Sarkkrai valli kilangu dosai: சர்க்கரை வள்ளி கிழங்கு என்பது நம் ஊர்களில் குறிப்பிட்ட சீசனுக்கு கிடைக்கும் சத்தான கிழங்கு வகையாகும்.எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை நாம் ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது வழக்கம்.ஆனால் இதை வைத்து தோசை வார்க்க முடியும் என்பது நாம் பலரும் அறியாத ஒன்று.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆம்!சில குழந்தைகள் கிழங்காக அவித்து கொடுக்கும் பொழுது உண்ண மாட்டார்கள்.அவர்களுக்கு நாம் சர்க்கரை வள்ளி கிழங்கு தோசையினை செய்து கொடுக்கலாம்.
இதையும் படிங்க : இன்ஸ்டன்ட் சப்பாத்தி லட்டு
Sarkkrai Valli Kilangu Dosai:
- சர்க்கரை வள்ளி கிழங்கு – 75 கிராம்
- தோசை மாவு – 1 கப்
- எண்ணெய் அல்லது நெய் – 1 டீ.ஸ்பூன்
- உப்பு -தேவையானளவு
கார சுவைக்கு தேவையானவை
- வெங்காயம்
- கொத்தமல்லி
- துருவிய கேரட்
இனிப்பு சுவைக்கு தேவையானவை
- வெல்லம்- 1 டே.ஸ்பூன்
சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை
செய்முறை
1.சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக கழுவி கொள்ளவும்.
2.தோலை உரிக்கவும்.
3.சர்க்கரை வள்ளி கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
4.சர்க்கரை வள்ளி மிளகுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
5.அரைத்த கிழங்குடன் தோசை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
6.மாவை சிறிது நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.
7.தோசை கல்லை அடுப்பில் வைக்கவும்.
8.மாவை கல்லில் ஊற்றி தோசை வார்க்கவும்.
9.தோசை சுற்றி சிறிதளவு நெய் சேர்க்கவும்.
10.தோசை வெந்ததும் திருப்பி போடவும்.
11.சட்னி அல்லது சாஸுடன் பரிமாறலாம்.
கார தோசைக்கு
1.மேலே கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம்,கொத்தமல்லி மற்றும் கேரட்டை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
2.தோசை வார்க்கவும்.
இனிப்பு சுவைக்கு
1.வெல்லத்தை நுணுக்கி தோசை மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
2.தோசை வார்க்கவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கில் இயற்கையாகவே வைட்டமின் பி,வைட்டமின் டி, இரும்பு சத்துக்கள் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.
மேலும் இது மலச்சிக்கலை நீக்க வல்லது.குழந்தைகள் நன்கு விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்க கூடியது.
இதையும் படிங்க : குழந்தைகளுக்கான பூசணி அல்வா
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply