Thengai paal Rice Pudding recipe : ஸ்வீட்க்ளை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் நம்மில் மிகக்குறைவு.பண்டிகை நாட்களை சாக்காக வைத்து ருசிப்பது மட்டுமல்லாமல் இடையிலும் ருசிக்க தவறுவதில்லை.ஆனால் குழந்தைகள் இதில் விதி விலக்கு.ஏனென்றால் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பால் கலந்த ஸ்வீட்களை கொடுக்க கூடாது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
மேலும் குழந்தைகளுக்கு உணவில் சர்க்கரை,வெல்லம் போன்றவற்றை சேர்க்க கூடாது.அப்படியானால் குழந்தைகளுக்கு எதை கொடுப்பது? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றுமல்லவா! ஏனென்றால் குழந்தைகளுக்கு கொடுக்கமால் நாம் மட்டும் உண்ண தாயுள்ளம் விரும்பதல்லவா! கவலையை விடுங்கள் அதற்கான ரெசிபிதான் இந்த தேங்காய்ப்பால் ரைஸ் புட்டிங்.
இதில் கலந்துள்ள தேங்காப்பால் பசும்பாலுக்கு சிறந்த மாற்றாக அமையும்.குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்க்கக்கூடாது என்பதால் இதில் டிரை டேட்ஸ் பவுடர் கலந்துள்ளோம்.மேலும் மிக்ஸ்டு நட்ஸ் பவுடர் கலந்துள்ளதால் சத்துள்ளதாக இருக்கும்.குழந்தைகளும் விரும்பி உண்பர்.
Thengai paal Rice Pudding recipe:
தேவையானவை
- அரிசி (கழுவி ஊறவைத்தது) – 2 டே.ஸ்பூன்
- தேங்காய்ப்பால் (வீட்டில் தயாரித்தது) –1½ கப்
- மை லிட்டில் மொப்பெட்-டிரை டேட்ஸ் பவுடர்- 1 டீ.ஸ்பூன்
- மை லிட்டில் மொப்பெட்-மிக்ஸ்டு நட்ஸ் பவுடர் – 1/4 டீ.ஸ்பூன்
மை லிட்டில் மொப்பெட் டிரை டேட்ஸ் பவுடரை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
தேங்காய்ப்பால் ரைஸ் புட்டிங்:
செய்முறை
1. அரிசியுடன் ½ கப் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2.மிக்சி ஜாரில் ஏற்கனவே ஊறவைத்த 2 டே.ஸ்பூன் அரிசியை எடுத்து கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.
இதையும் படிங்க: குழந்தையின் வயதிற்கேற்ற எடையும் உயரமும்
3.அரைத்து வைத்த பேஸ்டை பானில் எடுத்து கொள்ளவும்.
4.வீட்டிலேயே தயாரித்த தேங்காய்ப்பாலை அதனுடன் சேர்க்கவும்.5-7 நிமிடங்களுக்கு கலவையை நன்றாக கட்டிகள் சேராமல் கிளறவும்.
5.டிரை டேட்ஸ் பவுடர் மற்றும் மிக்ஸ்டு நட்ஸ் பவுடரை புட்டிங்கில் சேர்த்து நன்று கலக்கவும்.
6. மேலும் 2-3 நிமிடங்களுக்கு சமைத்து அடுப்பை அணைக்கவும்.
7.புட்டிங்கை பவுலில் பரிமாறவும்.
வீட்டிலேயே தயாரித்த தேங்காய்ப்பாலை உபயோகிப்பதே சிறந்தது. 1 கப் தேங்காயை மிருதுவாகத் துருவி நன்றாக அரைத்து 2 கப் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைப் பிழியவும். அந்தத் தேங்காயை மறுபடியும் சுமார் 1 கப் நீர் விட்டு,நன்றாக அரைத்துப் பிழியவும்.நன்றாக வடிகட்டினால் தேங்காய்ப்பால் ரெடி.
தேங்காய்ப்பாலின் நன்மைகள்:
- தேங்காய்ப்பாலின் இரும்பு சத்துக்கள் அதிகம்.
- கால்சியம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் எலும்புகள் வலிமையடையும்.
- தோலில் பளபளப்பு தன்மையை அதிகரிக்கின்றது.
- உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கின்றது.
தேங்காய்ப்பால் மற்றும் நட்ஸ்களின் நறுமணம் கலந்த சுவையான ரெசிபியை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
மை லிட்டில் மொப்பெட் மிக்ஸ்டு நட்ஸ் பவுடரை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Leave a Reply