Rava Upma Recipe Tamil: குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசை தவிர்த்து ஆரோக்கியமாக வேறு என்ன சிற்றுண்டி கொடுக்கலாம் என்றும் யோசிக்கும் அம்மாவாக நீங்கள் இருந்தால் இந்த ராகி ரவா உப்புமா சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக அமையும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சிறுதானியங்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க வல்லது என்று நாம் அனைவரும் உணர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சிறுதானியம் சேர்ந்த உணவுகளை கொடுப்பது அவர்களின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
ஆனால் அதனை அப்படியே கொடுக்கும் பட்சத்தில் உண்ணும் குழந்தைகள் குறைவு. எனவே, குழந்தைகளுக்கு பிடித்தவாறு அதை சுவையாக எப்படி செய்து தரலாம் என்பதை நாம் காணலாம்.
இந்த ராகி உப்புமாவினை 8 மாத காலம் முதல் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கலாம். இதில் கொடுக்கப்பட்ட காய்கறிகளை தவிர்த்து உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான காய்கறிகளை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

ராகி எனப்படும் கேழ்வரகின் நன்மைகள்:
- ராகியில் புரத சத்து அதிகமிருப்பதால் உடல் பாகங்கள் அனைத்திற்கும் பிராண வாயுவான ஆக்சிஜனை சீராக அனுப்புவதற்கு உதவி செய்கின்றது
- இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உணவானது எளிதில் ஜீரணமாக உதவுகிறது.
- குழந்தைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு இது காரணமாக உள்ளது .
- உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துவதற்கு உதவுகின்றது மேலும் இதில் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
- உடல் சூட்டை தணித்து உடலின் வெப்பநிலையை சரியாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- நரம்புகளை பலப்படுத்தும் தன்மை இருப்பதால் மனதினை சீராக வைத்திருக்க உதவுகின்றது.
- இதிலுள்ள லைசின் போன்ற வேதிப் பொருட்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்த்து தோல் பளபளப்பாக இருப்பதற்கு உதவி செய்கின்றது.
ரவையின் நன்மைகள்
- ரவையில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை அளிக்கின்றது .
- மேலும் இதில் வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
- உப்புமாவை காலை உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- ரவையில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்திற்கு நன்மை அளிக்கக் கூடியது. எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிதான காலை உணவாக அமைகின்றது.
- மேலும் இதில் நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறும் பொழுது குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவையும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
Rava Upma Recipe Tamil:
தேவையானவை
- ராகி பவுடர்- ஒரு கப்
- ரவை- அரை கப்
- வெங்காயம்- 1 (நறுக்கியது)
- தக்காளி- 1 (நறுக்கியது)
- பீன்ஸ் -நறுக்கியது (விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
- கடுகு -அரை டீ.ஸ்பூன்
- எண்ணெய் -1 டீ.ஸ்பூன்
- கேரட் -1 (நறுக்கியது)
- மிளகாய்-1 (பொடியாக நறுக்கியது)
Rava Upma Recipe Tamil:
செய்முறை
1.பானில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.

2.அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.

3.பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.

4.அதன் பின் நறுக்கி வைத்த காய்கறிகள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.

5.தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.அதன்பின் ரவை மற்றும் ராகி பவுடர் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.


6.ராகி மற்றும் ரவா நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.



7.ரவை வெந்ததும் அடுப்பை அணைத்து மிதமான தீயில் வைத்து பரிமாறவும்.

குறிப்பு:8 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் பொழுது மிளகாய் மற்றும் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.ராகியை உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
ராகியில் உடலுக்கு நன்மை அளிக்கும் கால்சியம்,பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.மேலும் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.
2.ராகி குழந்தைகளுக்கு நல்லதா?
ராகியில் கால்சியம் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை அளிக்கின்றது .மேலும் எலும்புகளுக்கு வலுவலிக்க கூடியது.
3.இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு ராகி கொடுக்கலாமா?
முதன்முதலாக வைக்கும்போது குழந்தைகளுக்கு பகல் நேரத்தில் கொடுப்பதே சிறந்தது. நன்கு ஒத்துக்கொண்ட பின் நீங்கள் இரவு உணவாக கொடுக்கலாம்.
4.குழந்தைகளுக்கு ரவை எப்பொழுது அறிமுகப்படுத்தலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் நிறைவடைந்தவுடன் நீங்கள் ரவை கொடுக்க பழகலாம்.குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதால் 6 மாத காலத்திற்கு பிறகு கொடுப்பதே சிறந்தது.
ராகி ரவா உப்புமா
Ingredients
- · ராகிபவுடர்- ஒரு கப்
- · ரவை-அரை கப்
- · வெங்காயம்-1 (நறுக்கியது)
- · தக்காளி-1 (நறுக்கியது)
- · பீன்ஸ்-நறுக்கியது (விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
- · கடுகு-அரை டீ.ஸ்பூன்
- · எண்ணெய்-1 டீ.ஸ்பூன்
- · கேரட்-1 (நறுக்கியது)
- · மிளகாய்-1(பொடியாக நறுக்கியது)
Notes
- பானில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
- பின்பு தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அதன் பின் நறுக்கி வைத்த காய்கறிகள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.அதன்பின் ரவை மற்றும் ராகி பவுடர் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
- ராகி மற்றும் ரவா நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- ரவை வெந்ததும் அடுப்பை அணைத்து மிதமான தீயில் வைத்து பரிமாறவும்.
- குறிப்பு:8 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் பொழுது மிளகாய் மற்றும் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.
Leave a Reply