Sathumaavu Beetroot chapathi: குழந்தைகளுக்கு நாம் அன்றாட காலை உணவாக இட்லி,தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றை கொடுப்பது வழக்கம். இப்படி நாம் கொடுக்கும் எல்லா உணவுகளிலும் கார்போஹைட்ரேட்டுகள் தான் நிறைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றையும் சாப்பிட்டு சாப்பிட்டு குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படுவதால் உணவின் மீதும் நாட்டம் குறைந்து விடும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவானது எல்லா ஊட்டச்சத்துக்களும் கலந்ததாக இருக்க வேண்டும். அதேநேரம் குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது சுவை மாறாமல் அவர்களுக்கு பிடித்த வண்ணம் இருக்க வேண்டும். அதற்காக தான் நான் அறிமுகப்படுத்தும் ரெசிபியும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாக மட்டுமல்லாமல் சுவையும் நிறைந்து குழந்தைகளை கவரும் வண்ணத்துடன் இருக்கும்.
இன்று நாம் பார்க்கவிருக்கும் வித்தியாசமான ரெசிபி தான் முளைகட்டிய சத்துமாவு பீட்ரூட் பரோட்டா. பொதுவாகவே சத்து மாவில் பல வகையான தானியங்கள் கலந்து இருக்கும். முளைகட்டிய சத்து மாவில் தானியங்களின் சத்து பல மடங்கு அதிகமாகவே இருக்கும். இதில் தசை மற்றும் எலும்பு வளர்வதற்கு தேவையான அத்தியாவசியமான சத்தான புரோட்டின் சத்து அதிகளவு நிறைந்திருக்கும்.
Sathumaavu Beetroot chapathi:
இத்தனை சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய சத்துமாவுடன், சத்தான காய்கறியான பீட்ரூட்டின் நற்குணங்களும் சேரும் பொழுது குழந்தைகளுக்கான முக்கியமான காலை உணவாக இது இருக்கும்.
முளைகட்டிய சத்துமாவு பீட்ரூட் ட்ரிங்க் மிக்ஸில் நிறைந்துள்ள நன்மைகள்:
- பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் போலேட் எனப்படும் சத்து நிறைந்துள்ளது. இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது.
- முளைகட்டிய சத்துமாவில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் தன்மை உடையது.
- உடலில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. எனவே செல்கள் சிதைவடையாமல் தடுக்கும் தன்மை உடையது.
- பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் நைட்ரேட் எனப்படும் வேதிப்பொருள் உடலுக்குள் செல்லும் பொழுது நைட்ரிக் ஆசிடாக மாறும் தன்மை உடையது. இது மூளை வளர்ச்சிக்கு தேவையான வேதிப்பொருளை வழங்குகின்றது. எனவே குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது.
- முளைக் கட்டிய சத்து மாவில் இருக்கும் அமிலங்கள் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றது. பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் சி எனப்படும் சத்தானது இரும்பு சத்தினை உடல் கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகின்றது
- சத்து மாவில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் இயற்கையான இனிப்பு சுவை குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜி தருகின்றது.
- பீட்ரூட் மற்றும் முளைகட்டிய சத்து மாவில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
Sathumaavu Beetroot chapathi:
Sathumaavu Beetroot chapathi:
- முளைக்கட்டிய சத்துமாவு பீட்ரூட் ட்ரின்க் மிக்ஸர் – 1 கப்
- கோதுமை மாவு – 1 கப்
- சமையல் எண்ணெய்- தேவையான அளவு
- துருவிய பன்னீர்- 100 கிராம்
- நறுக்கிய பச்சை மிளகாய்- 1
- நறுக்கிய வெங்காயம்- 1
- நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
- உப்பு – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா- 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
- ஓமம் – 1 டீஸ்பூன்
- வெள்ளை எள் – மேலே தூவ
செய்முறை
- ஒரு பவுலில் பீட்ரூட் சத்து மாவு மிக்ஸ் மற்றும் கோதுமை மாவு சேர்த்து கலக்கவும்.
- தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
- சப்பாத்தி மாவிற்கு செய்வது போன்று சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- துருவிய பன்னீர், பச்சை மிளகாய், வெங்காயம். இஞ்சி. உப்பு ,கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் ஓமம் சேர்த்து கலக்கவும்.
- உருட்டி வைத்த உருண்டையை சப்பாத்தி போல் தேய்த்து அதில் கலவையை வைத்து நன்கு தேய்க்கவும்.
- தோசை சட்டியில் சப்பாத்தி போல் சுட்டு எடுக்கவும்.
- குழந்தைகளுக்கான சத்தான முளைகட்டிய பீட்ரூட் சப்பாத்தி ரெடி.
- வெள்ளை எள் மேலே தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சப்பாத்தியை குழந்தைகளுக்கு எத்தனை தடவை கொடுக்கலாம்?
முளைகட்டிய சத்து மாவு மற்றும் பீட்ரூட் சேர்ந்துள்ளதால் இதை தினமும் கொடுக்கலாம் குழந்தைகளுக்கு சத்தான உணவாக இருக்கும்.
குழந்தைகளுக்கு பிடித்த வேறு ஏதாவது காய்கறிகளை இதுடன் சேர்க்கலாமா?
இதனுடன் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த சீஸ், உருளைக்கிழங்கு மற்றும் மற்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
பீட்ரூட் சப்பாத்தியை காலை உணவாக கொடுக்கலாமா?
பீட்ரூட் சப்பாத்தியை குழந்தைகளுக்கு காலை உணவாக தாராளமாக கொடுக்கலாம்.
முளைகட்டிய சத்துமாவு பீட்ரூட் சப்பாத்தி
Ingredients
- முளைக்கட்டிய சத்துமாவு பீட்ரூட் ட்ரின்க் மிக்ஸர் - 1 கப்
- கோதுமை மாவு - 1 கப்
- சமையல் எண்ணெய்- தேவையான அளவு
- துருவிய பன்னீர்- 100 கிராம்
- நறுக்கிய பச்சை மிளகாய்- 1
- நறுக்கிய வெங்காயம்- 1
- நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
- உப்பு - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா- 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
- ஓமம் - 1 டீஸ்பூன்
- வெள்ளை எல் - மேலே தூவ
Leave a Reply