Rava Toast for kids in Tamil
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உங்களுடைய குட்டி குழந்தைகளின் காலை உணவை இன்னும் ஆரோக்கியமாக மாற்றணுமா. இதோ உங்களுக்கான ரவா டோஸ்ட்… கிரன்ச்சி, யம்மி ஃபுட் இது. இதை நீங்கள் மாலை நேர ஸ்நாக்ஸாக கூட செய்து கொடுக்கலாம். காலை உணவை கலர்ஃபுல்லாக மாற்றும் ஐடியாதான் இந்த ரவா டோஸ்ட்… ரொம்ப ஈஸியா சமைக்க முடியும்…
ரவா டோஸ்ட் செய்வது எப்படி?
- வறுத்த ரவா – 1 கப்
- பால் கிரீம் – 1 கப்
- துருவிய கேரட் – 1
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
- பொடியாக நறுக்கிய குடமிளகாய் – 1/2
- உப்பு – சிறிதளவு
- மிளகுத்தூள் – சுவைக்காக
- நெய் – சிறிதளவு
- பிரெட் ஸ்லைஸ் – 2 அல்லது 3
செய்முறை
- பிரெட், நெய்யைத் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும்.
- ஒரு பிரெட்டை எடுத்து, அதில் கலந்து வைத்த ரவா கலவையைக் கொஞ்சம் எடுத்து பிரெட்டின் ஒருபுறம் தடவ வேண்டும்.
- தவாவை சூடு செய்து, அதில் நெய்யை ஊற்றித் தடவிக் கொள்ளவும்.
- ரவா கலவையைத் தடவிய பக்கமாகத் தவாவில் போட்டு சுட வேண்டும்.
- லேசான பிரவுன் நிறத்தில் இருபுறமும் வரவேண்டும். அதுவரை பிரெட்டை டோஸ்ட் செய்யவும்.
இதோ உங்கள் செல்ல குழந்தைகளுக்கான டேஸ்டி, ஹெல்தி, ஈஸி ரவா டோஸ்ட் ரெடி…
மற்ற ஸ்நாக்ஸ் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த லின்க்கை க்ளிக் செய்யுங்கள்…ஆரோக்கியமான உணவை செய்து அசத்துங்கள்…குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ், ஆரோக்கியமான தாகவும், சுவையுடனும் இருக்கட்டும்..
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply