Suga prasavam tips: பெண்ணுக்குள் தாய்மை வைத்து பெண்ணினத்தை சிறப்பாக்கியதால் பிரசவம் மறுபிறப்பென்று தொன்று தொட்டு கூறப்படுகின்றது.ஒன்பது மாத தவமிருந்து ஒவ்வொரு வலிகளையும் தாண்டி ஒரு உயிருக்கு உயிர் கொடுப்பதால் கடவுளுக்கும் மேலாக கருதப்படுகிறாள் தாய்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தன் குடும்பத்தினரின் ஆதரவோடும், மன வலிமையோடு கூடிய ஆரோக்கியத்துடன் நம் பாட்டி மற்றும் அம்மாக்கள் பெரும்பாலும் சுகப்பிரசவத்தினை மேற்கொண்டனர்.ஆனால் இன்று சுகப்பிரசவம் என்றாலே விரல் விட்டும் எண்ணும் அளவிற்கு குதிரை கொம்பாகிவிட்டது.
மருத்துவ காரணங்கள் அல்லாமல் வலிகளை தாங்க முடியாமலும் சிசேரியனை நோக்கி செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.ஆனால் ஆரோக்கியமான உடல்வலிமையோடு மனவலிமையும் கை கூடினால் சுகப்பிரசவம் எளிதான ஒன்று.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ உங்களுக்கான டிப்ஸ்.
Sugaprasavam tips:
Sugaprasavam tips:
மனஅழுத்தம்
பொதுவாக கர்ப்பகாலத்தின் பொழுது பிரசவத்தினை பற்றிய பல்வேறு சிந்தனைகள் மற்றும் பயம் வரக்கூடும்.இதனால் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம்.ஆனால் இந்த மனஅழுத்தம் பிரசவத்திற்கு முதல் எதிரி.பிரசவம் எனக்கு எளிதில் நிகழும் என்ற கருத்தை மட்டுமே மனதில் வைத்து கொண்டு அந்த காலகட்டத்தை சந்தோசமாக அனுபவியுங்கள்.
எளிய உடற்பயிற்சி
கர்ப்ப காலத்தின் பொழுது மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகள் தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவாக்குகின்றன.மேலும் பிறப்புறுப்பையும் இளக்கமாக்கி சுகபிரசவம் எளிதாக நடைபெற உதவுகின்றது. ஆனால் இத்தைகைய உடற்பயிற்சிகள் முறையாக நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிலநேரம் ஆபத்தாய் முடியக்கூடும்.
உடல் எடை கட்டுப்பாடு
எளிதான சுகப்பிரசவத்திற்கு தாயின் உடல் எடையும் வயிற்றில் உள்ள குழந்தையின் எடையும் குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது அவசியம்.கர்ப்ப காலத்தின் பொழுது தாய்மார்கள் அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பிரசவத்தின்போது அதிக எடையில் சிசு வளர்ந்திருந்தால், பிரசவ பாதையில் வெளிவருவதில் அதிக சிரமம் உண்டாகும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு
சுவாச பயிற்சி
எளிய யோகா பறிச்சி மற்றும் சுவாச பயிற்சியின் மூலம் சுகப்பிரசவத்தினை எளிதாக மேற்கொள்ளலாம்.முக்கியமாக பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி, மனதை சாந்தப்படுத்துவதற்கு உதவும். மேலும், உடல் திசுக்களுக்குத் தேவையான பிராணவாயுவையும் தடையின்றி சேர்க்கும்.நிபுணர்களின் ஆலோசனையின் படி யோகா மற்றும் மூச்சு பயிற்சிகளை முறையாக மேற்கொண்டால் சுகப்பிரசவம் என்பது நிச்சயம்.
நடைப்பயிற்சி
சுக பிரசவத்தினை எளிதாக்கும் முக்கியமான கருவிகளில் ஒன்று நடை பயிற்சி.பிரசவத்தின் கடைசி நாள் வரை நடை பயிற்சியினை தாராளமாக மேற்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.கர்ப்பமாக இருக்கும் பொழுது எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்கு சுகப்பிரசவம் என்பது கடினமான ஒன்றே.
நேர்மறை எண்ணங்கள்
கர்ப்பகாலத்தின் பொழுது நாம் பேசும் விஷயங்கள் மற்றும் நம்மை சுற்றி நடக்கும் அனைத்து விசயங்களிலும் நேர்மறை எண்ணங்களே நிறைந்திருத்தல் வேண்டும்.நம்மை சுற்றி உள்ளர்வர்கள் பேசும் எதிர்மறையான விஷயங்களை மனதிற்குள் எடுத்து கொள்ள கூடாது.நல்ல புத்தகங்கள் படிப்பது மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும்.
நிறைய தண்ணீர் குடிங்க
தண்ணீர் அதிகம் அருந்துவது தாய்க்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம் தரும்.அதுமட்டுமல்லாமல் தண்ணீர் குடத்தில் நீர் வற்றாமல் இருக்க உதவும்.
சுடுநீர் வைத்தியம்
நம் முன்னோர்கள் கடைபிடித்த வைத்தியம் இது.பிரசவகாலம் நெருங்கும் பொழுது வெது வெதுப்பான தண்ணீரால் வயிறு மற்றும் பிறப்புறுப்புகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.இல்லையெனில் சூடான தண்ணீரை ஒரு தொட்டியில் நிரப்பி, அதனுள் எவ்வுளவு நேரம் செலவளிக்க இயலுமோ, அவ்வுளவு நேரம் செலவிடுங்கள்.
என்ன தோழிகளே ? பிரசவத்தை தைரியமாக எதிர்கொள்ள தயாராகிவிட்டீர்கள்தானே.
இதையும் படிங்க: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்கவேண்டியவை…
Leave a Reply