Sorakkai Recipes:கோடைக்காலத்தில் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள அவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால், அதே அளவிற்கு குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவிலும் கவனம் வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை நாம் கொடுக்க வேண்டும்.
தண்ணீர் சத்துள்ள பழங்கள் என்றாலே தர்பூசணி,வெள்ளரிக்காய் ஆகியவை நம் நினைவிற்கு வரும்.காய்கறிகளை பொறுத்தவரை சுரைக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகள் கொடுப்பது சிறந்தது.
பொதுவாக சுரைக்காயில் 96% நீர் சத்து அதிகம் உள்ளதால் இது குழந்தைகளுக்கு கோடை காலத்தில் கொடுப்பதற்கு ஏற்ற காய்கறியாகும். அதேசமயம் சுரைக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதோடு அல்லாமல் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்களும் அதிகம்.
எனவே குழந்தைகளுக்கு சுரைக்காய் எவ்வாறெல்லாம் கொடுக்கலாம் என்பதற்கு ஏற்றவாறு ஆரோக்கியமான 3 ரெசிபிகளை இங்கே காணலாம்.
குழந்தைகளுக்கான சுரைக்காய் அல்வா
குழந்தைகளுக்கு ஏதாவது சுவையான ஸ்வீட் செய்து தரவேண்டும் அதேசமயம் நாம் செய்து தரும் ஸ்வீட் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த சுரைக்காய் அல்வா அதற்கு சரியான தீர்வாக அமையும்.
சுரைக்காயில் இயற்கையாவே தண்ணீர் சத்தும்,நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமளிக்கக் கூடியது. இதை நாம் பொரியலாக செய்து கொடுத்தால் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி உண்ண மாட்டார்கள்.
ஆனால் இப்படி செய்து கொடுத்தால் சுரைக்காய் போன இடம் தெரியாது. சுரைக்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இ ஆகியவை நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இந்த வைட்டமின்கள் பெரும் துணையாக அமையும்.
மேலும் இதில் ட்ரை ஃப்ரூட்ஸ் பவுடர் மற்றும் கோக்கனட் சுகர் ஆகியவை சேர்த்துள்ளதால் அல்வாவிற்கு மேலும் சுவை கூடும். ட்ரை ப்ரூட்ஸ் எனப்படும் உலர்பழங்கள் இயற்கையாகவே குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடையை உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்ய வல்லது.
Sorakkai Recipes in Tamil:
தேவையானவை
- சுரைக்காய் துருவியது -1 கப்
- கோக்கனட் சுகர் -கால் கப்
- டிரை ஃப்ரூட் பவுடர்- 1 டே.ஸ்பூன்
- நெய்- 1 டே.ஸ்பூன்
- ஏலக்காய்தூள்- இம்மியளவு
- பால் -முக்கால் கப்
செய்முறை
1.கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
2.சுரைக்காயை அதில் போடவும்.
3.8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
4.பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு கிளறவும்.
5.டிரை ஃப்ரூட் பவுடர், கோக்கனட் சுகர்,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
6.அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
7.குழந்தைகளுக்கான சுவையான சுரைக்காய் அல்வா ரெடி.
வேகவைத்து மசித்த சுரைக்காய் (அல்லது) சுரைக்காய் கூட்டு
Sorakkai Recipes for rice,Sorakkai Recipes for Chapathi:
- சுரைக்காய் – பாதியளவு
- பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள் – சிறிதளவு
1.சுரைக்காயை நன்றாக கழுவி தோலை சீவிக்கொள்ளவும்.
2.இதனை சிறு சிறு துண்டுகளாக்கி பிரஷர் குக்கரில் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
3.மிதமான தீயில் 2 விசில் வரை வேகவிட்டு ஆறிய பிறகு அதனை மசித்துக் கொள்ளுங்கள்.
4.இத்துடன் சீரகத்தூள் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கான சுரைக்காய் பருப்பு சூப்
• நறுக்கிய சுரைக்காய் – 1 கப்
• பாசிப்பருப்பு (ஊறவைத்து)- 2 டே.ஸ்பூன்
• சின்ன வெங்காயம் – 2
• பூண்டு – 1 பல்
• சீரகம் – 1/4 டீ.ஸ்பூன்
• நெய் – 1 டே .ஸ்பூன்
• தண்ணீர்-1 கப்
1.குக்கரில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
2.அதில் வெங்காயம்,பூண்டு மற்றும் சுரைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3.பாசிபருப்பு சேர்க்கவும்.
4.சில நிமிடங்களுக்கு வதக்கி ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
5.குக்கரை மிதமான தீயில் வைத்து 2 விசில் வரும் அளவிற்கு அடுப்பில் வைக்கவும்.
6.நன்றாக மசிக்கவும்.
7.தேவைப்பட்டால் சூப் பதத்திற்கு வரும் அளவிற்கு சுடுதண்ணீர் ஊற்றவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு சுரைக்காய் கொடுக்கலாமா ?
சுரைக்காயினை ஆறாவது மாதத்தில் இருந்து தாராளமாக கொடுக்கலாம்.
சுரைக்காய் தினமும் கொடுக்கலாமா?
சுரைக்காய் சத்துள்ள காய் என்பதால் தினமும் கொடுக்கலாம்.
சுரைக்காய் அல்வா குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
இயற்கையான நாட்டுச்சர்க்கரை சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்காது. சுரைக்காயில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
சுரைக்காயில் வைட்டமின் பி ,சி சத்துக்கள் உள்ளன. இவை தவிர இரும்பு சத்து,தாது உப்பு,பாஸ்பரஸ்,புரதம்,கார்போஹைட்ரேட் போன்றவையும் நிறைந்துள்ளன.
குழந்தைகளுக்கான 3 வகையான சுரைக்காய் ரெசிபிகள்
Notes
- சுரைக்காய் துருவியது -1 கப்
- கோக்கனட் சுகர் -கால் கப்
- டிரை ஃப்ரூட் பவுடர்- 1 டே.ஸ்பூன்
- நெய்- 1 டே.ஸ்பூன்
- ஏலக்காய்தூள்- இம்மியளவு
- பால் -முக்கால் கப்
- கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
- சுரைக்காயை அதில் போடவும்.
- 8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.
- பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடாகவும்.
- டிரை ஃப்ரூட் பவுடர், கோக்கனட் சுகர் ,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
- அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
- குழந்தைகளுக்கான சுவையான சுரைக்காய் அல்வா ரெடி.
- சுரைக்காய் - பாதியளவு
- பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள் - சிறிதளவு
Leave a Reply