sweet potato rice: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதான உணவு என்பது அரசி சாதம் தான். எவ்வளவுதான் நாவிற்கு ருசியாக பல வகையான உணவுகளை நாம் சாப்பிட்டாலும், நம்மூர் சாதத்தை ஒருவாய் பிசைந்து சாப்பிடும் பொழுது தான் மனது திருப்திப்படும். குழந்தைகளுக்கும் நாம் முதல்முறையாக உணவு ஊட்டும் பொழுது, சாதத்தை நன்கு குழைவாக வேக வைத்து மசித்து கொடுப்பதுதான் வழக்கம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற பல சத்தான சாத வகைகளை நாம் இதுவரை பார்த்திருப்போம். பருப்பு சாதம், காய்கறி சாதம், அரிசி சாதம், பால் சாதம் என பல வகையான சாத வகைகளையும் நாம் இதுவரை பார்த்திருப்போம். இப்பொழுது நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது சற்றே வித்தியாசமான சர்க்கரைவள்ளி கிழங்கு சாதம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு என்பது குறிப்பிட சீசனுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான கிழங்காகும். நன்றாக வேக வைத்து சாப்பிடுபொழுதே இதன் ருசி தனியாக இருக்கும். எண்ணற்ற சத்துக்கள் அடங்கிய இந்த சர்க்கரைவள்ளி கிழங்கினை குழந்தைகளுக்கும் நாம் தாராளமாக கொடுக்கலாம். அப்படியே கொடுப்பதை காட்டிலும், இப்படி சாதமாக செய்து கொடுத்துப் பாருங்கள் குழந்தைகள் கட்டாயமாக சாதத்தினை விரும்பி உண்பார்கள்.
sweet potato rice:
சர்க்கரை வள்ளி கிழங்கின் நன்மைகள்
- சர்க்கரை வள்ளி கிழங்கு பலவகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை உள்ளடக்கியது. குறிப்பாகசொல்ல போனால் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் மாங்கனிஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
- வைட்டமின் ஏ என்பது குழந்தைகளுக்கு நல்ல கண் பார்வையை கொடுக்கக் கூடியது மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
- இதில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால், குழந்தைகளுக்கு மலச்சிக்கல் தொந்தரவு ஏற்படாது. உணவினை எளிதாக செரிமானமடைய செய்கின்றது
- சர்க்கரைவள்ளி கிழங்கில் இயற்கையாகவே இனிப்புச் சத்து அதிகம் என்பதால். குழந்தைகள் இந்த சாதத்தினை சுவைத்து சாப்பிடுவார்கள்.
- குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய பல வகையான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன
- இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் அதிகம். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றக் கூடியது.
sweet potato rice
- அரிசி
- சர்க்கரை வள்ளி கிழங்கு
- ஏலக்காய் தூள்
- நாட்டு சக்கரை(ஒரு வயது குழந்தைகளுக்கு மேல் தேவைப்பட்டால்)
sweet potato rice:
செய்முறை
1.அரிசியை தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.
2.சர்க்கரைவள்ளி கிழங்கினை தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3.குக்கரில் அரிசி மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகிய இரண்டையும் ஒன்றாக மூன்று விசில் வரும் அளவிற்கு வேக விடவும்.
4.விசில் இறங்கியவுடன், சாதம் மற்றும் சக்கரை வள்ளி கிழங்கு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக மசிக்கவும்.
5.சுவைக்காக ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
6.ஒரு வயது குழந்தைகளுக்கு மேல் தேவைப்பட்டால் நாட்டு சக்கரை சேர்த்து கொடுத்தால் இன்னும் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு நன்றாக மசியவில்லை என்றால் மிக்ஸியில் அடித்துக் கொள்ளலாம் அல்லது கிழங்கினை துருவி சாதத்துடன் சேர்த்து வேக வைக்கலாம். இதுவரை, வீட்டில் வழக்கமாக செய்யும் சாதத்தை மட்டுமே சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு, இந்த சாதம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், இயற்கையாகவே இனிப்பு சுவையும் சேர்ந்து இருப்பதால் குழந்தைகளின் நாவிற்கு விருந்தளிக்கும் ரெசிபியாக இது இருக்கும். இதில் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் எந்த பண்புகளும் இல்லை என்பதால் தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு எத்தனை மாதத்தில் இருந்து சர்க்கரைவள்ளி கிழங்கு சாதம் கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு பொதுவாக ஆறு மாதத்திற்கு பிறகு நாம் திட உணவு கொடுப்பது வழக்கம். சர்க்கரவள்ளி கிழங்கு சாதத்தினை எட்டு மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். முதலில் சிறிதளவு கொடுத்து பார்த்த பின்பு, நன்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு குழந்தைகளுக்கு செரிமானம் ஆகுமா?
சக்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால், எளிதில் செரிமானம் ஆகும். அஜீரண கோளாறு ஏற்படும் என பயப்படத் தேவையில்லை.
சர்க்கரைவள்ளி கிழங்கு சாதம்
Ingredients
- அரிசி
- சர்க்கரைவள்ளி கிழங்கு
- ஏலக்காய்தூள்
- நாட்டுசக்கரை(ஒரு வயது குழந்தைகளுக்குமேல் தேவைப்பட்டால்)
Leave a Reply