Vellarikkai for babies in Tamil: வெயில் காலம் வந்து விட்டால் உடல் சூட்டினை தணிப்பதற்கு என்னென்ன உணவுகள் உண்ணலாம் என பார்த்து பார்த்து உட்கொள்ள ஆரம்பிப்போம். உடல் சூட்டினை தணிப்பதற்கு நாம் பழங்கள்,இளநீர் பழச்சாறு போன்றவற்றை உட்கொண்டு வந்தாலும் தொன்றுதொட்டு நாம் உட்கொண்டு வரும் எளிமையான ஒன்று என்றால் அது வெள்ளரிக்காய் தான். கோடை காலங்களில் பேருந்தில், ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால் வெள்ளரிக்காயை வாங்கி சாப்பிட்ட ஞாபகம் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் வெள்ளரிக்காயை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற சந்தேகம் நாம் அனைவருக்கும் உண்டு.அதற்கான விளக்கத்தை பார்ப்பதற்கு முன்பு வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்களை பார்க்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

Vellarikkai for babies in Tamil:
குழந்தைகளுக்கு வெள்ளரிக்காய் கொடுக்கலாமா?
வெள்ளரிக்காயானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. வெள்ளரிகள் சூடான தட்பவெப்பநிலையில் வளரும் காயாகும். இது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் கிடைக்கிறது. தற்பொழுது வெள்ளரிகள் உலகம் முழுவதும் பயிரிடப்படுகின்றன.மேலும், வெள்ளரிகள் 9 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலும், 14 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் இருந்தன என்பதற்கான சான்றுகள் உள்ளன. ரோமானிய பேரரசர் திபெரியஸ் தான் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் வெள்ளரிக்காய் வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.
நாடு முழுவதும் பல்வேறு வகையான வெள்ளரிக்காய்கள் காணப்படுகின்றன.வெள்ளரிகள் 96% நீரினை கொண்டிருந்தாலும் இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் பி, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
வெள்ளரிக்காயின் நன்மைகள்:
- மலச்சிக்கலை நீக்குகிறது
- நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க வல்லது.
- எடை இழப்புக்கு உதவுகிறது.
- உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கின்றது.
- பளிச்சிடும் சருமத்தினை தருகின்றது.
- குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
- உடல் வெப்பத்தை குறைக்கிறது.
- இதயத்தினை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.
சரி இப்பொழுது குழந்தைகள் வெள்ளரிக்காயினை உண்ணலாமா ஏற்ற கேள்விக்கு விடை காண்போம்.வெள்ளரிகள் குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது. மலச்சிக்கலை போக்குவதோடல்லாமல், குழந்தையின் செரிமான அமைப்பு சீராக இயங்க தேவையான ஃபைபர் மற்றும் நீர்சத்தினை தருகின்றது.
குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வரை பிரத்தியேகமான தாய்ப்பால் மட்டும் கொடுப்பதை WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது.எனவே வெள்ளரிகள் ஆறு மாதத்திற்கு பிறகு அறிமுகப்படுத்தப்படலாம். இருப்பினும் வெள்ளரிக்காய்கள் முதல் உணவாக கொடுப்பதற்கு ஏற்றதல்ல.ஏனென்றால் வெள்ளரிகள் கக்கூர்பிடாசின் எனப்படும் ஒரு கலவையைக் கொண்டிருக்கின்றன, இவை இளம் குழந்தைகளுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கலாம். இதன் காரணமாக, வெள்ளரிக்காய்களை 8 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பது சிறந்தது.
குழந்தைகளுக்கு வெள்ளரிகளை முதலில் அறிமுகப்படுத்தும்பொழுது ஆவியில் வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.முதலில் சிறிய அளவு சதா கொடுத்து பின்பு படிப்படியாக அதிகரிக்கலாம்.ஒரு வயதிற்கு மேல் வெள்ளரிக்காயினை சமைக்காமல் பச்சையாக சாப்பிட கொடுக்கலாம்.
வெள்ளரி சாப்பிடும்பொழுது ஒவ்வாமை ஏற்படுவது மிகவும் அரிதானது என்றாலும் இதில் சாலிசிலேட் இருப்பதால், ராக்வீட் ஒவ்வாமை கொண்ட குழந்தைகளுக்கு சில நேரம் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு படை நோய், முகம் மற்றும் வாயில் வீக்கம், லேசான தலைவலி, மூக்கு ஒழுகுதல், தலைச்சுற்றல், கண்களில் அரிப்பு,வயிற்று வலி, சுவாச சிரமம், குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகளைக் காட்டினால், அவர் உடனே மருத்துவரிடம் அழைத்துசெல்லவேண்டும்.
Vellarikkai for babies in Tamil:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply