ.ஸ்பூன்
- பெருங்காயம்- ஒரு சிட்டிகை
- உப்பு- சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- எண்ணெய்அல்லது நெய்
Ragi Uttapam:
செய்முறை
1.ஒரு பவுலில் ராகி மாவு, அரிசி மாவு, நறுக்கிய காய்கறிகள், வெங்காயம்,, சீரகம் பெருங்காயத்தூள், மற்றும் உப்பு சேர்க்கவும்.
2.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கலக்கவும்.
3.தோசை கல்லை சூடாக்கவும். சாதாரணமாக ஊத்தாப்பம் சுடுவது போன்று சற்று கட்டியாக மாவினை ஊற்றவும்.
4.நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும்.
5.குழந்தைகளுக்கான சுவையான ஊத்தாப்பம் ரெடி.
Ragi Uttapam:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு ராகி கொடுக்கலாமா?
ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் நீங்கள் ராகியினை, வறுத்து பொடி செய்து கஞ்சியாக காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பெரிய குழந்தைகளுக்கு இந்த ஊத்தப்பத்தினை செய்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு ராகி கொடுத்தால் செரிமானம் ஆகுமா?
ராகியில் இயற்கையாகவே நார் சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதனை கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படாது. எனினும் நீங்கள் முதன்முதலாக கொடுக்கின்றீர்கள் என்றால் முதலில் சிறிதளவு கொடுத்து சரிபார்த்துவிட்டு பின்பு அளவினை அதிகரிக்கலாம்.
குழந்தைகளுக்கு ராகி கொடுத்தால் வாயு கோளாறு ஏற்படுமா?
சில குழந்தைகளுக்கு ராகி கொடுக்கும் பொழுது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயு கோளாறு போன்றவை ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு மலச்சிக்கலும் ஏற்படலாம்.
எனவே ராகி கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் உங்களது குழந்தைகள் நல மருத்துவரிடமும் ஆலோசித்து விட்டு அதன் பிறகு கொடுக்க வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளவும்.
குழந்தைகளுக்கு இரவினில் ராகி உணவினை தரலாமா?
நீங்கள் இரவினில் ராகியை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் நீங்கள் முதன்முதலாக கொடுக்கின்றீர்கள் என்றால் பகல் நேரத்தில் கொடுப்பதே சிறந்தது.
ராகி ஊத்தாப்பம்
Ingredients
- · ராகிமாவு- ஒரு கப்
- · அரிசிமாவு- கால் கப்
- · கேரட்,பீன்ஸ், குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) – கால் கப்
- · நறுக்கியவெங்காயம்- கால் கப்
- · சீரகம்-கால் டீ.ஸ்பூன்
- · பெருங்காயம்-ஒரு சிட்டிகை
- · உப்பு-சுவைக்கேற்ப
- · தண்ணீர்- தேவைக்கேற்ப
- · எண்ணெய்அல்லதுநெய்
Leave a Reply