Raw Kerala Banana Dosai for Babies: நேந்திரம்பழமும்,கோதுமையும் கலந்த குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தோசை ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நம் வீடுகளில் டிபன் என்றதுமே சட்டென்று நினைவிற்கு வருவது இட்லியும்,தோசையும் தான். ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும்போது ஏதாவது ஆரோக்கியமானதாக தரவேண்டும் என்பதையே தாயுள்ளம் விரும்பும்.எனவே இட்லி,தோசை தயாரிக்கும்போது சட்னியாவது ஆரோக்கியமாக தரவேண்டும் என்று நாம் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுப்போம்.
ஆனால்,தோசையே ஆரோக்கியமாக,குழந்தைகளுக்கு வித்தியாசமான பேஸ்டுடன் செய்து கொடுக்க முடியும் என்றால் நமக்கு சந்தோசம் தானே. நேந்திரம் பழம் எனப்படும் கேரளா வாழைப்பழத்துடன்,கோதுமையும் சேர்ந்த ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த தோசை.
இதற்கு நீங்கள் அதிகமாக மெனக்கிட தேவையில்லை. ரா கேரளா பனானா பவுடர் எனப்படும் நேந்திரம் பழம் பவுடர் இருந்தாலே போதும் எளிதாக செய்து விடலாம். நேந்திரம்பழம் பவுடரானது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுப்பதுடன்,குழந்தைகளுகளின் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கவல்லது.
கோதுமையில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை அளிக்கவல்லது. நீங்கள் விருப்பப்பட்டால் இதில் குழந்தைகளுக்கு பிடித்தமான காய்கறிகளின் சேர்த்துக் கொள்ளலாம்.
Raw Kerala Banana Dosai for Babies
Raw Kerala Banana Dosai for Babies:
- கோதுமை மாவு -1 டே.ஸ்பூன்
- கேரளா பனான பவுடர்-5 டே.ஸ்பூன்
- தயிர் – 1 டே.ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் -2 டீ.ஸ்பூன்
- கேரட்- 2 டீ.ஸ்பூன்
- குடை மிளகாய் -1 டீ.ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் -1 டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
இதையும் படிங்க: நேந்திரம் பழம் பொடியினை வீட்டிலேயே செய்வது எப்படி?
செய்முறை
1.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவையும்,கேரளா பனானா பவுடரையும் எடுத்துக் கொள்ளவும்.
2.தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3.அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
4.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
5.ஐந்து நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
6.அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம்,குடைமிளகாய்,கேரட் அல்லது உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கிளறவும்.
7.தோசை சட்டியில் மாவினை ஊற்றவும்.
8.இருபுறமும் நன்றாக வெந்ததும் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.
நேந்திரம்பழ கோதுமை தோசையினை ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.8 மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமென்றால் உப்பு சேர்க்காமல் கொடுக்கலாம். இதில் கார்போஹைட்ரேட்,பொட்டாசியம்,கால்சியம்,இரும்புசத்துக்கள்,பாஸ்பரஸ்வைட்டமின்கள் ஏ,சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Raw Kerala Banana Dosai for Babies
நேந்திரம் பழ பொடியினை வீட்டிலேயே செய்ய நேரம் இல்லாத அம்மாக்களா நீங்கள்? கவலை வேண்டாம்.நாங்களே பிரெஷ்ஷாக தயாரித்து உங்களுக்கு கொடுக்கின்றோம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான நேந்திரம் பழம் கோதுமை தோசை
Notes
- கோதுமை மாவு -1 டே.ஸ்பூன்
- கேரளா பனான பவுடர்-5 டே.ஸ்பூன்
- தயிர் - 1 டே.ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் -2 டீ.ஸ்பூன்
- கேரட்- 2 டீ.ஸ்பூன்
- குடை மிளகாய் -1 டீ.ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் -1 டீ.ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவையும்,கேரளா பனானா பவுடரையும் எடுத்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
- ஐந்து நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
- அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம்,குடைமிளகாய்,கேரட் அல்லது உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கிளறவும்.
Leave a Reply