Sali veetu vaithiyam-Omam othadam: குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டாலே மிகவும் சிரமம்தான்.குணமாவதற்குள் அவர்களை மிகவும் சோர்வடைய வைத்து விடும்.சளியின் தொடக்க நிலையிலேயே குணப்படுத்தி விட்டால் முற்றி போகாமல் தடுக்கலாம்.சளி மற்றும் இருமலுக்கான ஏராளமான வீட்டு வைத்தியங்களை நாம் இதற்கு முன் பார்த்திருக்கின்றோம்.ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போகின்றது ஒத்தட வைத்தியம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நாம் சமையலுக்கு அன்றாடம் உபயோகிக்கும் நறுமண பொருட்களில் முக்கியமான ஒன்றுதான் ஓமம்.இது எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்டுகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்கின்றது.மேலும் இதில் ஆன்டி-பேக்டீரியல் எனப்படும் கிருமி நாசினி அதிகமிருப்பதால் சளியை எதிர்த்து போராடும் திறனுடையது.
குழந்தைகளுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் இந்த முறைகளை பின்பற்றலாம்…
- லேசான ஜலதோஷம் (மூக்கில் இருந்து நீர் வடிதல்)
- லேசான இருமல்
- தொண்டை வலி
- மூக்கடைப்பு
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு ஓமத்தை ஒத்தட பொட்டலத்தை தூங்கும் பொழுது தலைக்கு அருகில் வைக்கலாம்.அதில் இருந்து வரும் நறுமணம் மூக்கடைப்பு,தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணமாக்கும்.
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு நெஞ்சு,முதுகு மற்றும் பாதம் போன்ற பகுதிகளில் ஒத்தடமாக வைக்கும் பொழுது நல்ல நிவாரணம் கிடைக்கும்.ஒத்தடம் கொடுக்கும் பொழுது அதிக சூடு இல்லாமல் வெது வெதுப்பாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: டயபர் அரிப்பிற்கான எளிமையான 10 வீட்டு வைத்தியம்.
சளியை நீக்கும் ஓம ஒத்தடம்
தேவையான பொருட்கள்
- ஓமம்
- முஸ்லின் துணி
Sali veetu vaithiyam-Omam othadam:
செய்முறை
1.கடாயை சூடாக்கவும்.
2.ஓமத்தை அதில் போடவும்.
3.நல்ல மனம் வரும்வரை வறுக்கவும்.
4.துணியை விரித்து அதில் ஓமத்தை கொட்டவும்.
5.சிறு மூட்டை வடிவில் அதை கட்டவும்.
6.ஓம ஒத்தடம் ரெடி.
கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.
- மூக்கில் இருந்து நீர் வடியும் போது அது மஞ்சள் அல்லது அடர் பச்சை நிறத்தில் இருந்தால்
- அதிகளவிலான சளி வெறியேறும் போது (மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறினால்)
- அளவு கடந்த காய்ச்சல்
- அலர்ஜியின் காரணமாக உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால்
- மூச்சை இழுப்பதில் சிரமம்
- சுவாசிக்கும் நேரம் அதிகரித்தால்.
இதையும் படிங்க: கொத்தமல்லி வெஜிடபிள் ரைஸ்
குழந்தைகளுக்காக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான ஆர்கானிக் உணவுகள்…முற்றிலும் இயற்கையானது!
Leave a Reply