Sunscreen for Babies in summer: கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பே சூரியன் தனது உக்கிரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. காலையில் பத்து மணிக்கு மேல் வெளியில் சென்றாலே சுட்டெரிக்கும் வெயில் மண்டையைப் பிளக்கிறது. பெரியவர்களுக்கே இப்படியென்றால் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் வெயிலில் விளையாடி திரிவதால் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது.மேலும் சூட்டின் காரணமாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே வெயில் காலத்தில் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது நம் கடமை. எனவே வெயில் காலத்தில் குழந்தைகளை எப்படி எல்லாம் பாதுகாப்பாக வைத்து கொள்ளவது என்பதை காணலாம்.
Sunscreen for Babies in summer

Sunscreen for Babies in summer
குழந்தைகள்
6 மாதத்திற்கு கீழே உள்ள குழந்தைகளை நேரடியாக சூரிய வெளிச்சம் படும்படி வெளியில் தூக்கிச் செல்லக்கூடாது. அப்படியும் அவசரமாக தூக்கி செல்ல நேரிட்டால் குழந்தைகளை நன்றாக காட்டன் துணியைக் கொண்டு போர்த்தி கொள்ளுங்கள். 6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
குழந்தைகளுக்கான சன் ஸ்க்ரீனை தேர்ந்தெடுப்பது எப்படி?
குழந்தைகளுக்கான சன் ஸ்க்ரீனை தேர்ந்தெடுப்பது எப்படி? நீங்கள் குழந்தைகளுக்காக உபயோகிக்கும் சன் ஸ்கிரீனில் ஜின்க் ஆக்சைடு அல்லது டைட்டானியம் டை ஆக்சைடு டன் SPF அளவு 30 இருக்குமாறு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.மேலும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க பிரத்யேக க்ரீம்கள் உள்ளன.அவற்றினை உபயோகிப்பது சிறந்தது.
சன் ஸ்க்ரீனை குழந்தைகளுக்கு பூசுவது எப்படி?
சன் ஸ்க்ரீனை வெளியில் செல்வதற்கு முன்னால் குழந்தைகளுக்கு முகத்தில் பூசி விட வேண்டும்.வெயிலில் செல்வதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு பூச வேண்டும்.நீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் என்றால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பூசவேண்டும்.அப்பொழுது நீரினால் பாதிக்கப்படாத சன் ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கு வெள்ளரிக்காய் கொடுக்கலாமா?
Summer Care for Babies in Tamil:
உடைகள்
வெயில் காலத்தில் லேசான பருத்தி உடைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.வெள்ளை,சிவப்பு,பச்சை மற்றும் நீல நிற ஆடைகள் சூரிய ஒளியினை கிரகிக்காது என்பதால் இந்த நிற ஆடைகளை உடுத்தலாம்.
சிறுவர்கள்
சிறுவர்கள் வெளியில் செல்கின்றார்கள் என்றால் தொப்பி மற்றும் சன் கிளாஸ் ஆகியவை அணிவிக்கலாம். குழந்தைகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் விளையாட அனுப்பாமல் இருப்பது சிறந்தது. விளையாட வேண்டும் என்றால் மாலை 4 மணிக்கு மேல் விளையாட செய்யலாம்.
உணவுகள்
குழந்தைகளுக்கு பிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். தண்ணீர் சத்து அதிகமுள்ள பழங்களான தர்பூசணி,வெள்ளரிக்காய் ஆகியவற்றை அடிக்கடி கொடுக்க வேண்டும்.
நீர்ச்சத்து
குழந்தைகள் வெயிலில் விளையாடும்போது வியர்வை மூலம் அதிகப்படியான நீர் சத்துக்கள் வெளியேற வாய்ப்புள்ளது.மேலும் குழந்தைகள் விளையாட்டு போக்கின் காரணமாக தண்ணீர் குடிக்க மறந்து விடுவர். எனவே நாம் அடிக்கடி குழந்தைகளுக்கு தண்ணீர் அருந்த கொடுக்க வேண்டும். வெயில் காலத்தில் இளநீர் அதிகம் அருந்த கொடுக்கலாம்.
வேர்க்குரு
குழந்தைகளுக்கு அதிகப்படியாக வியர்வை வெளியேறுவதன் காரணமாக வேர்க்குரு ஏற்பட வாய்ப்பு உள்ளது.குழந்தைகளுக்கு கழுத்து,நெற்றி,முதுகு போன்ற பகுதிகளில் வியர்குரு வர வாய்ப்புண்டு. எனவே குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டும்.மேலும் வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை கொடுக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி கேலமைன் லோஷன் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
இதையும் படிங்க: இன்ஸ்டன்ட் கம்பு பாசிப்பருப்பு பவுடர்
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Sunscreen for Babies in summer
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாமா?
ஆறு மாதத்திற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நேரடியாக சூரிய ஒளி மேலே படும்படி வெளியில் தூக்கிச் செல்லக்கூடாது. ஆறு மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளை வெளியே கொண்டு செல்ல நேரிட்டால் சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
குழந்தைகளுக்கு எந்த வகையான சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்?குழந்தைகளுக்காக உபயோகிக்கும் சன் ஸ்கிரீனில் ஜின்க் ஆக்சைடு அல்லது டைட்டானியம் டை ஆக்சைடு டன் SPF அளவு 30 இருக்குமாறு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
சன் ஸ்கிரீன் குழந்தைகளுக்கு எப்படி உபயோகிப்பது?வெயிலில் செல்வதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு பூச வேண்டும்.நீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் என்றால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பூசவேண்டும்.
Leave a Reply