Thandai recipe in tamil:
கோடை காலத்தில் வடஇந்தியாவில் பருகப்படும் பிரசித்தி பெற்ற பானங்களில் ஒன்று தண்டாய் ரெசிபி.நட்ஸ் மற்றும் மசாலா பொருட்களை பாலுடன் கலந்து உண்ணும் பொழுது உடலுக்கு புத்துணர்வாக இருக்கும்.ஹோலி மற்றும் மஹாசிவராத்திரி போன்ற விசேஷ நாட்கள் மட்டுமல்லாமல் கோடை காலம் முழுவதும் குளிர்ச்சிக்காகவும் இந்த பானம் விரும்பி பருகப்படுகிறது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை பருகலாம். தண்டாய் பானம் உடலினை குளிர்விப்பதோடல்லாமல் உணவினை நன்கு செரிமானம் ஆக செய்கிறது மற்றும் குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தினை கொடுக்கிறது.தண்டாய் பானத்தை தயாரிப்பது மிகவும் சுலபம். பாலை கொதிக்க வைத்து தயாரித்து வைத்த தண்டாய் பவுடரை சேர்த்து கலக்கினால் போதும். இனிப்பு சுவைக்காக கற்கண்டு அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் தண்டாய் ரெசிபி
தண்டாய் பவுடர் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- ¼ ஜாதிக்காய்
- 1-2 ஏலக்காய்
- 2 டே.ஸ்பூன் பெருஞ்சீரகம்
- 2-3 மிளகு
- 4-5 பாதாம்
- 1 டே.ஸ்பூன் உலர்ந்த ரோஜா இதழ்கள்.
Thandai recipe in tamil:
- 1 கப் பால்
- 1 டீ.ஸ்பூன் கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை
- 1/2 டீ.ஸ்பூன் தண்டாய் பவுடர்
தண்டாய் பவுடர் தயாரிக்கும் முறை
- வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் மிளகு,ஜாதிக்காய்,ஏலக்காய் மற்றும் பாதாம் ஆகியவற்றை நல்ல நறுமணம் வரும்வரை வறுக்கவும்.
- அதனுடன் பெருஞ்சீரகம் மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்து மேலும் 2-3 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- வறுத்த பொருட்களை ஆற விடவும்.
- கலவையை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.
- இப்பொழுது இந்த தண்டாய் பவுடரை காற்று புகாத டப்பாவில் அடைக்கவும்
தண்டாய் பானம் தயாரிக்கும் முறை
- பாலை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.
- பால் கொதித்தவுடன் 1 டீ.ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.
- சர்க்கரை கரையும் வரை கலவையை நன்றாக கலக்கவும்.
- கடைசியாக 1/2 டீ.ஸ்பூன் தண்டாய் பவுடரை சேர்க்கவும்.
- கலவையை நன்றாக கலக்கவும்.
- 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
- தண்டாயை வடிகட்டி வெதுவெதுப்பாக பரிமாறவும்.
இந்த தண்டாய் பவுடரை ஒரு மாதம் வரை வைத்து கொள்ளலாம்.குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது ஆர்கானிக் ரோஜா இதழ்களை உபயோகிப்பது நல்லது. ரோஜா இதழ்களின் நறுமணத்துடன் கூடிய நட்ஸ்களின் சுவை திரும்ப திரும்ப சுவைக்க தூண்டும்.
Leave a Reply