Sugarcane juice in Tamil: வெயில் காலம் என்றாலே நம் ஊர்களில் கரும்பு ஜூஸ், ஃப்ரூட் ஜூஸ்,இளநீர் கடைகள் என தெருவெங்கிலும் கடைகள் நிறைந்திருக்கும். அதிலும் கரும்பு ஜூஸ் என்றால் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கொளுத்தும் கோடை வெயிலில் கரும்பு ஜூசினை வாங்கி அருந்தும் பொழுது உடம்பிற்கு எனர்ஜி கிடைத்தது போன்ற உணர்வினை தரும். சிறு குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரைக்கும் கடை தெருக்களில் விற்கும் கரும்பு ஜூசனை வெளியில் செல்லும் பொழுது ஆவலாக வாங்கி பருகுவோம்.
செயற்கையான குளிர்பானங்களை விட, இயற்கையாக கிடைக்கும் பானங்கள் சிறந்தது என்பதால் மக்களிடம் பெருகிவரும் விழிப்புணர்ச்சியின் காரணமாக குழந்தைகளுக்கும் இப்பொழுதெல்லாம் இயற்கையான பொருட்களை பெற்றோர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அந்த வகையில் கரும்புச்சாற்றினை குழந்தைகளுக்கு தரலாமா? எந்த மாதத்தில் இருந்து கொடுக்கலாம்? என்ற பல கேள்விகள் உங்களிடமிருந்து வருகின்றன. அவற்றுக்கு எல்லாம் தெளிவான விளக்கத்தை காணலாம்.
Sugarcane juice in Tamil
Sugarcane juice in Tamil:
கரும்பு ஜூசினை பற்றிய விளக்கத்தை பார்ப்பதற்கு முன்னால் கரும்பு ஜூஸ் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
- இயற்கையாகவே கரும்புச்சாற்றில் தண்ணீர் அதிக அளவு கலந்திருப்பதால் கோடைகாலங்களில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்
- கரும்புச்சாற்றினை பருகும் பொழுது உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கின்றது.கோடை காலங்களில் உடல் அசதியாக இருக்கும் பொழுது கரும்பு சாற்றினை பருகினால் உடனடி ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.
- இதில் இயற்கையாகவே கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளதால் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றது.
- ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளதால் செல்கள் சிதைவடையாமல் பார்த்துக் கொள்ளும்.
- கரும்புச்சாறு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- கரும்புச்சாற்றில் இயற்கையாகவே என்சைம் அதிகமாக இருப்பதால் உணவினை எளிதில் செரிமானமடைய செய்கின்றது.
- இதில் பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவை அதிகமாக இருப்பதால் இயற்கையான எலக்ட்ரோலைட்டுகளாக செயல்படுகின்றது. எனவே உடலின் நீர்சத்தினை சரிசம விகிதத்தில் வைக்க துணை புரிகின்றது.
இதில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. இதில் இயற்கையாகவே சக்கரை அதிகமாக உள்ளதால் குழந்தைகளின் பற்களுக்கு சேதம் விளைவிக்க கூடும்.
எனவே சொத்தைப்பல் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது பல்லை விளக்கச் சொல்ல வேண்டும்.
கரும்புச்சாறு கைகளால் மெஷினில் இருந்து பிழியப்படுவதால் அதில் பாக்டீரியா போன்றவை காணப்பட வாய்ப்பு உண்டு. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை எளிதில் கிருமிகள் பாதிக்கலாம்.
கரும்பு ஜூசினை குழந்தைகளுக்கு எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
Sugarcane juice in Tamil:
ஒரு வயதிற்கு கீழ் எங்களுக்கு கரும்பு ஜூஸ் கொடுக்கக் கூடாது .அதில் உள்ள அதிகப்படியான சக்கரையை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு குழந்தைகளின் உடல் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே குழந்தைகள் ஒரு வயதினை எட்டும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
முதலில் குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது தண்ணீரில் கலந்து சிறிது கொடுத்துப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படவில்லை என்றால் படிப்படியாக அளவினை உயர்த்தலாம். மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது கரும்புச்சாற்றினை கீழ்க்கண்டவாறு வீட்டிலேயே செய்து கொடுப்பது சிறந்தது.
Sugarcane juice in Tamil:
- கரும்பு -2-3
- குளிர்ந்த தண்ணீர்- ஒரு கப்
- தேன்- ஒரு டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை- அரைப்பழம்
- ஐஸ் கட்டிகள்
- புதினா இலைகள்- மேலே தூவ (தேவைப்பட்டால்)
செய்முறை
- கரும்பினை தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக மிக்ஸியில் போடும் அளவிற்கு வெட்டி கொள்ளவும்.
- மிக்ஸியில் கரும்பு துண்டுகளை போட்டு சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- வடிகட்டியில் வடிகட்டி கரும்புச்சாற்றினை மட்டும் தனியாக பிரிக்கவும்.
- பிரித்து வைத்த ஜூஸை மிக்ஸி ஜாரில் ஊற்றி என்னுடன் குளிர்ந்த தண்ணீர், தேன் மற்றும் லெமன் ஜூஸ் சேர்க்கவும்
- சிறிதளவு ஐஸ் கட்டிகளையும் சேர்த்து ஒரு அடி அடிக்கவும்.
- தேவைப்பட்டால் சுவைக்கு ஏற்ப இன்னும் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளலாம்.
- புதினா இலைகளை மேலே தூவி பிரஷான ஜூஸினை சிறுவர்களுக்கு கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Sugarcane juice in Tamil:
FAQ: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கரும்புச்சாற்றினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
பொதுவாக ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கரும்புச்சாறு கொடுக்கக் கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் உள்ள அளவுக்கு அதிகமான சர்க்கரை தான் அதற்கு காரணம்.
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா?
ஒரு வயதிற்கும் கீழே உள்ள குழந்தைகளுக்கு கரும்பு ஜூசினை கிரகித்துக் கொள்ளும் அளவிற்கு செரிமான மண்டலம் வலுப்பட்டு இருக்காது. எனவே, நீங்கள் கரும்புச் சாற்றினை கொடுக்கும் பொழுது அதில் உள்ள சர்க்கரையை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு குழந்தையின் உடல் பழகி இருக்காது.
கரும்பு சாற்றினை கொடுக்கக் கூடாது என்றால் வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வேறு என்ன கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற தொந்தரவு இல்லை என்றால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் இளநீர் கொடுக்கலாம். அதைத் தவிர பழச்சாற்றினை சக்கரை கலக்காமல் கொடுக்கலாம்.
Leave a Reply