குழந்தைகளுக்கு திட உணவை கொடுக்கும் போது ஆச்சரியம் எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவிற்கு பயமும் நம்மிடம் இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதிலும் முதல் குழந்தையை பெற்றவர்களுக்கு உணவை கொடுப்பதற்கென சந்தைகளில் நிறையவே பொருட்கள் கிடைக்கிறது. உங்கள் குழப்பங்களை தவிர்த்து விடுங்கள்.
உங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் என்ன என்பதை கண்டறிந்து அதில் முக்கியமான பொருட்களை மட்டும் இங்கே தந்துள்ளோம்.
இந்த பொருட்களை ஆன்லைனில் கூட நீங்கள் வாங்க முடியும். அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமில்லாமல் நீங்கள் இங்கே கிளிக் செய்தால் அது உங்கள் வீட்டிற்கே வந்து சேரும்.
குழந்தைக்கு உணவு கொடுக்க பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களை பயன்படுத்தும் முன்னர் அது பிபிஏ ப்ரீ (BPA Free)ஆன பொருளா என்பதை உறுதி செய்த பிறகு வாங்குங்கள்.
இதில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் உங்கள் குழந்தையின் உணவுத் தயாரிப்பு மற்றும் உணவு ஊட்டும் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.
1. பிரஷர் குக்கர் :
சிறிய அளவிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரஷர் குக்கரை வாங்கிக் கொள்வது நல்லது. அலுமினியத்தை விட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர் வாங்குவது சிறந்தது. இதில் நீங்கள் குழந்தைக்கான சாதம், காய்கறிகள் மற்றும் பருப்பை வேக வைப்பது, குழந்தைகளுக்கான ஸ்பூன் உள்ளிட்ட சின்ன சின்ன பொருட்களை கழுவுவது போன்ற வேலைகளை செய்ய உகந்தது.
2. ஃபுட் புராசசர் :
குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கிடைக்கும் ஃபுட் புராசசர் செட்டை வாங்கி வைத்துக்
கொள்ளுங்கள். இதில் சல்லடை, மசிக்கும் உபகரணம், கிண்ணங்கள், கரண்டிகள், ஜூஸர், துருவும் கருவி உள்ளிட்ட எல்லா பொருட்களும் ஒன்றாகவே இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் குழந்தைக்கு உணவை கொடுப்பதற்கு முன்னதாக அந்த பொருட்களை எல்லாம் வெந்நீரை கொண்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
ஃபுட் புராசசர்களின் கலெக்ஷன் குறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
3. ஸ்டெரிலைசர் :
குழந்தைகளுக்கு உணவு சமைக்க மற்றும் ஊட்டுவதற்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் நன்றாக ஸ்டெரிலைஸ் செய்வது அவசியமான ஒன்று. இதற்காகவே சந்தைகளில் ஸ்டெரிலைசர்கள் கிடைக்கின்றன. இதனை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். அல்லது அந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னதாக வெந்நீரை கொண்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்…
ஸ்டெரிலைசர்கள் கலெக்ஷன் குறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..
ஸ்டெரிலைசர் கொண்டு பொருட்களை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்….
4. ப்ளெண்டர் அல்லது மிக்ஸி:
குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் போது அவசியமான பொருட்களில் இதுவும் ஒன்று.
குழந்தைகளுக்கென தனியாக ஒரு மிக்ஸி ஜாரை பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது.
காரணம் நாம் பயன்படுத்தும் மிக்ஸி ஜாரில் மசாலா பொருட்கள் போன்றவற்றை அரைத்து இருப்போம். அதிலேயே குழந்தைகளுக்கான உணவை அரைக்கும் போது அந்த பொருட்கள் குழந்தைகளின் உணவில் கலக்க வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கை தேவை…
5. உருளைக்கிழங்கை மசிக்கும் கருவி:
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வேகவைத்த உருளைக் கிழங்கை மசிப்பதற்கென தனியாக மேஷர் என்ற ஒரு கருவி உள்ளது. என்னுடைய தோழிகள் பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இது உபயோகமான ஒன்றாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
6. குழந்தைகளுக்கான உயரமான நாற்காலி:
குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் போது அவர்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இருப்பது தான் இந்த உயரமான நாற்காலி. இது குழந்தைகளின் முதுகுப் புறத்திற்கு நன்றாக சப்போர்ட் தரும் வகையில் இருக்கும். இதில் குழந்தைகளை உட்கார வைத்து அம்மாக்கள் உணவு கொடுக்கும் போது அவர்கள் எளிதாக சாப்பிட உதவியாக இருக்கும். மேலும் உணவு கொடுக்கும் போது அவர்கள் உடைகளில் உணவுகள் கொட்டுவது, உணவு கீழே சிந்தி வீணாவது குறையும்.
உங்கள் குழந்தைக்கு ஏற்ற உயரமான நாற்காலி எது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? உயரமான நாற்காலி குறித்த கலெக்ஷன்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு உணவை ஊட்டுவதற்கென தனியாக கிண்ணங்கள் மற்றும் ஸ்பூன் வகைகள் சந்தைகளில் கிடைக்கிறது. இதனை நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது நீங்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் வெள்ளிக்கிண்ணங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் கூரான முனை கொண்ட ஸ்பூன்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டுமென்மையான ஸ்பூன் வகைகளை பயன்படுத்துங்கள்.
இது தொடர்பான கலெக்ஷன்கள் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாங்கள் கொடுத்த தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.. இதில் உங்களுக்கு சந்தேகங்கள் எதுவும் இருந்தால் உடனே கமெண்ட்டில் கேளுங்கள். அதற்கு நாங்கள் உரிய நேரத்தில் விரைவாக பதில் அளிப்போம்.
உங்கள் மெயில் இன்பாக்ஸில் எங்கள் செய்திகள் வந்து சேர வேண்டுமானால் எங்கள்
நியூஸ்லெட்டர்க்கு ஸப்ஸ்க்ரைப் செய்யுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் உபயோகமான ஒன்றாக இருக்கும்.
உங்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்த தகவல்கள் தேவையெனில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்தை பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர், பின்ட்ரஸ்ட் ஆகியவற்றில் பின்தொடருங்கள்…
Leave a Reply