குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் 20 உணவுப் பொருட்கள்
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
1) பால் :
தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் குழந்தையின் ஒரு வயது வரை கொடுக்கவும். ஒரு வயதிற்கு பிறகு பசும்பாலை ஒரு நாளைக்கு 3 முறையும் தொடர்ந்து தாய்ப்பாலும் தரலாம்.
2) அதிக கலோரிகள் நிரம்பிய சத்தான உணவுகள் :
கெட்ட கொழுப்புகளை உருவாக்கி உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை விட, கலோரிகள் அதிகம் நிரம்பிய சத்தான உணவுகளை கொடுப்பது ஆரோக்யமானதும் கூட. ஐஸ்க்ரீம், சாக்லேட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவற்றை கொடுக்க வேண்டாம்.
3) வாழைப்பழம் :
குழந்தையின் 6 மாதத்தில் இருந்து வாழைப்பழத்தை தரலாம். ஏனெனில் குழந்தையின் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 உள்ளிட்ட ஏராளமான சத்துகள் வாழைப்பழத்தில் உள்ளது.
4) பீச் பழம் :
6 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு பீச் பழத்தை தரலாம். இந்த பழத்தில் நார்ச்சத்துகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு சத்துகள் நிரம்பியிருக்கிறது. இந்த பழத்தை 6 மாதத்தில் இருந்து கூழாகவும், ஒரு வருடத்திற்கு பிறகு ஸ்மூத்தி மற்றும் மில்க் ஷேக்காக மாற்றி தரலாம்…
5) பேரிக்காய் :
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் பிரதான இடம் பேரிக்காய்க்கு உண்டு. குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தேவையான இரும்பு சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற சத்துகள் எல்லாம் இந்த பழத்தில் அதிகம் காணப்படுகிறது.
6) பச்சைப்பட்டாணி :
பச்சைப்பட்டாணியை 6 மாதங்களுக்கு பிறகு நீங்கள் தரலாம். குழந்தைக்கு தரும் திட உணவுகளில் சத்துகள் அதிகம் நிரம்பியதாக இது இருக்கிறது. அதிகளவிலான நார்ச்சத்து, தயாமின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற எல்லா சத்துகளும் இதில் ஒருங்கே கிடைக்கிறது.
7) சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் சுவை மிகுந்த சத்தான கிழங்கு வகை இது. இதனை நீங்கள் 6வது மாதத்தில் இருந்து தரலாம்… இதில் குறைந்த அளவில் கொழுப்பும், அதிகளவிலான நார்ச்சத்தும், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியன இருக்கிறது.
8) இறைச்சி :
கோழி இறைச்சியை 8 மாதங்களுக்கு பிறகு நீங்கள் தரலாம். கோழி இறைச்சியில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் பி6,வைட்டமின் பி 12, தரமான கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளன. கோழிக்கறியை வேகவைத்தும், கோழிக்கறியை வேக வைத்து மசித்தும், சூப் வடிவிலும், சாதத்துடன் கலந்தும் தரலாம்.
9) நெய்:
உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் சிறந்த ஒன்றாக இருக்கிறது நெய். 7 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு கொடுக்கும் எல்லா உணவுகளிலும் ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்துக் கொள்ளலாம். முதலில் சிறிதளவு கொடுத்து அதன் பிறகே அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும்.
10) சீஸ் கட்டிகள் :
குழந்தையின் 8 மாதங்களுக்கு பிறகு சீஸ் கொடுக்கலாம். பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த சீஸில் பாஸ்பரஸ், கால்சியம், செலினியம் போன்ற சத்துகள் உள்ளன. இதனை சிறிய சிறிய துண்டுகளாக்கி குழந்தைகளுக்கு சாப்பிட தரலாம்.
11) உலர் பழங்கள் :
உலர் பழங்களான பாதாம், பிஸ்தா, அத்தி, முந்திரி ஆகிய பொருட்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதனை எல்லாம் தூள் செய்து அனைத்து விதமான உணவுகளிலும் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்..
12) கோதுமை :
முழு கோதுமையை பெரும்பாலானோர் கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை .ஆனால் அதில் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான நார்ச்சத்தும் கூடவே நல்ல கொழுப்புச்சத்தும் அதிகம் இருக்கிறது. கோதுமையை பாதியாக உடைத்து ரவை போல கிடைக்கும் சம்பா கோதுமை ரவையை பயன்படுத்துவதும் நல்லது.
13) ஓட்ஸ்:
குழந்தைகளின் உடல் எடையை அதிகரிகளுக்கும் உணவுகளில் ஓட்ஸூக்கு சிறப்பிடம் உண்டு. இதில் குறைவான அளவில் கொழுப்பு, மக்னீசியம், தயாமின், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் இருக்கின்றன. புரோட்டீன் சத்துகள் அதிகம் நிரம்பிய உணவு இது. இதனை ஓட்ஸ் கஞ்சி, கீர் போல தரலாம்.
14) பட்டர் ப்ரூட்:
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான நார்ச்சத்துகள் மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பு சத்துகளும் அதிகம் நிரம்பிய பழம் இது. இதனை 6 மாதங்களுக்கு பிறகு கொடுக்கலாம்.
15) கேழ்வரகு :
குழந்தைகளின் உடல் எடையை அதிகமாக்குவதோடு அதிகளவிலான சத்துகளை தரும் உணவாக இருக்கிறது கேழ்வரகு. இதில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துகள் அதிகம் உள்ளன. இதனை கஞ்சியாக செய்து கொடுக்கலாம். ஆப்பிளுடன் சேர்த்து கொடுத்தால் சுவையாக இருக்கும். வெறும் கேழ்வரகை விட முளைக்கட்டிய கேழ்வரகு தான் சிறந்தது.
16) சத்துமாவு :
வீட்டில் தயாரிக்கப்படும் சத்துமாவு குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற ஒன்று. இதில் பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படுவதால் சத்துகள் அதிகம் நிரம்பியது. இதில் சேர்க்கப்படும் பொருட்களையும் நீங்கள் முளைக்கட்டிய பிறகு வறுத்து அரைத்து பயன்படுத்தினால் பலன் அதிகம் கிடைக்கும்.
17) ஆலிவ் ஆயில் :
குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் உணவுகளை எல்லாம் ஆலிவ் எண்ணெயில் சமைப்பது சிறந்தது. காரணம் மற்ற எண்ணெய்களில் இருக்கும் சத்துகளை விட ஆலிவ் எண்ணெயில் உடல் நலத்துக்கு ஏற்ற கொழுப்பு சத்துகள் அதிகம்.
18) உருளைக்கிழங்கு
குழந்தைகளுக்கு திட உணவை அறிமுகப்படுத்தும் போது முதலில் கொடுக்க ஏற்றவை உருளைக்கிழங்கு. குழந்தைகள் இதனை சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மிருதுவாக இருப்பதுடன், எளிதான முறையில் மசிக்க கூடியது. இதில் தாதுச்சத்துகள், வைட்டமின் சத்துகள் உள்ளன. ஆனால் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம் நிரம்பிய காய் இது.
19) முட்டை :
குழந்தைகளின் 8 வது மாதத்திற்கு பிறகு முட்டையை தரலாம். முதலில் முட்டையின் மஞ்சள் கருவை தர வேண்டும். இதில் குழந்தைகளுக்கு அலர்ஜி எதுவும் ஏற்படுகிறதா என்பதை சோதனை செய்த பிறகு வெள்ளைக்கருவை தரலாம். முட்டையில் புரோட்டீன் சத்துகளும், உயர் கொழுப்பு சத்தும் இருக்கிறது.
20) சுத்தமான தேங்காய் எண்ணெய்:
குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கவும், எளிதில் ஜீரணிக்கவும் தேங்காய் எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. குழந்தைகளுக்கான சமையலில் இந்த எண்ணெயை சேர்த்துக் கொண்டால் நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்…
Leave a Reply