Sweet Amla Recipe: இந்த கோடை காலத்தில் குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிப்பது ஒருபுறம் கடினம் என்றால் அதைவிட கடினம் அவர்களுக்கு நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவு எப்படி தருவது என்பதே.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஏனென்றால், வெயிலுக்கு இதமாக குழந்தைகள் பொதுவாக எல்லோர் வீட்டிலும் ஐஸ்கிரீம் மட்டுமே கேட்டு அடம்பிடிப்பதுண்டு.
ஐஸ்கிரீம் உண்மையிலேயே உடல் சூட்டை தணிக்காது. அதற்கு மாற்றாக நுங்கு, இளநீர் மற்றும் தர்பூசணி இவற்றை கொடுத்தால் சிறந்தது என்பதை நம் தாய்மார்களும் இப்பொழுது உணர ஆரம்பித்து விட்டார்கள். அதனால்தான் பலரும் ஐஸ்கிரீமை கூட வீட்டிலேயே செய்து தருவதுண்டு.
ஆனால் நம் குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாக அதே நேரம் ஆரோக்கியமாக ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் ஒரு நல்ல உணவினை கொடுத்த திருப்தி நமக்கு ஏற்படும் அல்லவா! அதனால்தான் உங்களுக்காக நான் தேர்ந்தெடுத்து கொடுக்கும் ஒவ்வொரு ரெசிபியும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும்.
அதேநேரம் குழந்தைகளும் விரும்பி உண்ண வேண்டும் அல்லவா. எனவேதான் அவர்களுக்கு ஏற்றார் போல் எப்படி செய்து கொடுப்பது என்பதை தேடித்தேடி நாங்கள் உங்களுக்கு ரெசிபியாவது கொடுக்கின்றோம்
அப்படி என்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி சற்றே வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை நெல்லி. பொதுவாக நெல்லிக்காய் என்பது நம்ம ஊர்களில் கிடைக்கக்கூடிய கனியாகும். ஆனால் இது புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடன் இருப்பதால் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி உண்ண மாட்டார்கள்.
அதை உண்ணும் பொழுது ஒரு மாதிரி பற்கள் கூசும் என்பதால் பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. ஆனால் அதையே குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பி உண்ணும் வண்ணம் இனிப்பு சுவையுடன் ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் உண்பார்கள்.
இதில் சேர்க்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் எளிதில் நம் ஊர்களில் கிடைக்கும் என்பதால் எளிதாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி தான் சர்க்கரை நெல்லி.
Sweet Amla Recipe
Sweet Amla Recipe
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் நெல்லிக்காயில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- நெல்லிக்காயில் முக்கியமாக காணப்படும் சத்து வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் குழந்தைகளுக்கு எவ்வித நோயும் வராமல் தடுக்கக் கூடிய ரெசிபி இந்த சர்க்கரை நெல்லி.
- நெல்லிக்காயில் உள்ள வேதிப்பொருட்கள் குழந்தைகளுக்கு உணவினை எளிதில் செரிமானமடைய உதவுகின்றது.
- நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது. எனவே குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை வளர்க்கும் தன்மை உடையது.
- மேலும் நெல்லிக்காயில் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன.
- நெல்லிக்காயில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளதால் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்க கூடியது.
- நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. எனவே இதயம் சார்ந்த நிலையில் வராமல் தடுக்க கூடியது.
- நெல்லிக்காயில் இயற்கையாகவே காணப்படும் சர்க்கரை உடலுக்கு எனர்ஜி அளிக்கக் கூடியது.
- நெல்லிக்காயில் உள்ள வைட்டமின்கள் கூதல் வளர்ச்சி மற்றும் சரும மினுமினுப்பிற்கு உதவுகின்றது.
எனவே குழந்தைகளுக்கு இந்த சக்கரை நெல்லிக்காய் கொடுப்பது எல்லா வகையிலும் நன்மை அளிக்கக் கூடியதாகும்.
Sweet Amla Recipe
- நெல்லிக்காய்- 500 கிராம்
- சர்க்கரை- ஒரு கப் (தேவைக்கு ஏற்றார் போல் சேர்த்துக் கொள்ளலாம்)
- ஏலக்காய் தூள்- ஒரு டீஸ்பூன்
- லவங்கத்தூள்- அரை டீஸ்பூன்
- துருவிய ஜாதிக்காய்- கால் டீஸ்பூன்
- தண்ணீர் -தேவையான அளவு
Sweet Amla Recipe
செய்முறை
- நெல்லிக்காயினை நன்றாக தண்ணீரில் கழுவி ஒரு டவலால் துடைத்து எடுக்கவும்.
- கத்தியை வைத்து நெல்லிக்காயை அதன் வரிகள் இருக்கும் பக்கத்தில் நீள வாக்கில் கீறி விடவும்.
- பெரிய பாத்திரத்தில் நெல்லிக்காய் முழுக்கும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- நெல்லிக்காய் இணை அதில் போட்டு ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். நெல்லிக்காய் அளவிற்கு வைத்தால் போதுமானது. மிகவும் குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- தண்ணீரை வடிகட்டி நெல்லிக்காயை ஆறவிடவும்.
- நெல்லிக்காய் ஆறியதும் நமக்கு விருப்பமான வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்சும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும்.
- ஏலக்காய் தூள், லவங்கத்தூள் துருவிய ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்க்கவும்.
- நறுக்கி வைத்த நெல்லிக்காய் இணை போட்டு நெல்லிக்காய் சக்கரைப்பாகில் போட வேண்டும்.
- ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு சர்க்கரை பாகு நன்றாக நெல்லிக்காயில் படும் அளவிற்கு சூடாக்க வேண்டும்.
- காற்று போகாத டப்பாவில் இதனை அடைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் இந்த சர்க்கரை நெல்லியை கொடுத்தால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். அது மட்டுமல்லாமல் வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Sweet Amla Recipe
Sweet Amla Recipe
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சர்க்கரை நெல்லிக்காயை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
சர்க்கரை நெல்லிக்காயில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
எத்தனை நாள் வரை இந்த சக்கரை நெல்லிக்காயை வைத்திருக்கலாம்?
காற்று போகாத டப்பாவில் அடைத்து பத்திரமாக ஃப்ரிட்ஜில் வைத்தால் பல வாரங்கள் வரை கெடாமல் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சர்க்கரை நெல்லிக்காயை எப்பொழுது சாப்பிடலாம்?
குழந்தைகளுக்கு சிற்றுண்டி கொடுப்பது போன்று இதனை எப்பொழுது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
சத்தான சக்கரை நெல்லி
Instructions
- தேவையானவை
- நெல்லிக்காய்- 500 கிராம்
- சக்கரை- ஒரு கப் (தேவைக்கு ஏற்றார் போல் சேர்த்துக் கொள்ளலாம்)
- ஏலக்காய் தூள்- ஒரு டீஸ்பூன்
- லவங்கத்தூள்- அரை டீஸ்பூன்
- துருவிய ஜாதிக்காய்- கால் டீஸ்பூன்
- தண்ணீர் தேவையான அளவு
Notes
- நெல்லிக்காயினை நன்றாக தண்ணீரில் கழுவி ஒரு டவலால் துடைத்து எடுக்கவும்.
- கத்தியை வைத்து நெல்லிக்காயை அதன் வரிகள் இருக்கும் பக்கத்தில் நீள வாக்கில் கீறி விடவும்.
- பெரிய பாத்திரத்தில் நெல்லிக்காய் முழுக்கும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- நெல்லிக்காய் இணை அதில் போட்டு ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். நெல்லிக்காய் அளவிற்கு வைத்தால் போதுமானது. மிகவும் குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- தண்ணீரை வடிகட்டி நெல்லிக்காயை ஆறவிடவும்.
- நெல்லிக்காய் ஆறியதும் நமக்கு விருப்பமான வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சக்கரை பாகு காய்ச்சும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும்.
- ஏலக்காய் தூள், லவங்கத்தூள் துருவிய ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்க்கவும்.
- நறுக்கி வைத்த நெல்லிக்காய் இணை போட்டு நெல்லிக்காய் சக்கரைப்பாகில் போட வேண்டும்.
- ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு சக்கரை பாகு நன்றாக நெல்லிக்காயில் படும் அளவிற்கு சூடாக்க வேண்டும்.
- காற்று போகாத டப்பாவில் இதனை அடைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Leave a Reply