Sathu Maavu for Babies in Tamil: நமது குழந்தை கொழு கொழுவென்றும்,ஆரோக்கியமாகவும்இருக்கவேண்டுமென்பது எல்லா பெற்றோரின் விருப்பம். அப்படிதானே? அப்படியென்றால் எங்களின் சத்து மாவு பவுடர் உங்களின்சரியான தேர்வாக இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இப்பொழுது மார்க்கெட்டுகளில் வகை வகையான சத்து மாவு பவுடர்கள் உலா வருகின்றன.ஆனால், நமது குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு ஒன்றை வீட்டிலேயே தயாரிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஹோம்மேட் செர்லாக் /ஹெல்த் மிக்ஸ் பவுடர்/குழந்தைகளுக்கான சத்துமாவு பவுடர்
தனிக்குடும்பத்தில் வசிக்கும் பெண்களுக்கு இந்த சத்துமாவினை செய்வது கடினமான பணியாக இருக்கலாம். ஆனால், இந்த சத்துமாவானது வறுப்பதிலிருந்து அரைப்பதுவரை 1 மணி நேரத்தில் செய்து முடிக்கலாம். நம்ப முடியவில்லைதானே? முதலில் தயாரிப்பதற்கு தேவையான எல்லா பொருள்களையும் ரெடியாக வைத்து கொள்ளவும். அடுப்பில் இரண்டு பர்னரிலும் இரண்டு கடாய் வைத்து பொருள்களை வறுக்கவும். தானியங்கள் கருகாமல் கவனமாக வறுக்கவும்.வறுத்து முடித்தவுடன் ஆற வைத்து அரைக்கவும். நீங்கள் வெளியில் அரைக்க கொடுத்தால் சத்து மாவை அரைப்பதற்கு முன்பு 1 கிலோ கோதுமை அல்லது அரிசியை கொடுத்து முதலில் அரைத்து கொள்ளவும்.ஏனெனில் ,மெஷினில் ஏற்கனவே மசாலா,வத்தல் ஆகியவற்றை அரைத்திருக்கலாம் .அவை உங்கள் குழந்தைகளுக்கான ஹெல்த் பவுடரில் கலக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் உங்கள் நேரத்தை சேமிக்க விரும்பினால், மேலும் தேர்ந்தெடுத்த தானியங்களை வாங்குவது, வறுப்பது மற்றும் அரைப்பது ஆகியவை கடினம் என்று நீங்கள் நினைத்தால், என்னால் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹோம் மேட் சத்து மாவு ஹெல்த் மிக்ஸை இங்கு ஆர்டர் செய்யலாம்.நீங்கள் ஆர்டர் செய்த பின், ஃப்ரெஷ்ஷாக இதைத் தயாரித்து வீட்டுக்கே டெலிவரி செய்துவிடுகிறோம்.
குழந்தைக்கு தேவையான ஹோம் மேட் செர்லாக் அல்லது சத்துமாவு அல்லது ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பது எப்படி?
முதல் நாள் 2 டேபிள் ஸ்பூன் சத்து மாவுக்கஞ்சி கொடுக்கவும். பின்பு அளவை மெது மெதுவாக அதிகரிக்கவும்.
Sathu Maavu for Babies in Tamil
சத்து மாவு தயாரிக்க தேவையான தானியங்களை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.நான் கீழ்கண்டவற்றை உபயோகித்து சத்துமாவு தயாரித்துள்ளேன்.நீங்கள் அதே பொருள்களை பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், எக்ஸ்ட்ராவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் நீங்கள் விருப்பப்பட்டால் பயன்படுத்தி கொள்ளலாம்.
- வெள்ளை அல்லது சிவப்பு அரிசி – 1.5 கப்
- கருப்பு உளுந்து -1 கப்
- பாசி பருப்பு-1 கப்
- பொட்டு கடலை-1 கப்
- பச்சை பயிறு -1 கப்
- மசூர் பருப்பு -1 கப்
- கோதுமை ரவை -1 கப்
- சவ்வரிசி -1/2 கப்
- கொள்ளு பருப்பு -1/2 கப்
- மக்காச்சோளம் -1/2 கப்
- பாதாம் -1/2 கப்
- முந்திரி -1/2 கப்
- ஏலக்காய் -10
மற்ற தானியங்கள் (அடிஷனல்)
- ராகி – நான் ராகி சேர்க்கவில்லை.ஏனென்றால், முளைகட்டிய ராகி பவுடரை நான் தனியாக தயாரித்து வைத்துள்ளேன்.
- வேர்கடலை
- கம்பு
- சோளம்
- பார்லி
- ஓமம் அல்லது சீரகம் (ஏலக்காயிற்கு பதிலாக)
- சோளம்
- சோயா பீன்ஸ்
- கொண்டை கடலை
மாவிற்கு ஏற்றவாறு பொருட்களை அதிகரித்து கொள்ளலாம். தானியங்களை முளைகட்டி, வறுத்தும் பொடியாக்கலாம். முளைக்கட்டிய மாவானது மிகவும் ஆரோக்கியமானது,சத்துள்ளதுமாகும். ஆனால், இது முழுமையாக 2 நாட்கள் எடுத்து கொள்ளும்.
சத்து மாவு தயாரிக்க எடுத்து கொள்ளும் தானியமானது சுத்தமானதாகவும், உலர்த்ததாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால், பவுடர் சீக்கிரம் கெட்டுபோய்விடும்.
Sathu Maavu for Babies in Tamil
செய்முறை
1.எல்லா தானியங்களையும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, கழுவி காய வைக்கவும்.
தானியங்களை கீழ்கண்டவாறு வறுக்கவும்
அரிசி
அரிசி உப்பி வரும் வரை வறுக்கவும்
பருப்பு
பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
ஜவ்வரிசி
மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்
கோதுமை ரவை
பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
கொள்ளு பயிறு
காய்ந்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்
பொட்டு கடலை
மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்
பச்சை பயிறு
பச்சை நிறத்திலிருந்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
மக்காச்சோளம்
பொன்னிறமாகும் வரை அல்லது நொறுங்கும் வரை வறுக்கவும்
பாதாம் மற்றும் ஏலக்காய்
நறுமணம் நீங்கும் வரை வறுக்கவும்
முந்திரி
பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
2.வறுத்து முடித்த பின் ஆற வைக்கவும்.
3.வறுத்த தானியங்களை மிக்ஸியில் அல்லது மாவு மெஷினில் பவுடராக்கவும்.
4.மாவை நன்றாக சலிக்கவும்.
5.சலித்த மாவை காற்று புகாத பாட்டிலில் அடைக்கவும். குறைந்தது 4 முதல் 6 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
Sathu Maavu for Babies in Tamil:
குழந்தைகளுக்கான சத்து மாவு கஞ்சி அல்லது ஹெல்த் மிக்ஸ் கஞ்சி செய்வது எப்படி?
2 ஸ்பூன் சத்து மாவு பவுடரை தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடங்கள் சமைக்கவும். இனிப்பு சுவைக்கு பழக்கலவையை இதனுடன் சேர்க்கலாம்.
சிறுவர்களுக்கான சத்து மாவு கஞ்சி அல்லது ஹெல்த் மிக்ஸ் கஞ்சி செய்வது எப்படி?
1 கப் மாவில் 1/2 கப் தண்ணீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சத்து மாவை சேர்க்கவும். கட்டி இல்லாமல் கலக்கவும். மிதமான சூட்டில் சமைக்கவும். இனிப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்.
1 கப் தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். மிதமான சூட்டில் சமைக்கவும். சமைத்ததும் அதனுடன் மோர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து இதமாக பரிமாறவும்.
உங்கள் குழந்தையின் சத்துமாவு பவுடரை மேலும் ஹெல்த்தியாக்க ட்ரை பிரூட்ஸ் பவுடரை சேர்க்கலாம்.
உங்களது பிஸியான வேலைகளுக்கிடையில் சத்துமாவு எப்படி செய்வது என்ற யோசிக்கின்றீர்களா ?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
ஹோம் மேட் செர்லாக் தானியங்களில் உள்ள சத்துக்கள்
தானியங்கள் | சத்துக்கள் |
அரிசி | நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட் |
கருப்பு உளுந்து | புரோட்டீன் மற்றும் வைட்டமின்-B |
மைசூர் பருப்பு | புரோட்டீன்,பைபர்,அயர்ன் மற்றும் ஃபோலேட் |
குதிரை கொள்ளு | புரோட்டீன்,அயர்ன், கால்சியம் மற்றும் மாலிப்டினம் |
கோதுமை ரவை | கார்போ ஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் மெக்னீசியம் |
ஜவ்வரிசி | கார்போ ஹைட்ரேட் மற்றும் ஹை கலோரிபிக் வேல்யூ |
மக்காசோளம் | கார்போ ஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் வைட்டமின்-B6 |
முந்திரி | நல்ல கொழுப்புகள், மெக்னீசியம், வைட்டமின்-B6 மற்றும் புரோட்டீன் |
பாதாம் | நல்ல கொழுப்புகள், புரோட்டீன், கால்சியம் மற்றும் மெக்னீசியம் |
ஏலக்காய் | நார்ச்சத்துக்கள் மற்றும் அயர்ன் |
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்
Leave a Reply